தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-3949

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3949. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு மனிதர் குறித்து மதிப்பும், உயர்வும் மிக்க நம்முடைய இறைவன் வியப்படைகிறான். (அதில் முதலாமவர்:) தனது படுக்கை, போர்வை, மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் தொழுகைக்காக எழும் மனிதர். மேலும் இவரைப் பற்றி அவன், தனது வானவர்களிடம் கூறுகிறான்: “என்னுடைய வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள் ! படுக்கை, போர்வை, மனைவி, மக்கள் அத்தனையையும் உதறி விட்டு அதிகாலையில் எழுந்து விட்டான். (எதற்காக?) என்னிடமிருந்து கிடைக்கும் அருள் மீது ஆசை வைத்து; என்னிடமிருந்து கிடைக்கும் தண்டனையைப் பயந்து (இவ்வாறு நடந்துக் கொள்கிறான்)

(அதில் இரண்டாவது மனிதர்:) அல்லாஹ்வின் பாதையில் போரிடும் மனிதர். தன் அணியினர் தோல்வியடையும் சமயம், தான் வெருண்டோடுவது பற்றியும் அதனால் தனக்கு உண்டாகும் பாதகத்தையும், (வெருண்டு ஓடாமல்) முன்னேறி செல்வதால் தனக்கு கிடைக்கும் நன்மை பற்றியும் அறிந்து முன்னேறி சென்று சண்டையில் இரத்தம் ஓட்டப்பட்டு கொல்லப்பட்டவர். மேலும் இவரைப் பற்றி அவன், தனது வானவர்களிடம் கூறுகிறான்: “என்னுடைய வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள் ! (போரில் வெருண்டோடாமல்) முன்னேறி செல்கிறான். (எதற்காக?) என்னிடமிருந்து கிடைக்கும் அருள் மீது ஆசை வைத்து; என்னிடமிருந்து கிடைக்கும் தண்டனையைப் பயந்து (இவ்வாறு) இரத்தம் ஓட்டப்பட்டு கொல்லப்படுகிறான்.

அறிவிப்பவர்: (ரலி)

இப்னு மஸ்ஊத் (ரலி)

عبد الله بن مسعود

இறப்பு: ஹிஜ்ரி 32, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் பின் ஃகாஃபில் பின் ஹபீப் பின் ஷம்க் பின் ஃபார் பின் மக்ஸூம் பின் ஸாஹிலா பின் காஹில் பின் அல்ஹாரிஸ்

தந்தை பெயர்: மஸ்வூத் பின் ஃகாஃபில்

வம்சம்: அல்ஹுதல், பனூ ஸுஹ்ரா கூட்டாளியாவார்

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, அபிசீனியா, மதீனா, கூஃபா

பிறப்பு: மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 32, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் மிக நெருக்கமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் தேவைகளை நிறைவேற்றுபவராகவும், அவர்களின் பயணங்களில் உடன் செல்பவராகவும் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் குணநலன்களில் மிக நெருக்கமானவராகக் கருதப்பட்டார்கள்.

குர்ஆனை மிகச் சிறப்பாக ஓதக்கூடியவராகவும், அதன் விளக்கங்களை நன்கு அறிந்தவராகவும் இருந்தார்கள். ஹிஜ்ரி 32 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), ஸஃத் பின் முஆத், உமர் பின் கத்தாப் (ரலி), ஸஃப்வான் பின் அஸ்ஸால்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ், அபூ உபைதா பின் அப்துல்லாஹ் பின் மஸ்வூத், அப்துல்லாஹ் பின் உத்பா, அபூ ஸயீத் அல்குத்ரீ, அனஸ் பின் மாலிக், ஜாபிர் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் உமர், அபூ மூஸா அல்அஷ்அரீ, அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அல்கமா பின் கைஸ், அல்அஸ்வத் பின் யஸீத், மஸ்ரூக் பின் அல்அஜ்தஃ

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத், அபூ அப்துர்ரஹ்மான், இப்னு உம்மி அப்த்


ஆதாரம்: muslimscholars.info (16) · Should verify


حَدَّثَنَا رَوْحٌ، وَعَفَّانُ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ عَفَّانُ: أَخْبَرَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنِ مُرَّةَ الْهَمْدَانِيِّ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

