தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-2036

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14

நோன்பாளி ரமளான் பகலில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது; அவ்வாறு ஈடுபட்டால் அதற்காகப் பெரிய பரிகாரம் செய்வது கடமையாகும் என்பதன் விளக்கம்; ஏழை, செல்வர் அனைவர்மீதும் அந்தப் பரிகாரம் கடமையாகும். ஆனால், ஏழைக்கு வசதி வரும்வரை அவகாசம் உண்டு.

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “நான் அழிந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமது அழிவுக்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள். “நான் ரமளானில் (நோன்பு வைத்துக்கொண்டே) என் மனைவியுடன் (பகலில்) தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்” என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “(இதற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலைசெய்ய உம்மால் இயலுமா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “தொடர்ந்து இருமாதங்கள் நோன்பு நோற்க உம்மால் முடியுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உம்மால் இயலுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் “இல்லை” என்று கூறிவிட்டுப் பிறகு அமர்ந்துவிட்டார்.

பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழங்கள் உள்ள ஒரு கூடை கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரிடம், “இதை(ப் பெற்று) தர்மம் செய்வீராக!” என்று கூறினார்கள். அவர், “எங்களைவிட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? இந்நகரத்தின் இருமலைகளுக்கு இடையே எங்களைவிட மிக வறியநிலையில் எந்த வீட்டாரும் இல்லை” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப்பற்கள் தெரியச் சிரித்துவிட்டு, “நீர் (இதைப் பெற்றுச்) சென்று, உம் வீட்டாருக்கே ஊட்டுவீராக!” என்றார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “கூடை (“அரக்”) என்பதற்கு “ஸன்பீல்” (பெரிய கூடை) என்று பொருள்” என இடம் பெற்றுள்ளது. மேலும், “உடனே நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப்பற்கள் தெரியச் சிரித்தார்கள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

Book : 13

(முஸ்லிம்: 2036)

14 – بَابُ تَغْلِيظِ تَحْرِيمِ الْجِمَاعِ فِي نَهَارِ رَمَضَانَ عَلَى الصَّائِمِ، وَوُجُوبِ الْكَفَّارَةِ الْكُبْرَى فِيهِ وَبَيَانِهَا، وَأَنَّهَا تَجِبُ عَلَى الْمُوسِرِ وَالْمُعْسِرِ وَتَثْبُتُ فِي ذِمَّةِ الْمُعْسِرِ حَتَّى يَسْتَطِيعَ

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ نُمَيْرٍ، كُلُّهُمْ عَنِ ابْنِ عُيَيْنَةَ، قَالَ يَحْيَى: أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: هَلَكْتُ، يَا رَسُولَ اللهِ، قَالَ: «وَمَا أَهْلَكَكَ؟» قَالَ: وَقَعْتُ عَلَى امْرَأَتِي فِي رَمَضَانَ، قَالَ: «هَلْ تَجِدُ مَا تُعْتِقُ رَقَبَةً؟» قَالَ: لَا، قَالَ: «فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ؟» قَالَ: لَا، قَالَ: «فَهَلْ تَجِدُ مَا تُطْعِمُ سِتِّينَ مِسْكِينًا؟» قَالَ: لَا، قَالَ: ثُمَّ جَلَسَ، فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ، فَقَالَ: «تَصَدَّقْ بِهَذَا» قَالَ: أَفْقَرَ مِنَّا؟ فَمَا بَيْنَ لَابَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ إِلَيْهِ مِنَّا، فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، ثُمَّ قَالَ: «اذْهَبْ فَأَطْعِمْهُ أَهْلَكَ»

– حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ الزُّهْرِيِّ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَ رِوَايَةِ ابْنِ عُيَيْنَةَ، وَقَالَ: بِعَرَقٍ فِيهِ تَمْرٌ وَهُوَ الزِّنْبِيلُ وَلَمْ يَذْكُرْ: فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ


Tamil-2036
Shamila-1111
JawamiulKalim-1877




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.