Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-2175

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2175. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கணவனுக்கு எதிரான கருத்துக்களை மனைவியிடம் கூறி பிரச்சனையை ஏற்படுத்துபவனும், (இவ்வாறே) எஜமானுக்கு எதிரான கருத்துக்களை அடிமையிடம் கூறி பிரச்சனையை ஏற்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَيْسَ مِنَّا مَنْ خَبَّبَ امْرَأَةً عَلَى زَوْجِهَا، أَوْ عَبْدًا عَلَى سَيِّدِهِ»


Abu-Dawood-1561

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1561.


قَالَ رَجُلٌ لِعِمْرَانَ بْنِ حُصَيْنٍ: يَا أَبَا نُجَيْدٍ، إِنَّكُمْ لَتُحَدِّثُونَنَا بِأَحَادِيثَ مَا نَجِدُ لَهَا أَصْلًا فِي الْقُرْآنِ ، فَغَضِبَ عِمْرَانُ، وَقَالَ لِلرَّجُلِ: «أَوَجَدْتُمْ فِي كُلِّ أَرْبَعِينَ دِرْهَمًا دِرْهَمًا، وَمِنْ كُلِّ كَذَا وَكَذَا شَاةً شَاةً، وَمِنْ كُلِّ كَذَا وَكَذَا بَعِيرًا كَذَا وَكَذَا، أَوَجَدْتُمْ هَذَا فِي الْقُرْآنِ؟» قَالَ: لَا، قَالَ: «فَعَنْ مَنْ أَخَذْتُمْ هَذَا؟ أَخَذْتُمُوهُ عَنَّا، وَأَخَذْنَاهُ عَنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، وَذَكَرَ أَشْيَاءَ نَحْوَ هَذَا


Abu-Dawood-329

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

329.

நபி (ஸல்) அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றிவிட்டு வந்துகொண்டிருந்த போது ஒரு மனிதர் ஜமல் என்ற கிணற்றுக்கு அருகே அவர்களை சந்தித்து சலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் சுவற்றுக்கு அருகே வந்து கைகளை சுவற்றில் வைத்து பிறகு அதை தன் முகத்திலும் கைகளிலும் தடவிக்கொண்டார்கள். பிறகு அம்மனிதருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில்சலாம் கூறினார்கள்..

அறிவிப்பவர் : அபுல் ஜுஹைம் (ரலி)

…..

பாடம் : 124

ஊரில் வசிப்பவர் தயம்மும் செய்தல்.

329. நானும், நபி (ஸல்) அவர்களின் மனைவி மைமூனா (ரலி) அவர்களின் அடிமையான அப்துல்லாஹ் பின் யஸார் அவர்களும் புறப்பட்டு அபுல்ஜுஹைம் பின் அல்ஹாரிஸ் பின் சிம்மா அவர்களிடம் சென்றோம். அப்போது அபுல் ஜுஹைம் அவர்கள் (பின்வருமாறு) அறிவித்தார்கள். பஃர் ஜமல் என்ற இடத்திலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து கொண்டிருக்கும் போது, அவர்களை ஒருவர் சந்தித்து, அவர்களுக்கு ஸலாம் உரைத்தார். நபி (ஸல்) அவர்கள் பதில் கூறாமல் ஒரு சுவர் அருகே வந்து தனது முகத்தையும் தனது இரு கைகளையும் (தயம்மம் செய்து) தடவினார்கள். பின்பு அவருக்கு பதில் ஸலாம் கூறினார்கள். இவ்வாறு இப்னு அவர்கள் கூற அப்பாஸ் அவர்களிடமிருந்து செவியுற்றதாக அறிவிப்பவர்

أَقْبَلْتُ أَنَا وَعَبْدُ اللَّهِ بْنُ يَسَارٍ مَوْلَى مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي الْجُهَيْمِ بْنِ الْحَارِثِ بْنِ الصِّمَّةِ الْأَنْصَارِيِّ قَالَ أَبُو الْجُهَيْمِ: «أَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ بِئْرِ جَمَلٍ فَلَقِيَهُ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ السَّلَامَ حَتَّى أَتَى عَلَى جِدَارٍ، فَمَسَحَ بِوَجْهِهِ وَيَدَيْهِ، ثُمَّ رَدَّ عَلَيْهِ السَّلَامَ»


