Category: முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹ்

Musnad-Ishaq-Ibn-Rahawayh

Musnad-Ishaq-Ibn-Rahawayh-13

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13. அபூ உஸ்மான் (ரஹ்) கூறினார்:

நான் அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் ஏழு இரவுகள் விருந்தாளியாகத் தங்கியிருந்தேன். அவர்களும் அவர்களின் துணைவியாரும் அவர்களின் பணியாளும் இரவை மூன்று பங்குகளாகப் பிரித்துக் கொண்டு முறை வைத்து எழுந்து தொழுது வந்தார்கள். முதலில் ஒருவர் எழுந்து தொழுவார்; மற்றவர்கள் தூங்குவர். தொழுதவர் மற்றொருவரை எழுப்பிவிட்டு தூங்குவிடுவார். அவர் தொழுது முடித்தவுடன் இன்னொருவரை தொழுகைக்கு எழுப்புவார்.

அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் தங்கியிருந்தபோது) அவர்கள் (இவ்வாறு) கூற கேட்டேன்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) தம் தோழர்களிடையே பேரீச்சம் பழங்களைப் பங்கிட்டார்கள். எனக்கு ஏழு பேரீச்சம் பழங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்று (நன்றாகக் கனியாத) தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழமாக இருந்தது. (அந்த நேரத்தில்) அந்தப் பழங்களிலேயே அதுதான் எனக்கு வியப்பளித்தது. மெல்வதற்குச் சிரமப்பட வேண்டியிருந்தது.

மேலும் நான், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் நீங்கள் மாத நோன்பை எவ்வாறு வைப்பீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள், மாத ஆரம்பத்தில் மூன்று நாட்கள் நோன்பு வைப்பேன். எனக்கு (மரணம் போன்ற) ஏதேனும் ஏற்பட்டு விட்டால் முழு மாதத்தின் நன்மை கிடைத்துவிடும் என்று கூறினார்கள்.


تَضَيَّفْتُ أَبَا هُرَيْرَةَ سَبْعًا، وَكَانَ هُوَ وَامْرَأَتُهُ وَخَادِمُهُ يَعْتَقِبُونَ اللَّيْلَ أَثْلَاثًا، يَقُومُ هَذَا وَيَنَامُ هَذَا، وَيَقُومُ هَذَا وَيَنَامُ هَذَا، وَسَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَمْرًا فَأَصَابَنِي سَبْعَ تَمَرَاتٍ، فَكَانَ فِيهِ حَشَفَةٌ، مَا كَانَ شَيْءٌ أَحَبَّ إِلَيَّ مِنْهَا شَدَّتْ فِي مَضَاغِي،

قَالَ: سُلَيْمَانُ: أَيْ كَانَ لَهَا قُوَّةٌ،

قَالَ: فَقُلْتُ يَا أَبَا هُرَيْرَةَ، فَكَيْفَ تَصُومُ الشَّهْرَ؟ فَقَالَ: أَصُومُ مِنْ أَوَّلِ الشَّهْرِ ثَلَاثًا، فَإِنْ حَدَثَ بِي حَدَثٌ كَانَ لِي أَجْرُ شَهْرِي


Musnad-Ishaq-Ibn-Rahawayh-1113

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1113.


اقْتُلُوا الْوَزَغَ فَإِنَّهُ كَانَ يَنْفُخُ عَلَى إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ النَّارَ. قَالَ: وَكَانَتْ عَائِشَةُ تَقْتُلُهُنَّ


Musnad-Ishaq-Ibn-Rahawayh-1197

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1197. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர்ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் திடீரெண இறந்துவிட்டார். அது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியது.

திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு இலேசாகும்; இறைமறுப்பாளர்களுக்கு தண்டனையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றிருந்தாலும், அப்துர்ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) க்கு உடலில் ஏதேனும் நோய் ஏற்பட்டு இறப்பதையே நான் விரும்புகிறேன் ஆயிஷா (ரலி) என்று கூறினார்கள்.


تُوُفِّيَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ فَجْأَةً، فَشَقَّ ذَلِكَ عَلَى عَائِشَةَ وَقَالَتْ: لَوَدِدْتُ أَنَّهُ أُصِيبَ فِي شَيْءٍ مِنْ جَسَدِهِ مَعَ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «هُوَ تَخْفِيفٌ عَلَى الْمُؤْمِنِ وَعَذَابٌ عَلَى الْكَافِرِ»


Musnad-Ishaq-Ibn-Rahawayh-806

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

806.


كُنْتُ أُسَابِقُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْبِقُهُ، فَلَمَّا حَمَلْتُ اللَّحْمَ سَابَقْتُهُ فَسَبَقَنِي


Musnad-Ishaq-Ibn-Rahawayh-1362

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1362. அல்லாஹ்வின் தூதரே! நான் லைலத்துல் கத்ர் இரவை எதிர்கொண்டால் அதில் என்ன கூற வேண்டும்?’ என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.

(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ مَاذَا أَقُولُ؟ قَالَ: «قُولِي اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي»


Musnad-Ishaq-Ibn-Rahawayh-1361

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1361. அல்லாஹ்வின் தூதரே! நான் லைலத்துல் கத்ர் இரவை எதிர்கொண்டால் அதில் என்ன கூற வேண்டும்?’ என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.

(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)


أَنَّهَا سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: إِنْ وَافَقَنِي لَيْلَةُ الْقَدْرِ فَمَاذَا أَقُولُ؟ فَقَالَ: «قُولِي اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي»


Musnad-Ishaq-Ibn-Rahawayh-496

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

496. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«صَوْمُكُمْ يَوْمَ تَصُومُونَ وَفِطْرُكُمْ يَوْمَ تُفْطِرُونَ»


Musnad-Ishaq-Ibn-Rahawayh-2143

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2143.


أَنَّهُ لَمَّا كَانَ أُصِيبَ جَعْفَرُ وَأَصْحَابُهُ غَدَوْتُ عَلَى دَبِيغٍ لِي فَدَبَغْتُ أَرْبَعِينَ، ثُمَّ عَجَنْتُ عَجِينِي، ثُمَّ قَدِمْتُ إِلَى بَنِيِّ، فَغَسَلْتُ وُجُوهَهُمْ ، وَدَهَنْتُهُمْ، فَأَتَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ عَلَيَّ فَقَالَ: «ائْتِينِي بِبَنِي جَعْفَرٍ» ، فَأَتَيْتُهُ بِهِمْ، فَأَخَذَهُمْ وَضَمَّهُمْ إِلَيْهِ وَشَمَّهُمْ، فَذَرَفَتْ عَيْنَاهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَعَلَّكَ بَلَغَكَ عَنْ جَعْفَرٍ شَيْءٌ؟ فَقَالَ: «نَعَمْ، قُتِلَ هُوَ وَأَصْحَابُهُ» ، فَقُمْتُ أَصِيحُ وَأَجْمَعُ عَلَيَّ النَّاسَ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ عَلَى أَهْلِهِ، فَقَالَ: «لَا تَغْفَلُوا عَنْهُمْ أَنْ تَصْنَعُوا لَهُمْ طَعَامًا، فَإِنَّهُمْ قَدْ شُغِلُوا بِشَأْنِ صَاحِبِهِمْ»


Musnad-Ishaq-Ibn-Rahawayh-2144

ஹதீஸின் தரம்: Pending

2144. ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி) அவர்களின் மரணசெய்தி வந்தபோது, ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு செய்து கொடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)


لَمَّا جَاءَ نَعْي جَعْفَرٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا، فَقَدْ أَتَاهُمْ مَا شَغَلَهُمْ» ، أَوْ «أَمْرٌ يَشْغَلُهُمْ»


Next Page » « Previous Page