عَجِبَ رَبُّنَا عَزَّ وَجَلَّ مِنْ رَجُلَيْنِ: رَجُلٍ ثَارَ عَنْ وِطَائِهِ وَلِحَافِهِ، مِنْ بَيْنِ أَهْلِهِ وَحَيِّهِ إِلَى صَلَاتِهِ، فَيَقُولُ رَبُّنَا: أَيَا مَلَائِكَتِي، انْظُرُوا إِلَى عَبْدِي، ثَارَ مِنْ فِرَاشِهِ وَوِطَائِهِ، وَمِنْ بَيْنِ حَيِّهِ وَأَهْلِهِ إِلَى صَلَاتِهِ، رَغْبَةً فِيمَا عِنْدِي، وَشَفَقَةً مِمَّا عِنْدِي، وَرَجُلٍ غَزَا فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَانْهَزَمُوا، فَعَلِمَ مَا عَلَيْهِ مِنَ الْفِرَارِ، وَمَا لَهُ فِي الرُّجُوعِ، فَرَجَعَ حَتَّى أُهْرِيقَ دَمُهُ، رَغْبَةً فِيمَا عِنْدِي، وَشَفَقَةً مِمَّا عِنْدِي، فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِمَلَائِكَتِهِ: انْظُرُوا إِلَى عَبْدِي، رَجَعَ رَغْبَةً فِيمَا عِنْدِي، وَرَهْبَةً مِمَّا عِنْدِي، حَتَّى أُهَرِيقَ دَمُهُ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-3949.
Musnad-Ahmad-Alamiah-3753.
Musnad-Ahmad-JawamiulKalim-3819.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . ரவ்ஹ் பின் உபாதா, 3 . அஃப்பான் பின் முஸ்லிம்

4 . ஹம்மாத் பின் ஸலமா

5 . அதாஉ பின் ஸாயிப்

6 . முர்ரா அல்ஹம்தானீ

7 . இப்னு மஸ்வூத் (ரலி)


இந்தச் செய்தி நபியின் சொல்லாகவும் வந்துள்ளது. நபித்தோழரின் சொல்லாகவும் வந்துள்ளது.

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (5/ 267)
869- وَسُئِلَ عَنْ حَدِيثِ مُرَّةَ الْهَمْدَانِيِّ، عَنِ ابْنِ مسعود، عن النبي: عَجِبَ رَبُّنَا مِنْ رَجُلَيْنِ: رَجُلٌ ثَارَ عَنْ وِطَائِهِ وَلِحَافِهِ إِلَى صَلَاتِهِ، وَرَجُلٌ غَزَا فِي سَبِيلِ اللَّهِ فَانْهَزَمَ النَّاسُ وَرَجَعَ حَتَّى أُهْرِيقَ دَمُهُ، … الْحَدِيثَ.
فَقَالَ: يَرْوِيهِ عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ مُرَّةَ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَفَعَهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ.
وَوَقَفَهُ خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَطَاءٍ.


وَرَوَى هَذَا الْحَدِيثَ قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ مَرْفُوعًا. تَفَرَّدَ بِهِ يَحْيَى الْحِمَّانِيُّ، عَنْ قَيْسٍ.


وَرَوَاهُ إِسْرَائِيلُ وَاخْتُلِفَ عَنْهُ؛
فَقَالَ أَحْمَدُ بْنُ يُونُسَ عَنْ إسرائيل، عن أبي إسحاق، عن أبي الأحوص، وَأَبِي الْكَنُودِ، عَنْ عَبْدِ اللَّهِ مَوْقُوفًا.
وَقَالَ يَحْيَى بْنُ آدَمَ: عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، وَأَبِي الْكَنُودِ مَوْقُوفًا. وَالصَّحِيحُ هُوَ الْمَوْقُوفُ.


1 . இந்த செய்தியை அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸலமா அவர்கள், அதாஉ பின் ஸாயிப் —> முர்ரா அல்ஹம்தானீ —> இப்னு மஸ்வூத் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.

(நூல்:அஹ்மத்-3949)

அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் காலித் பின் அப்துல்லாஹ் அவர்கள், அதாஉ பின் ஸாயிப் —> முர்ரா அல்ஹம்தானீ —> இப்னு மஸ்வூத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.

