Category: திர்மிதீ

Tirmidhi-2676

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 16

நபிவழியைக் கடைப் பிடிக்குமாறும் (மார்க்க அடிப்படையற்ற) நூதனமான செயல்களைக் கைவிடுமாறும் வந்துள்ளவை.

2600. இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் அதிகாலைத் தொழுகைக்குப் பின் எங்களிடையே சொற்சுவைமிக்க
சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்கள். அதைக் கேட்டு எங்கள் கண்கள் கண்ணீரைச் சிந்தின; (எங்கள்) உள்ளங்கள் எல்லாம் அஞ்சி நடுங்கின. அப்போது ஒரு மனிதர் “இது விடைபெற்றுச் செல்லும் ஒருவர் கூறும் அறிவுரை போன்றுள்ளது. அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எங்களிடம் இறுதி விருப்பமாக என்ன சொல்லப் போகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் இறைவனை அஞ்சுமாறும்; கறுப்பு நிற (நீக்ரோ) அடிமை உங்களுக்கு ஆட்சியாளராக ஆக்கப்பட்டாலும் அவருடைய சொல்லைச் செவியேற்று அதற்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும்
உங்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன்.

ஏனெனில், உங்களில் எனக்குப் பின்னால் வாழ்பவர்கள் அதிகமான கருத்து வேறுபாடுகளைக் காண்பர். (மார்க்கத்தில் புகுத்தப்படும்) புதுமைகளிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில்
(மார்க்கத்தில்) புதிதாக உண்டாக்கப்படுகின்றவை யாவும் வழிதவறச் செய்யக்கூடியவையாகும்.

(மார்க்க அடிப்படையற்ற) இவ்விஷயங்களை

وَعَظَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا بَعْدَ صَلاَةِ الغَدَاةِ مَوْعِظَةً بَلِيغَةً ذَرَفَتْ مِنْهَا العُيُونُ وَوَجِلَتْ مِنْهَا القُلُوبُ، فَقَالَ رَجُلٌ: إِنَّ هَذِهِ مَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا يَا رَسُولَ اللهِ؟ قَالَ: أُوصِيكُمْ بِتَقْوَى اللهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ، وَإِنْ عَبْدٌ حَبَشِيٌّ، فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ يَرَى اخْتِلاَفًا كَثِيرًا، وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الأُمُورِ فَإِنَّهَا ضَلاَلَةٌ فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَعَلَيْهِ بِسُنَّتِي وَسُنَّةِ الخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ، عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ


Tirmidhi-3369

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3369. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவித்தார்:

அல்லாஹ் பூமியை படைத்தபோது, அது நடுங்க ஆரம்பித்தது. அல்லாஹ் மலைகளைப் படைத்து பூமி ஆடாமல் நிலைநிறுத்தினான். மலைகளின் பலத்தைக் கண்டு வானவர்கள் வியப்புற்று, “ எங்கள் இறைவனே! நீ படைத்தவற்றுள் இந்த மலைகளை விட பலமானது ஏதும் உண்டா?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ், “ஆம்! இரும்பு”என்றான்.

“ இறைவனே! இரும்பை விட பலமானது ஏதேனும் உண்டா?” என்று மீண்டும் கேட்டார்கள், “ ஆம்! உண்டு. அது நெருப்பு!’என்று அல்லாஹ் கூறினான். “இந்த நெருப்பை விட பலமானது ஏதேனும் உண்டா? “ என்று கேட்ட போது, “ஆம்! அது தண்ணீர்!” என்று கூறினான். இந்த தண்ணீரை விட பலமானது உண்டா? என்று கேட்டதற்கு, “ ஆம்! அது காற்று!” என்று அல்லாஹ் கூறினான்.

இந்த பலமான காற்றை விட பலமானது உண்டா? என்று கேட்டபோது, “ ஆம்! உண்டு, அது ஆதமுடைய மகனானவன். தன் இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுக்கும் தர்மமாகும்!’ என்று அல்லாஹ் கூறியதாக, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


لَمَّا خَلَقَ اللَّهُ الأَرْضَ جَعَلَتْ تَمِيدُ، فَخَلَقَ الجِبَالَ، فَقَالَ بِهَا عَلَيْهَا فَاسْتَقَرَّتْ، فَعَجِبَتِ المَلَائِكَةُ مِنْ شِدَّةِ الجِبَالِ. قَالُوا: يَا رَبِّ هَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الجِبَالِ؟

قَالَ: نَعَمُ الحَدِيدُ.  قَالُوا: يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الحَدِيدِ؟ قَالَ: نَعَمُ النَّارُ. فَقَالُوا: يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ النَّارِ؟ قَالَ: نَعَمُ المَاءُ.

قَالُوا: يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ المَاءِ؟ قَالَ: نَعَمُ الرِّيحُ. قَالُوا: يَا رَبِّ فَهَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الرِّيحِ؟

قَالَ: نَعَمْ ابْنُ آدَمَ، تَصَدَّقَ بِصَدَقَةٍ بِيَمِينِهِ يُخْفِيهَا مِنْ شِمَالِهِ “: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مَرْفُوعًا إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»


Tirmidhi-3445

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

3445. ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் பயணம் செல்லவிருக்கிறேன். எனக்கு (ஏதேனும்) உபதேசியுங்கள்! என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இறையச்சத்தையும், மேடான பகுதியில் செல்லும் போது அல்லாஹு அக்பர் என்று கூறுவதையும் பற்றிப்பிடித்துக்கொள்” என்று கூறினார்கள்.

(பிறகு) அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! அவருக்கு பயணத்தொலைவை சுருக்கிவிடு; பயணத்தை எளிதாக்கு! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُرِيدُ أَنْ أُسَافِرَ فَأَوْصِنِي، قَالَ: «عَلَيْكَ بِتَقْوَى اللَّهِ، وَالتَّكْبِيرِ عَلَى كُلِّ شَرَفٍ»، فَلَمَّا أَنْ وَلَّى الرَّجُلُ، قَالَ: «اللَّهُمَّ اطْوِ لَهُ الأَرْضَ، وَهَوِّنْ عَلَيْهِ السَّفَرَ»


Tirmidhi-2004

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2004. மக்களை அதிகம் சொர்க்கத்தில் நுழையச்செய்கின்ற காரியம் எது? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “இறையச்சமும், நற்குணமும்” என்று பதிலளித்தார்கள்.

மக்களை அதிகம் நரகத்தில் நுழையச்செய்கின்ற காரியம் எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “வாயும், மர்ம உறுப்பும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الجَنَّةَ، فَقَالَ: «تَقْوَى اللَّهِ وَحُسْنُ الخُلُقِ»،

وَسُئِلَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ، فَقَالَ: «الفَمُ وَالفَرْجُ»


Tirmidhi-2488

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

2488. (ஒரு தடவை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நரகத்திற்கு தடைசெய்யப்பட்ட ஒருவரைப் பற்றி, அல்லது எவருக்கு நரகம் தடைசெய்யப்பட்டதோ அவரைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்டுவிட்டு, (அவர் யாரெனில்) அவர் மக்களை நெருங்கியிருப்பார்; பணிவுள்ளவராக இருப்பார்; மென்மையானவராக இருப்பார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


«أَلَا أُخْبِرُكُمْ بِمَنْ يَحْرُمُ عَلَى النَّارِ أَوْ بِمَنْ تَحْرُمُ عَلَيْهِ النَّارُ، عَلَى كُلِّ قَرِيبٍ هَيِّنٍ سَهْلٍ»


« Previous Page