பாடம் : 29 உரை நிகழ்த்தும் போது இறைவனைப் புகழ்ந்தபின் அம்மா பஅத் (இறை வாழ்த்துக்குப் பின்…) என்று கூறுவது.
நபி (ஸல்) அவர்கள் (இவ்வாறு கூறியது) குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (குறிப்பு: காண்க பின்வரும் ஹதீஸ்-927)
அஸ்மா(ரலி) அறிவித்தார்.
மக்கள் (கிரகணத் தொழுகை) தொழுது கொண்டிருந்தபோது நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று மக்களுக்கு என்ன என்று அவர்களிடம் கேட்டேன். ஆயிஷா(ரலி) தம் தலையால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள். இது ஏதாவது அடையாளமா? என்று கேட்டேன். ‘ஆம்’ எனத் தலையால் சைகை செய்தார்கள்.
எனக்கு மயக்கம் ஏற்படும் அளவுக்குத் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் நன்கு நீட்டினார்கள். என் விலாப் புறத்தில் தண்ணீர் நிரம்பிய தோல்பை ஒன்றிருந்தது. அதைத் திறந்து (மயக்கம் நீங்க) என் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டேன். கிரகணம் நீங்கியபோது நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்தார்கள். பின்னர் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். பிறகு ‘அம்மாபஃது’ என்று கூறினார்கள்.
அன்ஸாரிப் பெண்களில் சிலர் கூச்சலிட்டனர். அவர்களை அமைதிப் படுத்துவதற்காக நான் சென்றேன். பின்னர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் என்ன உரையாற்றினார்கள் என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
‘என்னுடைய இந்த இடத்தில் சொர்க்கம், நரகம் உட்பட நான் இது வரை காணாத அனைத்தும் எனக்குக் காட்டப் பட்டன. மேலும் கப்ருகளில் தஜ்ஜாலின் குழப்பத்துக்கு நிகரான குழப்பத்துக்கு நீங்கள் உள்ளாவீர்கள். உங்களில் ஒருவரிடம் ‘இந்த மனிதரை நபி(ஸல்) அவர்களைப் பற்றி நீ என்ன அறிந்திருக்கிறாய்’ என்று (வானவர்களால்) கேட்கப்படும். அதற்கு நம்பிக்கையாளர் உறுதியிலிருந்தவர் ‘இவர்கள் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) ஆவார்கள். எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நேர்வழிகளையும் கொண்டு வந்தார்கள். நாங்கள் அவரின் அழைப்பை நம்பி ஏற்றோம்; அவரை நம்பிப் பின் பற்றினோம்’ எனக் கூறுவார். அவரிடம் ‘நல்லவராக உறங்குவீராக! நீர் (உலகில் இருந்த காலத்தில்) இவ்வாறு நம்பிக்கை கொண்டிருந்தீர் என்பதை நிச்சயமாக நாமறிவோம்’ எனக் கூறப்படும். ‘இம்மனிதரைப் பற்றி நீர் அறிந்திருந்தது என்ன’ என்று கேட்கப்படும்போது நயவஞ்சகன் சந்தேகத்திலிருந்தவன் ‘இவரைப் பற்றி எனக்குத் தெரியாது; மக்கள் ஏதோ சொன்னார்கள்; நானும் சொன்னேன்’ எனக் கூறுவான்’ என்று நபி(ஸல்) உரையாற்றினார்கள்.
Book : 11
بَابُ مَنْ قَالَ فِي الخُطْبَةِ بَعْدَ الثَّنَاءِ: أَمَّا بَعْدُ
رَوَاهُ عِكْرِمَةُ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
وَقَالَ مَحْمُودٌ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، قَالَ: أَخْبَرَتْنِي فَاطِمَةُ بِنْتُ المُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ قَالَتْ
دَخَلْتُ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، وَالنَّاسُ يُصَلُّونَ، قُلْتُ: مَا شَأْنُ النَّاسِ، فَأَشَارَتْ بِرَأْسِهَا: إِلَى السَّمَاءِ، فَقُلْتُ: آيَةٌ؟ فَأَشَارَتْ بِرَأْسِهَا: أَيْ نَعَمْ، قَالَتْ: فَأَطَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جِدًّا حَتَّى تَجَلَّانِي الغَشْيُ، وَإِلَى جَنْبِي قِرْبَةٌ فِيهَا مَاءٌ، فَفَتَحْتُهَا، فَجَعَلْتُ أَصُبُّ مِنْهَا عَلَى رَأْسِي، فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ، فَخَطَبَ النَّاسَ، وَحَمِدَ اللَّهَ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ» قَالَتْ: – وَلَغَطَ نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ، فَانْكَفَأْتُ إِلَيْهِنَّ لِأُسَكِّتَهُنَّ، فَقُلْتُ لِعَائِشَةَ: مَا قَالَ؟ قَالَتْ: قَالَ -: ” مَا مِنْ شَيْءٍ لَمْ أَكُنْ أُرِيتُهُ إِلَّا قَدْ رَأَيْتُهُ فِي مَقَامِي هَذَا، حَتَّى الجَنَّةَ وَالنَّارَ، وَإِنَّهُ قَدْ أُوحِيَ إِلَيَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي القُبُورِ، مِثْلَ – أَوْ قَرِيبَ مِنْ – فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، يُؤْتَى أَحَدُكُمْ فَيُقَالُ لَهُ: مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ؟ فَأَمَّا المُؤْمِنُ – أَوْ قَالَ: المُوقِنُ شَكَّ هِشَامٌ – فَيَقُولُ: هُوَ رَسُولُ اللَّهِ، هُوَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، جَاءَنَا بِالْبَيِّنَاتِ وَالهُدَى، فَآمَنَّا وَأَجَبْنَا وَاتَّبَعْنَا وَصَدَّقْنَا، فَيُقَالُ لَهُ: نَمْ صَالِحًا قَدْ كُنَّا نَعْلَمُ إِنْ كُنْتَ لَتُؤْمِنُ بِهِ، وَأَمَّا المُنَافِقُ – أَوْ قَالَ: المُرْتَابُ، شَكَّ هِشَامٌ – فَيُقَالُ لَهُ: مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ؟ فَيَقُولُ: لاَ أَدْرِي، سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَقُلْتُ
قَالَ هِشَامٌ: فَلَقَدْ قَالَتْ لِي فَاطِمَةُ فَأَوْعَيْتُهُ، غَيْرَ أَنَّهَا ذَكَرَتْ مَا يُغَلِّظُ عَلَيْهِ
சமீப விமர்சனங்கள்