(நூல்: அத்தஹஜ்ஜுத் வ கியாமுல்லைல்-249) 


2 . மேலும் கைஸ் பின் ரபீஉ என்பவர், அபூஇஸ்ஹாக் —> முர்ரா அல்ஹம்தானீ —> இப்னு மஸ்வூத் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-869) 

(கைஸ் பின் ரபீஉ அவரிடமிருந்து யஹ்யா அல்ஹிமானீ மட்டும் இவ்வாறு தனித்து அறிவித்துள்ளார். கைஸ் பலவீனமானவர் என்பதால் இதை பொருட்படுத்த தேவையில்லை)


3 . இஸ்ராயீல் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் யூனுஸ்
அவர்கள், இஸ்ராயீல் —> அபூஇஸ்ஹாக் —> அபுல்அஹ்வஸ், அபுல்கனூத் —> இப்னு மஸ்வூத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.

இஸ்ராயீல் அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் ஆதம் அவர்கள், இஸ்ராயீல் —> அபூஇஸ்ஹாக் —> அபூஉபைதா, அபுல்கனூத் —> இப்னு மஸ்வூத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.

இவ்வாறு மேற்கண்ட அறிவிப்பாளர்தொடர்களை கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இந்த செய்தியை (அதிகமானவர்கள் நபித்தோழரின் சொல்லாக அறிவித்திருப்பதால்) இந்த செய்தியை நபித்தோழரின் சொல் என்று கூறுவதே பொருத்தமானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-869, 5/266)


நபித்தோழரின் சொல்லாக வந்துள்ள செய்திகளில் விமர்சனங்கள் இருப்பதாலும், அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து (அவர் மூளை குழம்புவதற்கு முன்) அவரிடமிருந்து செவியேற்றவர்களான ஹம்மாத் பின் ஸலமா, ஸாயிதா பின் குதாமா ஆகியோர் இந்த செய்தியை நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர் என்பதாலும் இது நபியின் சொல்லாக வந்திருப்பது சரியானதே என்று ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் கூறியுள்ளார்.

இதற்கான காரணங்கள்:

1 . காலித் பின் அப்துல்லாஹ் அவர்கள், அதாஉ பின் ஸாயிப் மூளை குழம்பிய பிறகே அவரிடமிருந்து ஹதீஸைக் கேட்டுள்ளார். ஹம்மாத் பின் ஸலமா அவர்கள், அதாஉ பின் ஸாயிப் மூளை குழம்புவதற்கு முன் அவரிடமிருந்து ஹதீஸைக் கேட்டுள்ளார்.

2 . ஹம்மாத் பின் ஸலமா அவர்களைப் போன்றே ஸாயிதா பின் குதாமாவும் அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து நபியின் சொல்லாக அறிவித்துள்ளார். ஸாயிதா பின் குதாமா அவர்கள், அதாஉ பின் ஸாயிப் மூளை குழம்புவதற்கு முன் அவரிடமிருந்து ஹதீஸைக் கேட்டுள்ளார்.

(நூல்: மூளிஹு அவ்ஹாமில் ஜம்இ வத்தஃப்ரீக்-1703)

என்றாலும் இதில் வரும் ஹஸன் பின் அஹ்மத் பலவீனமானவர்.


3 . அபுல்அஹ்வஸ் இந்த செய்தியை ஷரீக் பின் அப்துல்லாஹ் வழியாக அறிவித்துள்ளார் என்பதால் ஷரீக் பலவீனமானவர் என்பதால் அதைப்பொருட்படுத்த தேவையில்லை.

4 . அபூஉபைதா அவர்கள், தனது தந்தை இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை. எனவே மீதியிருப்பது இஸ்ராயீல் —> அபூஇஸ்ஹாக் —> அபுல்கனூத் —> இப்னு மஸ்வூத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடர் மட்டுமே. (இஸ்ராயீல் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இருவரும் வெவ்வேறு அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர் என்பதும் இதில் குறையை ஏற்படுத்துகிறது என்பது தனி விசயம்)

  • எனவே நபியின் சொல்லாக வந்துள்ள செய்திக்கு எதிராக ஒரே ஒரு மவ்கூஃபான செய்தி இருப்பதாலும், மேலும் தரத்திலும் சமமாக இருப்பதாலும், பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்ற அடிப்படையில் முத்தஸிலாக வரும் செய்திக்கே முன்னுரிமை என்பதால் மேற்கண்ட அஹ்மத்-3949 எண்ணில் இடம்பெறும், ஹம்மாத் பின் ஸலமா —> அதாஉ பின் ஸாயிப் —> முர்ரா —> இப்னு மஸ்வூத் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும்.

