730. ஃபஜ்ருக்கு முன்பாக இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…
அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி)
«مَنْ لَمْ يُجْمِعِ الصِّيَامَ قَبْلَ الفَجْرِ، فَلَا صِيَامَ لَهُ»
730. ஃபஜ்ருக்கு முன்பாக இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…
அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி)
«مَنْ لَمْ يُجْمِعِ الصِّيَامَ قَبْلَ الفَجْرِ، فَلَا صِيَامَ لَهُ»
7908. ஃபஜ்ருக்கு முன்பு இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது…
அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி)
பைஹகீ இமாம் கூறுகிறார்கள்:
அப்துல்லாஹ் பின் அபீ பக்ர் தான் இந்தச் செய்தியை நபியின் கூற்றாக அறிவித்துள்ளார். அவர் உறுதியானவர். வலிமையானவர்.
مَنْ لَمْ يُجْمِعِ الصِّيَامَ مَعَ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ
2213. சூரியன் உதிப்பதற்கு முன்பு இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
«مَنْ لَمْ يُبَيِّتِ الصِّيَامَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ»
2332. ஃபஜ்ருக்கு முன்பாக இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி)
«مَنْ لَمْ يُبَيِّتِ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ، فَلَا صِيَامَ لَهُ»
2260. …ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். இரத்தம் கொடுத்தவரும் எடுத்தவரும் நோன்பை விட்டு விட்டனர் என்று அப்போது கூறினர்கள். இதன் பிறகு நோன்பாளி இரத்தம் கொடுக்க அனுமதி வழங்கினார்கள்…
أَوَّلُ مَا كُرِهَتِ الْحِجَامَةُ لِلصَّائِمِ أَنَّ جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ احْتَجَمَ وَهُوَ صَائِمٌ , فَمَرَّ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ: «أَفْطَرَ هَذَانِ» ,
ثُمَّ رَخَّصَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ فِي الْحِجَامَةِ لِلصَّائِمِ ,
وَكَانَ أَنَسٌ يَحْتَجِمُ وَهُوَ صَائِمٌ.
2367. …இரத்தம் கொடுப்பவரும் எடுப்பவரும் நோன்பை முறித்து விட்டனர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் கூறினார்கள்…
«أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ»،
17112. …இரத்தம் கொடுப்பவரும் எடுப்பவரும் நோன்பை முறித்து விட்டனர் என்று நபி (ஸல்) அவா்கள் கூறினார்கள்…
أَنَّهُ مَرَّ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الْفَتْحِ عَلَى رَجُلٍ يَحْتَجِمُ بِالْبَقِيعِ لِثَمَانِ عَشْرَةَ خَلَتْ مِنْ رَمَضَانَ وَهُوَ آخِذٌ بِيَدِي، فَقَالَ: «أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ»
2277. பயணத்தில் உள்ளவருக்கு நோன்பையும் தொழுகையில் பாதியையும் இறைவன் தளர்த்தியுள்ளான். மேலும் பாலூட்டும் பெண்ணுக்கும் கர்ப்பிணிக்கும் (நோன்பு நோற்காமல் இருக்க சலுகை வழங்கியுள்ளான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : நபித்தோழர்களில் ஒருவர்…
أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَةٍ فَإِذَا هُوَ يَتَغَدَّى، قَالَ: «هَلُمَّ إِلَى الْغَدَاءِ»، فَقُلْتُ: إِنِّي صَائِمٌ، قَالَ: ” هَلُمَّ أُخْبِرْكَ عَنِ الصَّوْمِ: إِنَّ اللَّهَ وَضَعَ عَنِ الْمُسَافِرِ نِصْفَ الصَّلَاةِ وَالصَّوْمَ، وَرَخَّصَ لِلْحُبْلَى وَالْمُرْضِعِ
2440. அரஃபாவில் உள்ளவர்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை விட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்…
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
كُنَّا عِنْدَ أَبِي هُرَيْرَةَ، فِي بَيْتِهِ فَحَدَّثَنَا، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ»
2416. ஆஷூராவுடைய நோன்பு (துல்ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் நோன்பு நோற்பது ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னால் உள்ள இரண்டு ரக்அத்கள் இந்த நான்கு நல்லறங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டதே இல்லை.
அறிவிப்பவர்: ஹஃப்ஸா (ரலி)
أَرْبَعٌ لَمْ يَكُنْ يَدَعُهُنَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: صِيَامَ عَاشُورَاءَ، وَالْعَشْرَ، وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ
சமீப விமர்சனங்கள்