Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-7908

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7908. ஃபஜ்ருக்கு முன்பு இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது…

அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி)

 

பைஹகீ இமாம் கூறுகிறார்கள்:

அப்துல்லாஹ் பின் அபீ பக்ர் தான் இந்தச் செய்தியை நபியின் கூற்றாக அறிவித்துள்ளார். அவர் உறுதியானவர். வலிமையானவர்.


مَنْ لَمْ يُجْمِعِ الصِّيَامَ مَعَ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ


Kubra-Bayhaqi-6189

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

6189. உமர் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகையிலும் பெருநாள் தொழுகையிலும் ஒவ்வொரு தக்பீரிலும்  கைகளை உயர்த்துவார்கள்.

அறிவிப்பவர்: பக்ர் பின் ஸவாதா

 


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ كَانَ يَرْفَعُ يَدَيْهِ مَعَ كُلِّ تَكْبِيرَةِ فِي الْجِنَازَةِ وَالْعِيدَيْنِ


Kubra-Bayhaqi-6188

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

பெருநாள் தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்.

6188. நபி (ஸல்) அவர்கள் தொழத் தயாராகும் போது தமது இரு கைகளையும் உயர்த்துவார்கள். அவ்விரு கைகளையும் தோள் புஜத்திற்கு நேராக வைத்துப் பிறகு அதே நிலையில் தக்பீர் சொல்வார்கள். பிறகு ருகூவு செய்வார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்த விரும்பினால் கைகளை புஜங்களுக்கு நேராக அமைகின்ற வரை உயர்த்திபிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று சொல்வார்கள். பிறகு ஸஜ்தா செய்வார்கள். சுஜூதின் போது தமது கைகளை உயர்த்த மாட்டார்கள். தமது தொழுகை முடிகின்ற வரை ருகூவுக்கு முன்னால் சொல்கின்ற ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை உயர்த்துவரர்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى إِذَا كَانَتَا حَذْوَ مَنْكِبَيْهِ , ثُمَّ كَبَّرَ وَهُمَا كَذَلِكَ وَرَكَعَ , وَإِذَا أَرَادَ أَنْ يَرْفَعَ رَفَعَهُمَا حَتَّى يَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ , ثُمَّ قَالَ: ” سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ ” , ثُمَّ يَسْجُدُ وَلَا يَرْفَعُ يَدَيْهِ فِي السُّجُودِ، وَيَرْفَعُهُمَا فِي كُلِّ تَكْبِيرَةٍ يُكَبِّرُهَا قَبْلَ الرُّكُوعِ حَتَّى تَنْقَضِيَ صَلَاتُهُ


Kubra-Bayhaqi-2455

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2455. இந்தப் பள்ளிவாசலில் 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். இமாம் “கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்’ எனக் கூறும் போது அந்த நபித் தோழர்களிடமிருந்து “ஆமீன்’ என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : அதா (ரஹ்)


أَدْرَكْتُ مِائَتَيْنِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْمَسْجِدِ إِذَا قَالَ الْإِمَامُ: {غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، سَمِعْتُ لَهُمْ رَجَّةً بِآمِينَ ” وَرَوَاهُ إِسْحَاقُ الْحَنْظَلِيُّ، عَنْ عَلِيِّ بْنِ الْحَسَنِ، وَقَالَ رَفَعُوا أَصْوَاتَهُمْ بِآمِينَ


Kubra-Bayhaqi-5912

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5912. ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காருவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: முஆத் இப்னு அனஸ் (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْحَبْوَةِ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ


Kubra-Bayhaqi-5920

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5920. அஷ்ஷரீத் பின் ஸுவைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் எனது இடது கையை எனது முதுகுக்குப் பின்புறமாக வைத்து என்னுடைய கையின் உள்ளங்கையை ஊன்றி உட்கார்ந்திருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள்.

அப்போது அவர்கள், “அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டானோ அவர்களின் இருப்பைப் போன்று நீ அமர்ந்திருக்கின்றாயா? என்று (என்னிடம்) கூறினார்கள்.

