Month: December 2020

Kubra-Bayhaqi-2749

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2749. ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவித்தார்.

நான் ஒரு முறை நபி ஸல் அவர்களுடன் இரவுத் தொழுகை தொழுதேன்…

நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே, ‘ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு; இறைவா! என்னை மன்னித்து விடு)’ என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள், மேலும்  (இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே) ஸஜ்தாவில் இருக்கும் அளவு (தாமதித்து) இருப்பார்கள்.


أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ الْحَدِيثَ قَالَ: وَكَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: ” رَبِّ اغْفِرْ لِي رَبِّ اغْفِرْ لِي، وَجَلَسَ بِقَدْرِ سُجُودِهِ


Darimi-1363

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1363. நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே, ‘ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு; இறைவா! என்னை மன்னித்து விடு)’ என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள் என ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

அப்போது (ஹுதைஃபா (ரலி) அவர்களிடம்) அப்துல்லாஹ்வே நீங்கள் கூறுவீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள் நான் சில நேரம் கூறுவேன். சில நேரம் கூறாமல் இருப்பேன்.” என்று பதிலளித்தார்கள்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: «رَبِّ اغْفِرْ لِي»

فَقِيلَ لِعَبْدِ اللَّهِ: تَقُولُ هَذَا؟ قَالَ: رُبَّمَا قُلْتُ، وَرُبَّمَا سَكَتُّ


Ibn-Majah-897

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

897. நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே, ‘ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு; இறைவா! என்னை மன்னித்து விடு)’ என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: «رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي»


Tirmidhi-2904

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2904. குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


الَّذِي يَقْرَأُ القُرْآنَ وَهُوَ مَاهِرٌ بِهِ مَعَ السَّفَرَةِ الكِرَامِ البَرَرَةِ، وَالَّذِي يَقْرَؤُهُ – قَالَ هِشَامٌ: وَهُوَ شَدِيدٌ عَلَيْهِ. قَالَ شُعْبَةُ: وَهُوَ عَلَيْهِ شَاقٌّ – فَلَهُ أَجْرَانِ


Ibn-Majah-529

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

529. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் போது, ஒரு கிராமவாசி பள்ளிக்குள் நுழைந்து, “யா அல்லாஹ்! எனக்கும் முஹம்மதுக்கும் மன்னிப்பை வழங்குவாயாக! எங்களுடன் சேர்த்து வேறு யாருக்கும் நீ மன்னிப்பளிக்காதே!” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடனே சிரித்து விட்டார்கள். “(அல்லாஹ்வின்) விசாலமான தன்மைக்கு நீ தடை விதிக்கின்றாயே!” என்று கூறினார்கள்.

பிறகு அவர் பள்ளியின் ஓரத்தில் ஆடையை அகற்றி சிறுநீர் கழிக்கலானார். (தான் தவறு செய்து விட்டோம் என்று) அவர் உணர்ந்த பின் என்னருகில் வந்து நின்று கொண்டு, “அவர்கள் கடுமையாக எச்சரிக்கவில்லை. ஏசவில்லை” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது பள்ளிவாசலாகும். இதனுள் சிறுநீர் கழிக்கப் படலாகாது. இது அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காகவும் தொழுவதற்காகவுமே கட்டப் பட்டுள்ளது” என்று கூறி ஒரு வாளி தண்ணீர் கொண்டு வர உத்தரவிட்டார்கள். அது அவரது சிறுநீரில் ஊற்றப்பட்டது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


دَخَلَ أَعْرَابِيٌّ الْمَسْجِدَ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ، فَقَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي وَلِمُحَمَّدٍ وَلَا تَغْفِرْ لِأَحَدٍ مَعَنَا، فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «لَقَدْ احْتَظَرْتَ وَاسِعًا» ثُمَّ وَلَّى، حَتَّى إِذَا كَانَ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ، فَشَجَ يَبُولُ، فَقَالَ: الْأَعْرَابِيُّ بَعْدَ أَنْ فَقِهَ، فَقَامَ إِلَيَّ بِأَبِي وَأُمِّي، فَلَمْ يُؤَنِّبْ، وَلَمْ يَسُبَّ، فَقَالَ: «إِنَّ هَذَا الْمَسْجِدَ لَا يُبَالُ فِيهِ، وَإِنَّمَا بُنِيَ لِذِكْرِ اللَّهِ وَلِلصَّلَاةِ، ثُمَّ أَمَرَ بِسَجْلٍ مِنْ مَاءٍ، فَأُفْرِغَ عَلَى بَوْلِهِ»


