2416. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமைநாளில் மனிதனிடம், அவனுடைய வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? வாலிபத்தை எதில் கழித்தான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? அவனுடைய கல்வியைக் கொண்டு என்ன அமல் செய்தான்? ஆகிய ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டு (அவற்றிற்கு அவன் பதிலளிக்காத வரை) இறைவனை விட்டு அவனுடைய பாதங்கள் நகராது.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது அரிதான செய்தி. இந்த செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக ஹுஸைன் பின் கைஸ் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்று அறிகிறோம். இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்பதால் பலவீனமானவர் என்று கூறப்பட்டுள்ளார்.
மேற்கண்ட செய்தி அபூபர்ஸா (ரலி), அபூஸயீத் (ரலி) போன்றோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
«لَا تَزُولُ قَدَمُ ابْنِ آدَمَ يَوْمَ القِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ، عَنْ عُمُرِهِ فِيمَ أَفْنَاهُ، وَعَنْ شَبَابِهِ فِيمَ أَبْلَاهُ، وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ، وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ»
சமீப விமர்சனங்கள்