ஈஸா பின் யூனுஸ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் அறிவிப்பில் ” நான் பள்ளிவாசலில் இவ்வாறு உட்கார்ந்திருந்த நிலையில்” என்று இடம்பெற்றுள்ளது.


مَرَّ بِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جَالِسٌ هَكَذَا، وَقَدْ وَضَعَتُ يَدِي الْيُسْرَى خَلْفَ ظَهْرِي , وَاتَّكَأْتُ عَلَى أَلْيَةِ يَدِي , فَقَالَ: ” أَتَقْعُدُ قَعْدَةَ الْمَغْضُوبِ عَلَيْهِمْ “. لَفْظُ حَدِيثِ عَلِيِّ بْنِ بَحْرٍ ,

وَفِي رِوَايَةِ عَبْدِ الْوَهَّابِ , قَالَ: وَأَنَا جَالِسٌ فِي الْمَسْجِدِ وَاضِعًا يَدِي الْيُسْرَى خَلْفَ ظَهْرِي مُتَّكِئًا عَلَى أَلْيَةِ يَدِي


Kubra-Bayhaqi-1462

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1462. இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டுவதால் உங்கள் மீது குளிப்பு கடமையாகாது. உங்களில் இறந்தவர் அசுத்தமானவர் அல்ல. எனவே உங்கள் கைகளைக் கழுவிக் கொள்வதே உங்களுக்குப் போதுமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


لَيْسَ عَلَيْكُمْ فِي غُسْلِ مَيِّتِكُمْ غُسْلٌ إِذَا غَسَّلْتُمُوهُ إِنَّهُ مُسْلِمٌ مُؤْمِنٌ طَاهِرٌ وَإِنَّ الْمُسْلِمَ لَيْسَ بِنَجَسٍ فَحَسْبُكُمْ أَنْ تَغْسِلُوا أَيْدِيكُمْ


Kubra-Bayhaqi-1435

ஹதீஸின் தரம்: More Info

1435.இறந்தவரின் உடலை யார் குளிப்பாட்டுகின்றாரோ அவர் குளிப்பது அவசியம். யார் சுமந்து செல்கின்றாரோ அவர் உளூச் செய்வது அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ غَسَّلَهُ الْغُسْلُ وَمَنْ حَمَلَهُ الْوُضُوءُ ” يَعْنِي الْمَيِّتَ


Kubra-Bayhaqi-1436

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1436.இறந்தவரின் உடலை யார் குளிப்பாட்டுகின்றாரோ அவர் குளிப்பது அவசியம். யார் சுமந்து செல்கின்றாரோ அவர் உளூச் செய்வது அவசியம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


وَرَوَاهُ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ إِسْحَاقَ مَوْلَى زَائِدَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَاهُ أَخْبَرَنَاهُ أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، ثنا أَبُو بَكْرِ بْنُ دَاسَةَ، ثنا أَبُو دَاوُدَ، ثنا حَاتِمُ بْنُ يَحْيَى، عَنْ سُفْيَانَ، فَذَكَرَهُ. وَكَذَلِكَ رَوَاهُ ابْنُ عُلَيَّةَ، عَنْ سُهَيْلٍ، مَرَّةً مَرْفُوعًا وَمَرَّةً مَوْقُوفًا. وَرَوَاهُ وَهْبُ بْنُ خَالِدٍ، عَنْ سُهَيْلٍ


Kubra-Bayhaqi-1466

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1466 . இறந்தவரின் உடலை நாங்கள் குளிப்பாட்டுவோம். (குளிப்பாட்டிய பின்) எங்களில் குளிப்பவரும் இருப்பார்கள். குளிக்காதவர்களும் இருப்பார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


كُنَّا نُغَسِّلُ الْمَيِّتَ فَمِنَّا مَنْ يَغْتَسِلُ وَمِنَّا مَنْ لَا يَغْتَسِلُ


Next Page » « Previous Page