தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

முக்கிய துறைகளில் முக்கிய அறிஞர்கள்

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

முக்கிய கல்வித்துறைகளில் முக்கிய அறிஞர்கள்.

மார்க்கச் சட்டம் (ஃபிக்ஹ்)

1 . உமர் பின் அல்கத்தாப் (ரலி)

2 . அலீ பின் அபூதாலிப் (ரலி)

3 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)

4 . உபை பின் கஅப் (ரலி)

5 . முஆத் பின் ஜபல் (ரலி)

6 . ஸைத் பின் ஸாபித் (ரலி)

(நபித்தோழர்களின் கல்வியை முக்கியமான மேற்கண்ட 6 நபித்தோழர்கள் பெற்றிருந்தனர். இவர்கள் ஃபுகஹாக்கள்-மார்க்க மேதைகள் ஆவர்)

ஹதீஸ்துறை- ஹதீஸ்அறிவிப்பாளர்கள்

1 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

2 . அனஸ் (ரலி)

3 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

4 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

5 . அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

6 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி).

வரலாற்றுத்துறை-சம்பவங்கள்

1 . அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)

2 . கஃபுல் அஹ்பார் (ரஹ்)

3 . வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்)

4 . தாவூஸ் அல்யமானீ (ரஹ்)

5 . முஹம்மது பின் இஸ்ஹாக் பின் யஸார் (ரஹ்)

6 . முஹம்மது பின் உமர் அல்வாகிதீ

குர்ஆன் விரிவுரை-தஃப்ஸீர்

1 .இப்னு அப்பாஸ் (ரலி)

2 . ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)

3 . முஜாஹித் (ரஹ்)

4 . கதாதா (ரஹ்)

5 . ளஹ்ஹாக் பின் முஸாஹிம் அல்ஹிலாலீ

6 . அஸ்ஸுத்தீ-இஸ்மாயீல் பின் அப்துர்ரஹ்மான்.

கல்வியை திரட்டியவர்கள்-பாதுகாத்தவர்கள்.

1 . அல்அஃமஷ் (ரஹ்)

2 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் (ரஹ்)

3 . அப்துர்ரஹ்மான் அல்அவ்ஸாயீ (ரஹ்) (அபூஅம்ர்-அப்துர்ரஹ்மான் பின் அம்ர்)

4 . ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
(ரஹ்)

5 . மிஸ்அர் பின் கிதாம் (ரஹ்)

6 . ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
(ரஹ்)

ஹதீஸ்களை மனனமிட்டு ஹதீஸ்துறையை பாதுகாத்தவர்கள்-ஹுஃப்பாள்.

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மது பின் ஹன்(ம்)பல்

2 . இப்னு மயீன்

3 . இப்னுல் மதீனீ

4 . அபூஸுர்ஆ அர்ராஸீ

5 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மது பின் இஸ்மாயீல்

6 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்-முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஹஜ்ஜாஜ்.

இந்தத் தகவலை இப்னு அபூயஃலா அவர்கள், அப்பாஸ் அத்தூரீ அவர்கள் கூறியதாக பதிவுசெய்துள்ளார்.

(நூல்: தபகாதுல் ஹனாபிலா-1/238)



நபித்தோழர்களிடமிருந்து அனைத்து சட்டங்களையும் முழுமையாக பெற்றவர்கள் மூன்று பேர்.

1 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)

2 . ஸைத் பின் ஸாபித் (ரலி)

3 . இப்னு அப்பாஸ் (ரலி)

இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
அவர்களிடமிருந்து கல்வியைப் பெற்றவர்களில் முக்கிய 6 பேர்.

1 . அல்கமா பின் கைஸ்

2 . அல்அஸ்வத் பின் யஸீத்

3 . உபைதா அஸ்ஸல்மானீ

4 . ஹாரிஸ் பின் கைஸ்

5 . மஸ்ரூக்

6 . அம்ர் பின் ஷுரஹ்பீல்-அபூமைஸரா அல்ஹம்தானீ

இந்த ஆறு பேரின் கல்வியைப் பெற்றவர்கள்

1 . இப்ராஹீம் அன்னகஈ

2 . ஆமிர் அஷ்ஷஅபீ

இவர்களிடமிருந்து கல்வியைப் பெற்றவர்கள்

அபூஇஸ்ஹாக், அல்அஃமஷ்

இவர்களிடமிருந்து கல்வியைப் பெற்றவர்கள்

ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
(ஸுப்யான் பின் ஸயீத் அஸ்ஸவ்ரீ)

இந்த வகையினரிடமிருந்து வரும் அறிவிப்புகளை யஹ்யா பின் ஸயீத் அவர்கள் மிகவும் விரும்புவார்கள் என்று இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் கூறியதாக இப்னுல் ஜாரூத் கூறியுள்ளார்.


ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடமிருந்து கல்வியைப் பெற்றவர்களில் முக்கியமானவர்கள்: 11 பேர்.

1 . கபீஸா பின் துஐப்

2 . காரிஜா பின் ஸைத்

3 . உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா

4 . உர்வா பின் ஸுபைர் (ரஹ்)

5 . அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)

6 . அபூபக்ர் பின் அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம்

7 . காஸிம் பின் முஹம்மத்

8 . ஸாலிம் பின் அப்துல்லாஹ்

9 . ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்)

10 . அபான் பின் உஸ்மான்

11 . ஸுலைமான் பின் யஸார்

இவர்களின் கல்வியைப் பெற்றவர்கள் 3 பேர்

1 . இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்)

2 . புகைர் பின் அப்துல்லாஹ் அல்அஷஜ்

3 . அபுஸ்ஸினாத்

இவர்களின் கல்வியைப் பெற்றவர்கள்.

மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்.

இந்த வகையினரிடமிருந்து வரும் அறிவிப்புகளை அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ அவர்கள் மிகவும் விரும்புவார்கள் என்று இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் கூறியதாக இப்னுல் ஜாரூத் கூறியுள்ளார்.


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து கல்வியைப் பெற்றவர்களில் முக்கியமானவர்கள்: 6 பேர்

1 . ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)

2 . அதாஉ (ரஹ்)

3 . இக்ரிமா (ரஹ்)

4 . முஜாஹித் (ரஹ்)

5 . ஜாபிர் பின் ஸைத்

6 . தாவூஸ் (ரஹ்)

இவர்களின் கல்வியைப் பெற்றவர் அம்ர் பின் தீனார்.

இந்த வகையினரிடமிருந்து வரும் அறிவிப்புகளை இப்னு உயைனா அவர்கள் மிகவும் விரும்புவார்கள் என்று இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் கூறியதாக இப்னுல் ஜாரூத் கூறியுள்ளார்.

இந்தத் தகவலை, இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் கூறியதாக இப்னுல் ஜாரூத் அவர்கள் அறிவித்துள்ளதை கதீப் பஃக்தாதீ அவர்கள் பதிவு செய்துள்ளார்.

(நூல்: அல்ஜாமிஉ லிஅக்லாகிர் ராவீ-1885, 2/289)


இதனுடன் தொடர்புடைய தகவல்கள்:

1 . பார்க்க: அறிவிப்பாளர்களின் தர விளக்க வார்த்தைகள் .

2 . பார்க்க: ஹதீஸை ஆய்வு செய்யும் முறை .



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.