தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

ஹுக்முல் மர்ஃபூவான செய்தி

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஹுக்முல் மர்ஃபூவான செய்தி

ஹுக்முல் மர்ஃபூஃ-நபியின் சொல் என்ற சட்டத்தை பெறும்செய்தி என்றால் என்ன?

சுருக்கம்

ஒரு நபித்தோழர், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அல்லது செய்தார்கள் என்று அல்லது செய்வதற்கு அங்கீகாரம் அளித்தார்கள் என்று அறிவித்தால், அல்லது நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புடைய செய்தியை அறிவித்தால் இவைகளுக்கு மர்ஃபூவான செய்தி என்று கூறப்படும்.

ஒரு நபித்தோழர் (சுயமாக கூறியிருப்பார் என்றோ அல்லது ஆய்வு செய்து கூறியிருப்பார் என்றோ அல்லது வேதக்காரர்களிடமிருந்து அதை பெற்றிருப்பார் என்றோ கருதமுடியாதவகையில்) சொல்லும் சொல், செய்யும் செயல் போன்றவற்றுக்கு மர்ஃபூவான செய்தி போன்றவை என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

1 . சொல்லுக்கு உதாரணம்:

  1. கடந்தக்கால நிகழ்வுகளான: உலகம் படைக்கப்பட்டவிதம், நபிமார்களின் வரலாறு போன்றவை;
  2. வருங்கால நிகழ்வுகளான: யுத்தம் பற்றியவை, பின்னால் தோன்றும் குழப்பங்கள் பற்றியவை, மறுமைநாளின் நிகழ்வுகள் பற்றியவை;
  3. குறிப்பிட்ட செயலுக்கு கிடைக்கும் நன்மை பற்றியவை, தண்டனை பற்றியவை.

2 . செயலுக்கு உதாரணம்:

  • வணக்கவழிபாடுகள் சம்பந்தப்பட்டவை…ஆய்வுக்குரியவை

3 . அங்கீகாரத்துக்கு உதாரணம்:

குறிப்பிட்ட செயலைக் காணும் போது இந்தச் செயலை நாங்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் செய்துள்ளோம் என்று கூறுவது.


விரிவான விளக்கம்:



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.