தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-19003

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஹுஸைன் பின் மிஹ்ஸன் (ரலி…) தனது தந்தையுடன் பிறந்த சகோதரியிடமிருந்து அறிவிக்கும் செய்தி.

ஹுஸைன் பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு உதவிக்காக வந்திருந்தார். அவர் உதவியைப் பெற்றுக்கொண்ட பின், நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் உமக்கு கணவர் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். நபி (ஸல்) அவர்கள், அவரிடத்தில் நீ எவ்வாறு நடந்துக்கொள்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் என்னால் இயலாமல் போனாலே தவிர அவருக்கு நன்மை செய்வதில் நான் குறைவு வைக்கமாட்டேன் என்று கூறினார். நீ எவ்வாறு அவரிடத்தில் நடந்துக் கொள்கிறாய் என்பதில் கவனமாக இரு! ஏனென்றால் அவர்தான் உனது சொர்க்கமாகும்; உனது நரகமுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுஸைன் பின் மிஹ்ஸன் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 19003)

حَدِيثُ حُصَيْنِ بْنِ مِحْصَنٍ عَنْ عَمَّةٍ لَهُ

حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنِ الْحُصَيْنِ بْنِ مِحْصَنٍ

أَنَّ عَمَّةً لَهُ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ، فَفَرَغَتْ مِنْ حَاجَتِهَا، فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَذَاتُ زَوْجٍ أَنْتِ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ: «كَيْفَ أَنْتِ لَهُ؟» قَالَتْ: مَا آلُوهُ إِلَّا مَا عَجَزْتُ عَنْهُ، قَالَ: «فَانْظُرِي أَيْنَ أَنْتِ مِنْهُ، فَإِنَّمَا هُوَ جَنَّتُكِ وَنَارُكِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-18233.
Musnad-Ahmad-Shamila-19003.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-18609.




  • (இந்த ஹதீஸ் பற்றி ஷுஐப் அவர்கள் ஹஸன் தரம் என்று கூறினாலும், அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இதை ஸஹீஹ் (பலமானது) என்றே கூறியுள்ளார்.

(நூல்: ஸஹீஹ் தர்ஃகீப்-1933)

  • இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் வரும் ஹுஸைன் பின் மிஹ்ஸன் என்பவர் பற்றி நபித்தோழரா, இல்லையா என்று கருத்துவேறுபாடு உள்ளது. அப்தான், இப்னு ஷாஹீன்,பிறப்பு ஹிஜ்ரி 298
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 87
    அபூ அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அஸ்கரிய், அபூ அலி, பகவீ போன்றோர் நபித்தோழர் என்று குறிப்பிடுகிறார்கள்.
  • இமாம் புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அபீ ஹாதிம், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    போன்றோர் (நபித்தோழர்களுக்கு அடுத்து வந்த) தாபிஈ என்று குறிப்பிடுகிறார்கள்.

(நூல்: அல்இனாபா-193)

  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இவர் தாபிஈ, பலமானவர் என்று பதிவு செய்துள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நபித்தோழர் என்று பதிவு செய்துள்ளார்.

(நூல்: லிஸானுல் மீஸான்- எண் 541, தக்ரீபுத் தஹ்தீப்-1/255)

இவர் தாபிஈ என்று வைத்துக் கொண்டாலும் இவரின் மாமி (அஸ்மா-கத்மிய்யா -புனைப்பெயர்-உம்மு கைஸ்) அவர்கள் நபித்தோழியர் ஆவார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-8794)

எனவே இவர், தனது மாமியிடம் கேட்டு அறிவித்துள்ளார் என்பதால் இதில் விமர்சனம் இல்லை.

  • இந்த செய்தி முர்ஸலாக வந்துள்ளது. (அதாவது ஹுஸைன் பின் மிஹ்ஸன் இந்த செய்தியை தகவலாக அறிவித்திருப்பது ஒரு வகை)
  • மவ்ஸூலாகவும் வந்துள்ளது. (அதாவது ஹுஸைன் பின் மிஹ்ஸன் இந்த செய்தியை தனது மாமியிடமிருந்து அறிவித்திருப்பது மற்றொரு வகை)
  • இதை யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள் வழியாக அதிகமானவர்கள் மவ்ஸூலாக அறிவித்துள்ளனர் என்பதால் இதற்கே அறிஞர்கள் முன்னுரிமை தந்துள்ளனர்…

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-17125 , அஹ்மத்-19003 , 27352 , அல்முஃஜமுல் கபீர்-448 , …

…குப்ரா நஸாயீ-8913 , 8914 , 8915 , 8916 , 8917 , 8918 , 8919 , 8920 , அல்முஃஜமுல் கபீர்-449 , 450 , அல்முஃஜமுல் அவ்ஸத்-528 , ஹாகிம்-2769 , குப்ரா பைஹகீ-14706 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.