Abu-Dawood-2142

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2142. அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது, “நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது. வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி)


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا حَقُّ زَوْجَةِ أَحَدِنَا عَلَيْهِ؟، قَالَ: «أَنْ تُطْعِمَهَا إِذَا طَعِمْتَ، وَتَكْسُوَهَا إِذَا اكْتَسَيْتَ، أَوِ اكْتَسَبْتَ، وَلَا تَضْرِبِ الْوَجْهَ، وَلَا تُقَبِّحْ، وَلَا تَهْجُرْ إِلَّا فِي الْبَيْتِ»، قَالَ أَبُو دَاوُدَ: ” وَلَا تُقَبِّحْ أَنْ تَقُولَ: قَبَّحَكِ اللَّهُ


Tirmidhi-1162

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1162. இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே!

உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«أَكْمَلُ المُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا، وَخَيْرُكُمْ خَيْرُكُمْ لِنِسَائِهِمْ»


Almujam-Alkabir-315

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

315. கஅப் பின் உஜ்ரா (ரலி) அறிவித்தார் :

நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் மிம்பரின் முதல் படியில் ஏறும் போது “ஆமீன்” என்று கூறினார்கள். இரண்டாவது படியில் ஏறும் போதும் “ஆமீன்” என்று கூறினார்கள். மூன்றாவது படியில் ஏறும் போதும் “ஆமீன்” என்று கூறினார்கள். அவர்கள் இறங்கி சிறிது ஓய்வுக்குபின் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (என்றைக்குமே) கேள்விப்படாத ஒன்றை இன்று உங்களிடமிருந்து செவியேற்றோமே என்று கேட்டோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் செவியேற்றீர்களா? என்று கேட்க, நாங்கள் ஆம் என்று கூறினோம்.

நான் முதல் படியில் ஏறும் போது ஜிப்ரீல் (அலை) எனக்கு காட்சி தந்து ஒருவனிடத்தில் அவனுடைய பெற்றோர்களில் இருவரோ அல்லது ஒருவரோ வயோதிகப் பருவத்தை அடைந்து (அவர்களுக்கு பணிவிடை செய்வதின் மூலம்) அந்த இருவரும் இவனை சுவர்க்கத்தில் நுழைவிக்கவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்று கூறினேன்.

நான் இரண்டாவது படியில் ஏறும் போது யாரிடத்தில் (முஹம்மதாகிய) நீங்கள் நினைவுகூறப்பட்டும் அவன் உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்று கூறினேன்.

நான் மூன்றாவது படியில் ஏறும் போது யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவன் பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவனுக்கு இறையருள்

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمًا إِلَى الْمِنْبَرِ فَقَالَ حِينَ ” ارْتَقَى دَرَجَةً: «آمِينَ» ، ثُمَّ ارْتَقَى الْأُخْرَى فَقَالَ: «آمِينَ» ، ثُمَّ ارْتَقَى الثَّالِثَةَ فَقَالَ: «آمِينَ» ، فَلَمَّا نَزَلَ عَنِ الْمِنْبَرِ وَفَرَغَ، قُلْنَا: يَا رَسُولَ اللهِ لَقَدْ سَمِعْنَا مِنْكَ كَلَامًا الْيَوْمَ مَا كُنَّا نَسْمَعُهُ قَبْلَ الْيَوْمِ؟، قَالَ: «وَسَمِعْتُمُوهُ؟» ، قَالُوا: نَعَمْ، قَالَ: ” إِنَّ جِبْرِيلَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَ لِي حِينَ ارْتَقَيْتُ دَرَجَةً فَقَالَ: بَعُدَ مَنْ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبْرِ أَوْ أَحَدَهُمَا لَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ، قَالَ: قُلْتُ: آمِينَ، وَقَالَ: بَعُدَ مَنْ ذُكِرْتُ عِنْدَهُ وَلَمْ يُصَلِّ عَلَيْكَ، فَقُلْتُ: آمِينَ، ثُمَّ قَالَ: بَعُدَ مَنْ أَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ، فَقُلْتُ: آمِينَ


Shuabul-Iman-1471

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1471. கஅப் பின் உஜ்ரா (ரலி) அறிவித்தார் :

நபி (ஸல்) அவர்கள் அனைவரும் மிம்பருக்கு (அருகில்) வாருங்கள் என்று கூறினார்கள். நாங்கள் அனைவரும் ஆஜரானோம். அப்போது முதல் படியில் ஏறும் போது “ஆமீன்” என்று கூறினார்கள். இரண்டாவது படியில் ஏறும் போதும் “ஆமீன்” என்று கூறினார்கள். மூன்றாவது படியில் ஏறும் போதும் “ஆமீன்” என்று கூறினார்கள். அவர்கள் இறங்கிய உடன் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் (என்றைக்குமே) கேள்விப்படாத ஒன்றை இன்று உங்களிடமிருந்து செவியேற்றோமே என்று கேட்டோம்.

