Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-3705

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3705. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 (வசனங்களில் ஓதலுக்கான) ஸஜ்தாக்கள் செய்துள்ளேன். அவற்றில் நஜ்ம் (எனும்) அத்தியாயத்தில் உள்ள (அல்குர்ஆன்: 53:62) வசனமும் அடங்கும்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி மேலும் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(பார்க்க: திர்மிதீ-568 , 569)


أَنَّهُ سَجَدَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى عَشْرَةَ سَجْدَةً مِنْهُنَّ النَّجْمُ


Kubra-Bayhaqi-3704

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3704. நான் நபி (ஸல்) அவர்களுடன் 11 (வசனங்களில் ஓதலுக்கான) ஸஜ்தாக்கள் செய்துள்ளேன். ஆனால் முஃபஸ்ஸலான (நடுத்தர) அத்தியாயங்களி­ருந்து எதுவும் அவற்றில் இடம் பெறவில்லை.

அல்அஃராஃப் (7), ரஃது (13), நஹ்ல் (16), பனீ இஸ்ராயீல் (17), மர்யம் (19), ஹஜ் (22), ஃபுர்கான் (25), ஸுலைமான் அலை அவர்களின் வரலாறு இடம்பெறும் நம்ல் (27), ஸஜ்தா (32), ஸாத் (38), ஹாமீம் (41) ஆகியவையே ஸஜ்தாவுக்குரிய அந்த அத்தியாயங்களாகும்

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)


سَجَدْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى عَشْرَةَ سَجْدَةً لَيْسَ فِيهَا مِنَ الْمُفَصَّلِ شَيْءٌ: الْأَعْرَافَ، وَالرَّعْدَ، وَالنَّحْلَ، وَبَنِي إِسْرَائِيلَ، وَمَرْيَمَ، وَالْحَجَّ سَجْدَةً، وَالْفُرْقَانَ، وَسُلَيْمَانَ بِسُورَةِ النَّمْلِ، وَالسَّجْدَةَ، وَص، وَسَجْدَةَ الْحَوَامِيمِ


Kubra-Bayhaqi-3728

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3728. ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளதால் அது சிறப்பிக்கப்பட்டுள்ளதா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ”ஆம்! யார் அவ்விரு வசனங்களின் போதும் ஸஜ்தாச் செய்ய மாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்…

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ர­லி)


قُلْتُ: يَا رَسُولَ اللهِ، فِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَانِ؟ قَالَ: ” نَعَمْ، وَمَنْ لَمْ يَسْجُدْهُمَا فَلَا يَقْرَأْهُمَا


Kubra-Bayhaqi-3727

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3727. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (குர்ஆனின்) 15 ஸஜ்தா வசனங்களை என்னிடம் ஓதிக்காட்ட சொன்னார்கள். அவற்றில் (காஃப் எனும் 50 வது அத்தியாயத்தி­லிருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம்பெறும் மூன்று வசனங்களும், சூரத்துல் ஹஜ் (எனும்) 22 வது அத்தியாயத்தில் இடம் பெறும் இரண்டு வசனங்களும் (அல்குர்ஆன்: 22:18 , 22:77) அடங்கும்.

அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி­)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَهُ خَمْسَ عَشْرَةَ سَجْدَةً فِي الْقُرْآنِ مِنْهَا ثَلَاثٌ فِي الْمُفَصَّلِ وَفِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَيْنِ


Kubra-Bayhaqi-3708

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3708. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (குர்ஆனின்) 15 ஸஜ்தா வசனங்களை என்னிடம் ஓதிக்காட்ட சொன்னார்கள். அவற்றில் (காஃப் எனும் 50 வது அத்தியாயத்தி­லிருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம்பெறும் மூன்று வசனங்களும், சூரத்துல் ஹஜ் (எனும்) 22 வது அத்தியாயத்தில் இடம் பெறும் இரண்டு வசனங்களும் (அல்குர்ஆன்: 22:18 , 22:77) அடங்கும்.

அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி­)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَهُ خَمْسَ عَشْرَةَ سَجْدَةً فِي الْقُرْآنِ مِنْهَا ثَلَاثٌ فِي الْمُفَصَّلِ، وَسُورَةُ الْحَجِّ سَجْدَتَيْنِ


Kubra-Bayhaqi-8517

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8517. ரமழானுக்குப் பின் மிகச் சிறந்த நோன்பு ஷஃபானுடைய நோன்பாகும்…

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


قِيلَ: يَا رَسُولَ اللهِ أِيُّ الصَّوْمِ أَفْضَلُ؟ قَالَ: ” صَوْمُ شَعْبَانَ تَعْظِيمًا لِرَمَضَانَ ” قَالَ: فَأِيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: ” صَدَقَةٌ فِي رَمَضَانَ


