Category: திர்மிதீ

Tirmidhi-231

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

231.


«أَنَّ رَجُلًا صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ الصَّلَاةَ»،:

سَمِعْت الجَارُودَ يَقُولُ: سَمِعْتُ وَكِيعًا، يَقُولُ: «إِذَا صَلَّى الرَّجُلُ خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَإِنَّهُ يُعِيدُ»


Tirmidhi-230

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

230.

ஹிலால் பின் யஸாஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸியாத் பின் அபுல் ஜஃத் (ரஹ்) அவர்கள் என் கையைப் பிடித்து ரக்கா என்ற நகரத்தில் உள்ள ஒரு பெரியவரிடம் அழைத்துச் சென்று நிற்கவைத்தார். அவரின் பெயர் வாபிஸா பின் மஅபத் ஆகும்.

அப்போது அவர், (தொழுகை) வரிசைக்குப் பின்னால் தனியாகத் தொழுது கொண்டிருந்த ஒருவரை நபி (ஸல்) அவர்கள் கண்டு அத்தொழுகையை (மறுபடியும்) மீட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள் என்றுக் கூறினார்.


قَالَ: أَخَذَ زِيَادُ بْنُ أَبِي الجَعْدِ بِيَدِي وَنَحْنُ بِالرَّقَّةِ، فَقَامَ بِي عَلَى شَيْخٍ يُقَالُ لَهُ: وَابِصَةُ بْنُ مَعْبَدٍ، مِنْ بَنِي أَسَدٍ، فَقَالَ زِيَادٌ: حَدَّثَنِي هَذَا الشَّيْخُ «أَنَّ رَجُلًا صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ – وَالشَّيْخُ يَسْمَعُ فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ الصَّلَاةَ»


Tirmidhi-219

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

219. யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது அவர்களுடன் நானும் இருந்தேன். நான் கைஃப் பள்ளியில் அவர்களுடன் ஃபஜர் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிய போது தன்னுடன் தொழுகையில் கலந்து கொள்ளாத இருவரை கூட்டத்தின் இறுதியில் (அமர்ந்து) இருப்பதைக் கண்டார்கள். அவ்விருவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள்.

அவ்விருவரின் தோல் புஜங்களும் (அச்சத்தால்) நடுங்கிய நிலையில் அவ்விருவரும் அழைத்து வரப்பட்டனர். நீங்கள் ஏன் நம்முடன் சேர்ந்து தொழவில்லை? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுடைய வீடுகளிலேயே தொழுகையை நிறைவேற்றி விட்டோம் என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு நீங்கள் செய்யாதீர்கள். நீங்கள் உங்களுடைய வீடுகளில் தொழுதுவிட்டு ஜமாஅத் நடக்கும் பள்ளிக்கு வந்தால் மக்களுடன் சேர்ந்து தொழ வேண்டும். இத்தொழுகை உங்களுக்கு உபரியானதாகி விடும் என்றார்கள்.


شَهِدْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَّتَهُ، فَصَلَّيْتُ مَعَهُ صَلَاةَ الصُّبْحِ فِي مَسْجِدِ الخَيْفِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ انْحَرَفَ فَإِذَا هُوَ بِرَجُلَيْنِ فِي أُخْرَى القَوْمِ لَمْ يُصَلِّيَا مَعَهُ، فَقَالَ: «عَلَيَّ بِهِمَا»، فَجِيءَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا، فَقَالَ: «مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا»، فَقَالَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا كُنَّا قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا، قَالَ: «فَلَا تَفْعَلَا، إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمَا ثُمَّ أَتَيْتُمَا مَسْجِدَ جَمَاعَةٍ فَصَلِّيَا مَعَهُمْ، فَإِنَّهَا لَكُمَا نَافِلَةٌ»،


Tirmidhi-189

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

189.