நான் முதல் படியில் ஏறும் போது ஜிப்ரீல் (அலை) எனக்கு காட்சி தந்து யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவன் பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்றேன். நான் இரண்டாவது படியில் ஏறும் போது யாரிடத்தில் (முஹம்மதாகிய) நீங்கள் நினைவுகூறப்பட்டும் அவன் உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்று கூறினேன். நான் மூன்றாவது படியில் ஏறும் போது ஒருவனிடத்தில் அவனுடைய பெற்றோர்கள் வயோதிகப் பருவத்தை அடைந்து (அவர்களுக்கு பணிவிடை செய்வதின் மூலம்) அந்த இருவரும் இவனை சுவர்கத்தில் நுழைவிக்கவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்று கூறினேன் என்று (பதில்)

احْضُرُوا الْمِنْبَرَ ” فَحَضَرْنَا، فَلَمَّا ارْتَقَى دَرَجَةً قَالَ: ” آمِينَ “، فَلَمَّا ارْتَقَى الدَّرَجَةَ الثَّانِيَةَ قَالَ: ” آمِينَ “، فَلَمَّا ارْتَقَى الدَّرَجَةَ الثَّالِثَةَ قَالَ: ” آمِينَ “، فَلَمَّا فَرَغَ نَزَلَ مِنَ الْمِنْبَرِ قَالَ: فَقُلْنَا له يَا رَسُولَ اللهِ لَقَدْ سَمِعْنَا الْيَوْمَ مِنْكَ شَيْئًا لَمْ نَكُنْ نَسْمَعُهُ قَالَ: ” إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامِ عَرْضَ لِي فَقَالَ: بَعُدَ مَنْ أَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ فَقُلْتُ: آمِينَ فَلَمَّا رَقِيتُ الثَّانِيَةَ قَالَ: بَعُدَ مَنْ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَقُلْتُ: آمِينَ، فَلَمَّا رَقِيتُ الثَّالِثَةَ قَالَ: بَعُدَ مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ الْكِبَرَ عِنْدَهُ أَوْ أَحَدُهُمَا، فلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ – أَظُنُّهُ قَالَ – فَقُلْتُ: آمِينَ


Almujam-Alawsat-8994

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8994. …

அபூஹுரைரா (ரலிஅவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு முறை நபி {ஸல்} அவர்கள் சொற்பொழிவு மேடை மீது ஏறும் போது மூன்று முறை “ஆமீன்” கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் மிம்பரின் மீது ஏறும் போது “ஆமீன்” என மூன்று முறை கூறினீர்களே! இது போன்று) இதற்கு முன் செய்ததில்லையே என வினவப்பட்டது.

என்னிடம் வானவர் ஜிப்ரயீல் (அலை) வருகை தந்து தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார். நான் ஆமீன் என்றேன்.

யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவன் பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவன் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார். நான் ஆமீன் என்றேன்.

யாரிடத்தில் (முஹம்மதாகிய) நீங்கள் நினைவுகூறப்பட்டும் அவன் உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவன் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார். நான் ஆமீன் என்றேன்” என்று (பதில்) கூறினார்கள்.


«آمِينَ آمِينَ آمِينَ» فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ مَا كُنْتَ تَصْنَعُ هَذَا؟ فَقَالَ: «قَالَ لِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ: رَغِمَ أَنْفُ عَبْدٍ – أَوْ بَعُدَ – دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ فَلَمْ يُغْفَرْ لَهُ، فَقُلْتُ: آمِينَ، ثُمَّ قَالَ: رَغِمَ أَنْفُ عَبْدٍ – أَوْ بَعُدَ – أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يُدْخِلْهُ الْجَنَّةَ، فَقُلْتُ: آمِينَ، ثُمَّ قَالَ: رَغِمَ أَنْفُ عَبْدٍ – أَوْ بَعُدَ – ذُكِرْتَ عَنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ، فَقُلْتُ: آمِينَ»

 


Next Page » « Previous Page