தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-897

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

897. நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே, ‘ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு; இறைவா! என்னை மன்னித்து விடு)’ என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : (ரலி)

ஹுதைஃபா (ரலி)

ஹுதைஃபா-அல்அப்ஸீ (ரலி) – Hudhayfah ibn al-Yaman

இறப்பு: ஹிஜ்ரி 36, மதாஇன்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஹுதைஃபா பின் ஹுஸைல் பின் ஜாபிர்

தந்தை பெயர்: அல்யமான் பின் ஜாபிர்

வம்சம்: அல்அப்ஸீ

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, கூஃபா, மதாஇன்

பிறப்பு: மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 36, மதாஇன்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

நபித்தோழர் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தவர். நபி (ஸல்) அவர்கள் இவரிடம் நயவஞ்சகர்களின் பெயர்களைத் தெரிவித்திருந்தார்கள். இதனால் இவர் "நபி (ஸல்) அவர்களின் ரகசியக் காப்பாளர்" என்று அழைக்கப்பட்டார்.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் இவரை மதாஇன் நகரின் ஆளுநராக நியமித்தார்கள். இவர் உஹதுப் போரில் தனது தந்தையுடன் கலந்துகொண்டார். நபி (ஸல்) அவர்கள் இவருக்கு உலக முடிவு நாள் வரை நிகழவிருக்கும் அனைத்து ஃபித்னாக்களையும் பற்றி அறிவித்திருந்தார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஹிஜ்ரி 36 ஆம் ஆண்டு மதாஇன் நகரில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அபூ வாயில் ஷகீக் பின் ஸலமா, ஸர் பின் ஹுபைஷ், ஸைத் பின் வஹ்ப், ரப்ஈ பின் கராஷ், ஸிலா பின் ஸுஃபர், அபூ இத்ரீஸ் ஆயிதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் அல்கவ்லானீ, அப்துர்ரஹ்மான் பின் அபூலைலா, ஹம்மாம் பின் அல்ஹாரிஸ், முஹம்மத் பின் ஸீரீன், அபூ உபைதா பின் ஹுதைஃபா பின் அல்யமான், உம்மு ஸலமா, ஸஃத் பின் ஹுதைஃபா பின் அல்யமான்

வேறு பெயர்கள்: ஹுதைஃபா பின் அல்யமான், அபூ அப்துல்லாஹ்


ஆதாரம்: muslimscholars.info (145) · Should verify


حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ قَالَ: حَدَّثَنَا الْعَلَاءُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ طَلْحَةَ بْنِ يَزِيدَ، عَنْ حُذَيْفَةَ، ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنِ الْمُسْتَوْرِدِ بْنِ الْأَحْنَفِ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: «رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1059.
Ibn-Majah-Shamila-897.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-887.



இந்தக் கருத்தில் ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-, தாரிமீ-1363 , இப்னு மாஜா-897 , அபூதாவூத்-874 , நஸாயீ-1145 , 1665 , குப்ரா பைஹகீ-2749 ,

…

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-850 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.