Kubra-Bayhaqi-1858

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1858. உளூ உள்ளவரைத் தவிர மற்றவர்கள் பாங்கு சொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

பைஹகீ கூறுகிறார் :

(இதன் அறிவிப்பாளர் தொடரில் முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ  ஸுஹ்ரியிடமிருந்தும், ஸுஹ்ரி ஸயீத் பின் அல்முஸய்யப் அவர்களிடமிருந்தும்ஸயீத் பின் அல்முஸய்யப் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தும், அபூஹுரைரா (ரலி) நபி (ஸல்) அவர்களிடமிருந்து  கேட்டதாக வந்துள்ளது. ஆனால் இதில் வரும் முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ பலவீனமானவர்

வேறு அறிவிப்பில் யூனுஸும், மற்ற அறிவிப்பாளர்களும்  ஸுஹ்ரியிடமிருந்தும், ஸுஹ்ரி அவர்கள், அபூஹுரைரா (ரலி) கூறினார்கள் என்றும் இந்த செய்தி  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாளர்தொடரே உண்மையான அறிவிப்பாளர்தொடர் ஆகும். (அதாவது இந்த செய்தி பலவீனமான, மவ்கூஃபான செய்தியாகும்)


لَا يُؤَذِّنُ إِلَّا مُتَوَضِّئٌ


Kubra-Bayhaqi-6460

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6460. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

1. அல்லாஹ்வுடைய பாதையில் (போர்க்களத்தில்) அணி வகுத்து (எதிரிகளை) சந்திக்கும் போது.

2. மழை பொழியும் போது.

3. தொழுகைக்கு இகாமத் சொல்லும் போது

4. கஅபாவைக் காணும் போது போன்ற நான்கு இடங்களில் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி)


تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ، وَيُسْتَجَابُ الدُّعَاءُ فِي أَرْبَعَةِ مَوَاطِنَ: عِنْدَ الْتِقَاءِ الصُّفُوفِ، وَعِنْدَ نُزُولِ الْغَيْثِ، وَعِنْدَ إِقَامَةِ الصَّلَاةِ، وَعِنْدَ رُؤْيَةِ الْكَعْبَةِ


Kubra-Bayhaqi-20339

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20339. நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களை யமன் (எனும்) நாட்டுக்கு அனுப்பும் போது, “ஏதேனும் வழக்கு ஏற்படும்போது நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நான் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார். அதைப் பற்றி அல்லாஹ்வின் வேதத்தில் நீ காணவில்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையில் உள்ளதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார்.

அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறையிலும் நீ காணவில்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “என்னுடைய சிந்தனையைக் கொண்டு முடிந்தவரை ஆய்வு செய்வேன்” என்று பதிலளித்தார். (உடனே) நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களின் நெஞ்சில் அடித்து விட்டு, “அல்லாஹ்வின் தூதரை மகிழ்ச்சிப்படுத்தும் செயலின் பக்கம் அல்லாஹ்வின் தூதரின் தூதருக்கு, நல்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: ஹிம்ஸ் நகரைச் சேர்ந்த முஆத் (ரலி) அவர்களின் தோழர்கள்.

(தயாலிஸீ இமாம் கூறுகிறார்:

ஷுஅபா அவர்கள், ஒரு தடவை ஹாரிஸ் பின் அம்ர் —> முஆத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் இந்தச் செய்தியை

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ قَالَ لَهُ: ” كَيْفَ تَقْضِي إِذَا عَرَضَ لَكَ قَضَاءٌ؟ ” قَالَ: أَقْضِي بِكِتَابِ اللهِ , قَالَ: ” فَإِنْ لَمْ تَجِدْهُ فِي كِتَابِ اللهِ؟ ” , قَالَ: أَقْضِي بِسُنَّةِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” فَإِنْ لَمْ تَجِدْهُ فِي سُنَّةِ رَسُولِ اللهِ؟ ” , قَالَ: أَجْتَهِدُ بِرَأْيٍ , لَا آلُو، قَالَ: فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي , وَقَالَ: ” الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا يُرْضِي رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Kubra-Bayhaqi-8133

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8133. மர்வான் பின் ஸாலிம் அல்முகஃப்பஉ கூறியதாவது:

(இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது தாடியை பிடித்து ஒரு பிடிக்கு அதிகமாக உள்ளதை வெட்டியதைப் பார்த்தேன்.)

மேலும், நோன்பு துறக்கும் போது, தஹபல் ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபத்தல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ். (பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.


رَأَيْتُ ابْنَ عُمَرَ فَذَكَرَ الْحَدِيثَ، قَالَ: وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ: ” ذَهَبَ الظَّمَأُ، وَابْتَلَّتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللهُ تَعَالَى


Next Page » « Previous Page