…கனவில் பாங்கு சொல்லும் முறை அறிவிக்கப்பட்ட அப்துல்லாஹ் பின் ஸைத் ரலி அவர்கள் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சொன்னார். நீ கனவில் கணடதை பிலாலுக்குச் சொல்! அவர் அதைக் கூறுவார். ஏனெனில் அவர் உன்னை விட அதிக சப்தம் உடையவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…


لَمَّا أَصْبَحْنَا أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ بِالرُّؤْيَا، فَقَالَ: «إِنَّ هَذِهِ لَرُؤْيَا حَقٍّ، فَقُمْ مَعَ بِلَالٍ فَإِنَّهُ أَنْدَى وَأَمَدُّ صَوْتًا مِنْكَ، فَأَلْقِ عَلَيْهِ مَا قِيلَ لَكَ، وَلْيُنَادِ بِذَلِكَ»، قَالَ: فَلَمَّا سَمِعَ عُمَرُ بْنُ الخَطَّابِ نِدَاءَ بِلَالٍ بِالصَّلَاةِ خَرَجَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ يَجُرُّ إِزَارَهُ، وَهُوَ يَقُولُ: يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ، لَقَدْ رَأَيْتُ مِثْلَ الَّذِي قَالَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَلِلَّهِ الحَمْدُ، فَذَلِكَ أَثْبَتُ»


Tirmidhi-2756

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2756. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, விருத்தசேதனம் செய்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது,  ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«خَمْسٌ مِنَ الفِطْرَةِ، الِاسْتِحْدَادُ، وَالخِتَانُ، وَقَصُّ الشَّارِبِ، وَنَتْفُ الإِبْطِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ»


Tirmidhi-2757

ஹதீஸின் தரம்: More Info

2757. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன:) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

 

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) அவர்கள், பத்தாவது விஷயத்தை நான் மறந்துவிட்டேன். அது வாய் கொப்புளிப்பதாய் இருக்கலாம் என்று கூறினார்கள்.

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) இன்திகாஸுல் மாயி எனும் சொற்றொடருக்கு (மலஜலம் கழித்த பின்) துப்புரவு செய்தல் என்று பொருள் என அபூ உபைத் கூறுகின்றார்.


«عَشْرٌ مِنَ الْفِطْرَةِ، قَصُّ الشَّارِبِ، وَإِعْفَاءُ اللِّحْيَةِ، وَالسِّوَاكُ، وَالِاسْتِنْشَاقُ، وَقَصُّ الأَظْفَارِ، وَغَسْلُ البَرَاجِمِ، وَنَتْفُ الإِبِطِ، وَحَلْقُ العَانَةِ، وَانْتِقَاصُ المَاءِ»

قَالَ زَكَرِيَّا: قَالَ مُصْعَبٌ: وَنَسِيتُ الْعَاشِرَةَ، إِلَّا أَنْ تَكُونَ الْمَضْمَضَةَ.

قَالَ أَبُو عُبَيْدٍ: انْتِقَاصُ الْمَاءِ: الِاسْتِنْجَاءُ بِالْمَاءِ.


Tirmidhi-2764

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2764. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மீசையை ஒட்ட நறுக்குமாறும் தாடியை வளர்க்குமாறும் எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنَا بِإِحْفَاءِ الشَّوَارِبِ وَإِعْفَاءِ اللِّحَى»


Tirmidhi-2763

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2763. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மீசையை ஒட்ட நறுக்குங்கள், தாடியை வளரவிடுங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«احْفُوا الشَّوَارِبَ وَاعْفُوا اللِّحَى»


Tirmidhi-2886

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2886. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அல்கஹ்ஃப்” எனும் (18ஆவது) அத்தியாயத்தின் ஆரம்ப மூன்று வசனங்களை ஓதுபவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டு பாதுகாக்கப்படுவார்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)


«مَنْ قَرَأَ ثَلَاثَ آيَاتٍ مِنْ أَوَّلِ الكَهْفِ عُصِمَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ»


Tirmidhi-2885

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2885. பராவு (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்கஹ்ஃபு எனும் (18 வது)அத்தியாயத்தைத் (தமது இல்லத்தில் அமர்ந்து) ஓதிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் குதிரை மிரளுவதைப் பார்த்தார். அவர் என்னவென்று நாலாபுறமும் பார்க்கும்போது மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடியது. (விடிந்தவுடன்) அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அந்த விஷயத்தைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது’ என்று கூறினார்கள்.


بَيْنَمَا رَجُلٌ يَقْرَأُ سُورَةَ الكَهْفِ إِذْ رَأَى دَابَّتَهُ تَرْكُضُ، فَنَظَرَ فَإِذَا مِثْلُ الغَمَامَةِ أَوِ السَّحَابَةِ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تِلْكَ السَّكِينَةُ نَزَلَتْ مَعَ القُرْآنِ، أَوْ نَزَلَتْ عَلَى القُرْآنِ»


Next Page » « Previous Page