தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3688

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 44

“அஹ்ஸாப்” எனும் அகழ்ப் போர்.

 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது (அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடன் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்றுகொண்டு இருந்தார்கள். மண், அவர்களது வயிற்றின் வெண்மையை மறைத்துவிட்டிருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டு இருந்தார்கள்:

அல்லாஹ்வின் மீதாணை!

அல்லாஹ் இல்லாவிட்டால், நாங்கள்

நேர்வழி அடைந்திருக்கமாட்டோம்

தர்மமும் செய்திருக்கமாட்டோம்

தொழுதிருக்கவுமாட்டோம்.

எங்கள்மீது அமைதியைப்

பொழிவாயாக! இவர்கள்

(கூட்டுப் படையினர்) எங்களுக்கு

அக்கிரமம் இழைத்துவிட்டனர்.

சில வேளை இவ்வாறு கூறினார்கள்:

இந்தப் பிரமுகர்கள்

எங்களை நிராகரித்துவிட்டனர்.

இவர்கள் எங்களைச்

சோதனையில் ஆழ்த்த விரும்பினால்

நாங்கள் இடம் தரமாட்டோம்.

“(நாங்கள் இடம் தரமாட்டோம்; நாங்கள் இடம் தரமாட்டோம் என) இந்த (இறுதி) வாசகத்தை உரத்த குரலில் கூறிக்கொண்டு இருந்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் பராஉ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், (“இவர்கள் எங்களை நிராகரித்து விட்டனர்” என்பதற்குப் பகரமாக) “இவர்கள் எங்கள்மீது எல்லை மீறிவிட்டனர்” என்று இடம்பெற்றுள்ளது.

Book : 32

(முஸ்லிம்: 3688)

44 – بَابُ غَزْوَةِ الْأَحْزَابِ وَهِيَ الْخَنْدَقُ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، وَاللَّفْظُ لِابْنِ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ الْبَرَاءَ، قَالَ

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْأَحْزَابِ يَنْقُلُ مَعَنَا التُّرَابَ، وَلَقَدْ وَارَى التُّرَابُ بَيَاضَ بَطْنِهِ، وَهُوَ يَقُولُ: وَاللهِ لَوْلَا أَنْتَ مَا اهْتَدَيْنَا، وَلَا تَصَدَّقْنَا وَلَا صَلَّيْنَا، فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا، إِنَّ الْأُلَى قَدْ أَبَوْا عَلَيْنَا – قَالَ: وَرُبَّمَا قَالَ: إِنَّ الْمَلَا قَدْ أَبَوْا عَلَيْنَا – إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا، وَيَرْفَعُ بِهَا صَوْتَهُ

– حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ الْبَرَاءَ، فَذَكَرَ مِثْلَهُ، إِلَّا أَنَّهُ قَالَ: إِنَّ الْأُلَى قَدْ بَغَوْا عَلَيْنَا


Tamil-3688
Shamila-1803
JawamiulKalim-3371




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.