ஹம்மாத் பின் ஸைத் நபித்தோழரின் சொல்லாக அறிவிக்கும் ஒரு செய்தியையும் சிலர் இதனுடன் இணைத்து இதை மவ்கூஃப் என்று கூறியுள்ளனர்..இது பற்றி…

…


1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

நபியின் சொல்லாக வந்துள்ள செய்திகள்:

  • அதாஉ பின் ஸாயிப் —> முர்ரா —> இப்னு மஸ்வூத் (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-19402, அஹ்மத்-3949, அபூதாவூத்-2536, முஸ்னத் அபீ யஃலா-5272, 5361, 5362, இப்னு ஹிப்பான்-2557, 2558, அல்முஃஜமுல் கபீர்-10383, ஹாகிம்-2531, குப்ரா பைஹகீ-17930, 18524,


நபித்தோழரின் சொல்லாக வந்துள்ள செய்திகள்:

  • அபூஇஸ்ஹாக் —> அபூஉபைதா —> இப்னு மஸ்வூத் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21202, குப்ரா நஸாயீ-10637, அல்முஃஜமுல் கபீர்-8798,


…இன்ஷா அல்லாஹ் மற்ற தகவல்கள் பிறகு சேர்க்கப்படும்.

அஹ்மத் இமாம்

இமாம் அஹ்மத்

முழுப்பெயர் : அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் இப்னு ஹிலால் இப்னு அஸது அஷ்ஷைபானீ (முஸ்னத் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர் : அபூஅப்தில்லாஹ்

இயற்பெயர் : அஹ்மத்

தந்தைப்பெயர் : முஹம்மது

பிறந்த ஊர் : பக்தாதில் பிறந்தார்

பிறந்த நாள் :  ஹிஜ்ரி 164ம் ஆண்டு

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:  கூஃபா, பஸரா, மக்கா, மதீனா, யமன், ஷாம், ஜஸீரா போன்ற உலகில் உள்ள பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

முஸ்னத் அஹ்மத்

அஸ்ஸுஹுத்

ஃபலாயிலுஸ் ஸஹாபா (ஸஹாபாக்களின் சிறப்பு)

அல்அஷ்ரிபத்

அல்இலல்

அன்னாஸிஹ் வல்மன்ஸுஹ்

அல்மனாசிக்

கிதாபுல் ஃபிதன்

கிதாபுல் ஃபலாயிலி அஹ்லில் பைத்

முஸ்னத் அஹ்லில் பைத்

அல்அஸ்மாவு வல்குனா ( அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது)

கிதாபுத்தாரிக்

அல்முகத்தமு வல்முதஅக்கர் (முந்தியவர்கள் பிந்தியவர்கள்)

இப்ராஹீம் இப்னு காலித் அஸ்ஸன்ஆனி, இஸ்மாயீல் இப்னு உலய்யா, அபூபக்கர் இப்னு அய்யாஷ், இஸ்ஹாக் இப்னு யூசுஃப் அல்அஸ்ரக், ரபிஃ இப்னு உலய்யா, ரவ்ஹ் இப்னு உப்பாதா, சுஃப்யான் இப்னு உஐனா, தல்க் இப்னு நகயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

முஹம்மது இப்னு இஸ்மாயீல் அல்புகாரி, முஸ்லிம் இப்னு  ஹஜ்ஜாஜ், அபூதாவூத், அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹ்ம்மத் இப்னு ஹானீல்பக்தாதீ, அபூஹாதம் முஹம்மத் இப்னு இத்ரீஸ், யஹ்யா இப்னு மயீன், அலீ இப்னு மதீனீ போன்ற அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 241ஆம் வருடம் ரபீவுல்அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார். பக்தாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமை அன்று மரணித்தார். அப்போது அவருக்கு 77 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

ரவ்ஹ் பின் உபாதா, 3 . அஃப்பான் பின் முஸ்லிம்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஹம்மாத் பின் ஸலமா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அதாஉ பின் ஸாயிப்

عطاء بن السائب

இறப்பு: ஹிஜ்ரி 136

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அதாஉ பின் ஸாயிப் பின் ஸைத் அத்தகஃபீ

தந்தை பெயர்: ஸாயிப் பின் மாலிக்

வம்சம்: தகஃபீ

புனைப்பெயர்: அபூ ஸாயிப், அபூ யஸீத், அபூ ஸைத், அபூ முஹம்மத்

ஊர் பெயர்: கூஃபா

பயணித்த ஊர்கள்: கூஃபா

இறப்பு: ஹிஜ்ரி 136

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அதாஉ பின் ஸாயிப் ரஹ் ஒரு தாபிஈ ஆவார். அவர் கூஃபா நகரைச் சேர்ந்தவர். அவர் ஹிஜ்ரி 136 இல் மரணமடைந்தார்.

