Category: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்

Musannaf-Abdur-Razzaq
Musannaf Abd al-Razzaq

Musannaf-Abdur-Razzaq-6602

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6602. ‘விழு கட்டிகளுக்கும் தொழுகை நடத்தப்பட்டு, அதன் பெற்றோர்களின் நலவிற்காகவும், அல்லாஹ்வின் அருளிற்காகவும் துஆச் செய்ய வேண்டும்’ என்று முகீரா பின் ஷுஃபா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் ஹய்யா (ரஹ்)


«السِّقْطُ يُصَلَّى عَلَيْهِ وَيُدْعَى لِأَبَوَيْهِ بِالْعَافِيَةِ وَالرَّحْمَةِ»


Musannaf-Abdur-Razzaq-6053

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6053. அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள், மரணதருவாயில் இருக்கும் போது என் இறப்புச் செய்தியை, அறியாமைக் காலத்தில் செய்ததைப் போன்று யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ இஸ்ஹாக் (ரஹ்)

 


حِينَ حَضَرَتْهُ الوَفَاةُ قَالَ: «لَاتُؤْذِنُوا بِي أَحَدًا كَفِعْلِ الْجَاهِلِيَّةِ»


Musannaf-Abdur-Razzaq-6046

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6046.


«لَقِّنُونِي لَا إِلَهَ إِلَّا اللَّهُ عِنْدَ مَوْتِي، وَأَسْرِعُوا بِي إِلَى حُفْرَتِي، وَلَا تَنْعُونِي، فَإِنِّي أَخَافُ أَنْ أَكُونَ كَنَعْيِ الْجَاهِلِيَّةِ، فَإِذَا خَرَجَ الرِّجَالُ بِجِنَازَتِي فَأَغْلِقُوا الْبَابَ فَإِنَّهُ لَا أَرَبَ لِي بِالنِّسَاءَ»


Musannaf-Abdur-Razzaq-6056

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6056. ஒரு மனிதர் இறந்துவிட்டால் அவரின் இறப்புச் செய்தியை அவரின் நண்பருக்கு அறிவிப்பதில் தவறில்லை. இறப்புச் செய்தியை அறிவிக்கக்கூடாது என்று வந்த தடை, அறியாமைக்காலத்தில் உள்ள துக்கம் அனுஷ்டிக்கும் வழிமுறைகளை கண்டித்து தான் என்று இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) கூறினார்.

அறிவிப்பவர் : ஹம்மாத் பின் அபூ ஸுலைமான் (ரஹ்)


«لَا بَأْسَ إِذَا مَاتَ الرَّجُلُ أَنْ يُؤْذَنَ صَدِيقُهُ، إِنَّمَا كَانُوا يَكْرَهُونَ أَنْ يُطَافَ بِهِ فِي الْمَجَالِسِ، أَنْعِي فُلَانًا كَفِعْلِ الْجَاهِلِيَّةِ»


Musannaf-Abdur-Razzaq-5596

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5596. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வெள்ளிக்கிழமை பகலிலோ அல்லது இரவிலோ மரணிக்கிறாரோ அவர் கப்ரின் சோதனையிலிருந்து நீங்கிவிடுவார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«بَرِئَ مِنْ فِتْنَةِ الْقَبْرِ»


Musannaf-Abdur-Razzaq-5595

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் :

வெள்ளிக்கிழமை மரணித்தவர் பற்றி.

5595. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யார் வெள்ளிக்கிழமை இரவிலோ அல்லது பகலிலோ  மரணிக்கிறாரோ அவர், கப்ரின் சோதனையிலிருந்து நீங்கி விடுவார் என்றோ,

அல்லது  கப்ரின் சோதனையிலிருந்து காப்பாற்றப்பட்டு அவர் ஷஹீத் என்று எழுதப்படுவார் என்றோ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«مَنْ مَاتَ لَيْلَةَ الْجُمُعَةِ – أَوْ يَوْمَ الْجُمُعَةِ – بَرِئَ مِنْ فِتْنَةِ الْقَبْرِ»

أَوْ قَالَ: «وُقِيَ فِتْنَةَ الْقَبْرِ، وَكُتِبَ شَهِيَدًا»


Musannaf-Abdur-Razzaq-17166

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17166. ஃகாலிப் பின் உபைதுல்லாஹ் கூறியதாவது:

யார் மதீனாவிற்கு வந்து என்னை ஸியாரத் செய்கிறாரோ அவர் எனக்கருகில் இருப்பவர் போன்றவராவார். மேலும், (மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவர் கியாமத் நாளில் அச்சமற்றவர்களில் (ஒருவராக) எழுப்பப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«مَنْ زَارَنِي يَعْنِي مَنْ أَتَى الْمَدِينَةَ كَانَ فِي جِوَارِي، وَمَنْ مَاتَ يَعْنِي بِوَاحِدٍ مِنَ الْحَرَمَيْنِ بُعِثَ مِنَ الْآمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ»


Musannaf-Abdur-Razzaq-6731

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6731. யஹ்யா பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணித்து அங்கு அடக்கம் செய்யப்படுவரோ அவர் கியாமத் நாளில் அச்சமற்றவர்களில் (ஒருவராக) எழுப்பப்படுவார் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன்.


«يُبْعَثُ مَنْ مَاتَ وَدُفِنَ فِي تِلْكَ الْمَقْبَرَةِ آمِنًا يَوْمَ الْقِيَامَةِ» قَالَ: «وَكُنْتُ أَسْمَعُ قَبْلَ ذَلِكَ أَنَّهُ مَنْ مَاتَ فِي الْحَرَمِ فَإِنَّ ذَلِكَ لَهُ»


Musannaf-Abdur-Razzaq-4633

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4633. “வித்ரு தொழுகை முஸ்லிமான அனைவரின் மீதும் கடமையாகும். ஐந்து ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; மூன்று ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; ஒரு ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்; முடியாதவர் சைகை செய்து (தொழுது) கொள்ளட்டும்” என அபூ அய்யூப் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அதாஉ பின் யஸீத் (ரஹ்)

 


«الْوِتْرُ حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ، فَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِخَمْسِ رَكَعَاتٍ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِثَلَاثٍ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيَفْعَلْ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ إِلَّا أَنْ يُومِئَ إِيمَاءً فَلْيَفْعَلْ»،


Next Page » « Previous Page