தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-850

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 287

இரு ஸஜ்தாக்களுக்கு இடையே கூறவேண்டிய பிரார்த்தனை.

நபி (ஸல்) அவர்கள், இரு ஸஜ்தாக்களுக்கு இடையே உள்ள இருப்பில், “அல்லாஹும்மஃக்ஃபிர்லீ, வர்ஹம்னீ, வ ஆஃபினீ, வஹ்தினீ, வர்ஸுக்னீ

(பொருள்: அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு உடல் நலத்தை தருவாயாக! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! எனக்கு உணவு வழங்குவாயாக!) என்று பிரார்த்தனை செய்வார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(அபூதாவூத்: 850)

بَابُ الدُّعَاءِ بَيْنَ السَّجْدَتَيْنِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَسْعُودٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا كَامِلٌ أَبُو الْعَلَاءِ، حَدَّثَنِي حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: «اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَعَافِنِي، وَاهْدِنِي، وَارْزُقْنِي»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-850.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34457-காமில் பின் அலாஉ-காமில் அபுல்அலாஉ பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இமாம் இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    போன்றோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அவர்கள் லைஸ பில்கவிய்யி-அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்று ஒரு இடத்திலும் சுமாரானவர் என்று மற்றொரு இடத்திலும் கூறியுள்ளார். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவரின் சில அறிவிப்புகளை நான் மறுக்கிறேன் என்றும், இவர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் அறியாமையால் முர்ஸலான செய்திகளை மர்ஃபூவாக அறிவிப்பவர்; அறிவிப்பாளர்தொடர்களை மாற்றிவிடுபவர்; எனவே இவரின் செய்திகளை ஆதாரமாக ஏற்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/456)

(நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள் ஒருவரைப் பற்றி ليس بقوي லைஸ பிகவிய்யின் என்று கூறினால் பலவீனமானவர் என்றும், ليس بالقوي லைஸ பில்கவிய்யி என்று கூறினால் சிறிது பலவீனமானவர் என்றும் பொருள் என்று சிலர் கூறுகின்றனர். என்றாலும் இந்தக் கருத்தை நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள் கூறவில்லை என்பதால் சிலர் இந்த வித்தியாசத்தை ஏற்காமல் பலவீனமானவர் என்று முடிவுசெய்கின்றனர்)…

  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/807)

  • இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் ஓதும் பிரார்த்தனைப் பற்றி வரும் செய்திகள் எதுவும் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்களின் நிபந்தனைப்படி இல்லை என்பதால் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இதை பதிவு செய்யவில்லை. இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்தியை விட ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் ரப்பிஃக்ஃபிர்லீ, ரப்பிஃக்ஃபிர்லீ  என்ற செய்தியையே இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள் சரியானது என்று கருதுகிறார்கள் என இப்னு ரஜப் அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-820)

  • என்றாலும் இந்த செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், சரியானது என்று சில இடத்திலும் ஹஸன் தரம் என்று சில இடத்திலும் கூறியுள்ளார். ஷுஐப் அவர்கள் ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.

இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹபீப் பின் அபூஸாபித் —> ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-2895 , இப்னு மாஜா-898 , அபூதாவூத்-850 , திர்மிதீ-284 , 285 ,

  • ஹபீப் பின் அபூஸாபித் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-3514 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-897 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.