அவர் பலமானவர் என்ற தரத்தில் உள்ளவர். அவரது வாழ்வின் இறுதிப்பகுதியில் அவரது நினைவாற்றல் மாறியது. எனவே, அவரிடமிருந்து சிறுவயதில் ஹதீஸ் அறிவித்தவர்கள் பலமானவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸாயிப் பின் மாலிக், அனஸ் பின் மாலிக், அப்துல்லாஹ் பின் அபூ அவ்ஃபா, அம்ர் பின் ஹுரைத் அல்மக்ஸூமீ, ஸயீத் பின் ஜுபைர், முஜாஹித் பின் ஜப்ர், ஹுஸைன் பின் ஜுன்துப் பின் அல்ஹாரிஸ், இப்ராஹீம் அன்னகஈ, அல்ஹஸன் அல்பஸரீ, ஸல்ம் அல்பர்ராத் அபூ அப்து, ஸயீத் பின் அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா, ஆமிர் அஷ்ஷஅபீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): இஸ்மாயீல் பின் அபூ காலித் அல்அஹ்மஸீ, ஸுலைமான் பின் தர்கான் அத்தைமீ, ஸுலைமான் அல்அஃமஷ், இப்னு ஜுரைஜ், ஹம்மாத் பின் ஸலமா, ஹம்மாத் பின் ஸைத், ஸுஃப்யான் பின் ஸயீத் அத்தவ்ரீ, ஸுஃப்யான் பின் உயைனா, ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், ஸாயிதா பின் கதாமது அத்தகஃபீ, மஸ்அர் பின் கதாம், இஸ்மாயீல் பின் இப்ராஹீம் - இப்னு அலிய்யா

வேறு பெயர்கள்: அபூ ஸாயிப், அபூ யஸீத், அபூ ஸைத், அபூ முஹம்மத்


ஆதாரம்: muslimscholars.info (11068) · Should verify

முர்ரா அல்ஹம்தானீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

இப்னு மஸ்வூத் (ரலி)

عبد الله بن مسعود

இறப்பு: ஹிஜ்ரி 32, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் பின் ஃகாஃபில் பின் ஹபீப் பின் ஷம்க் பின் ஃபார் பின் மக்ஸூம் பின் ஸாஹிலா பின் காஹில் பின் அல்ஹாரிஸ்

தந்தை பெயர்: மஸ்வூத் பின் ஃகாஃபில்

வம்சம்: அல்ஹுதல், பனூ ஸுஹ்ரா கூட்டாளியாவார்

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, அபிசீனியா, மதீனா, கூஃபா

பிறப்பு: மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 32, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் மிக நெருக்கமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் தேவைகளை நிறைவேற்றுபவராகவும், அவர்களின் பயணங்களில் உடன் செல்பவராகவும் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் குணநலன்களில் மிக நெருக்கமானவராகக் கருதப்பட்டார்கள்.

குர்ஆனை மிகச் சிறப்பாக ஓதக்கூடியவராகவும், அதன் விளக்கங்களை நன்கு அறிந்தவராகவும் இருந்தார்கள். ஹிஜ்ரி 32 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), ஸஃத் பின் முஆத், உமர் பின் கத்தாப் (ரலி), ஸஃப்வான் பின் அஸ்ஸால்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ், அபூ உபைதா பின் அப்துல்லாஹ் பின் மஸ்வூத், அப்துல்லாஹ் பின் உத்பா, அபூ ஸயீத் அல்குத்ரீ, அனஸ் பின் மாலிக், ஜாபிர் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் உமர், அபூ மூஸா அல்அஷ்அரீ, அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அல்கமா பின் கைஸ், அல்அஸ்வத் பின் யஸீத், மஸ்ரூக் பின் அல்அஜ்தஃ

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத், அபூ அப்துர்ரஹ்மான், இப்னு உம்மி அப்த்


ஆதாரம்: muslimscholars.info (16) · Should verify

2 comments on Musnad-Ahmad-3949

  1. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக… மொழிபெயர்ப்பில் தொழுகைக்காக எழுவது என்ற வார்த்தை விடுபட்டுள்ளதாக நினைக்கிறேன்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. மொழிப்பெயர்ப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.