Abu-Dawood-650

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

650. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழ வைத்துக் கொண்டிருந்த போது தன்னுடைய செருப்புகளைக் கழற்றி இடது புறத்தில் வைத்தார்கள். இதை (தொழுது கொண்டிருந்த) அக்கூட்டம் பார்த்த போது அவர்களும் தங்களது காலணிகளை எடுத்து வைத்து விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்பு, ‘உங்களுடைய காலணிகளை கழற்றி வைக்க உங்களை எது தூண்டியது?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘நீங்கள் உங்களது காலணிகளைக் கழற்றி வைப்பதை நாங்கள் பார்த்தோம். ஆகையால் எங்களது காலணிகளை நாங்கள் கழற்றி விட்டோம்’ என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து எனது காலணிகளில் அசுத்தம் அல்லது நோவினை இருப்பதாகச் சொன்னார்கள்’ என்று கூறி விட்டு, ‘உங்களில் யாரேனும் பள்ளிவாசலுக்கு வந்தால் (தன் காலணிகளை) அவர் உற்று நோக்கட்டும். தன்னுடைய காலணிகளில் அசுத்தத்தையோ அல்லது நோவினை தரக் கூடியதையோ அவர் பார்த்தால் அதைத் துடைத்து விட்டு அத்துடன் தொழுது கொள்ளட்டும்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)


بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِأَصْحَابِهِ إِذْ خَلَعَ نَعْلَيْهِ فَوَضَعَهُمَا عَنْ يَسَارِهِ، فَلَمَّا رَأَى ذَلِكَ الْقَوْمُ أَلْقَوْا نِعَالَهُمْ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ، قَالَ: «مَا حَمَلَكُمْ عَلَى إِلْقَاءِ نِعَالِكُمْ»، قَالُوا: رَأَيْنَاكَ أَلْقَيْتَ نَعْلَيْكَ فَأَلْقَيْنَا نِعَالَنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ جِبْرِيلَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَانِي فَأَخْبَرَنِي أَنَّ فِيهِمَا قَذَرًا – أَوْ قَالَ: أَذًى – ” وَقَالَ: ” إِذَا جَاءَ أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَلْيَنْظُرْ: فَإِنْ رَأَى فِي نَعْلَيْهِ قَذَرًا أَوْ أَذًى فَلْيَمْسَحْهُ وَلْيُصَلِّ فِيهِمَا


Abu-Dawood-4039

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4039. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்ம் அல்அஷ்அரீ (ரஹ்) கூறினார்:

‘அபூ ஆமிர் (ரலி)’ அல்லது ‘அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரலி)’ என்னிடம் கூறினார்கள் – அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்)

நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் (ஆண்கள்) கஸ் என்ற வகை துணியையும், பட்டுத் துணி அணிவதையும் அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். (மேலும் சில செய்திகளைக் கூறினார்கள்)

அதனால் அவர்களில் சிலர் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றம்செய்யப்படுவர்.


وَاللَّهِ يَمِينٌ أُخْرَى مَا كَذَّبَنِي، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْخَزَّ، وَالْحَرِيرَ» وَذَكَرَ كَلَامًا، قَالَ: «يُمْسَخُ مِنْهُمْ آخَرُونَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»


Abu-Dawood-3688

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3688.


دَخَلَ عَلَيْنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَنْمٍ، فَتَذَاكَرْنَا الطِّلَاءَ، فَقَالَ: حَدَّثَنِي أَبُو مَالِكٍ الْأَشْعَرِيُّ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَيَشْرَبَنَّ نَاسٌ مِنْ أُمَّتِي الْخَمْرَ يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا»


Abu-Dawood-1049

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1049.


قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ الْجُمُعَةِ – يَعْنِي السَّاعَةَ -؟ قَالَ: قُلْتُ: نَعَمْ، سَمِعْتُهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ، إِلَى أَنْ تُقْضَى الصَّلَاةُ»، قَالَ أَبُو دَاوُدَ: «يَعْنِي عَلَى الْمِنْبَرِ»


Abu-Dawood-2209

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தலாக் (கூறிவிடலாம் என்று உள்ளத்தில்) ஊசலாட்டம் ஏற்பட்டால்?

2209. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உம்மத்தினரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை அல்லது அதன்படி செயல்படாதவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي عَمَّا لَمْ تَتَكَلَّمْ بِهِ، أَوْ تَعْمَلْ بِهِ، وَبِمَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا»


Abu-Dawood-3083

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3083.


«لَا حِمَى إِلَّا لِلَّهِ وَلِرَسُولِهِ»

قَالَ ابْنُ شِهَابٍ: وَبَلَغَنِي «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَمَى النَّقِيعَ»


Next Page » « Previous Page