Month: December 2020

Almujam-Alawsat-8131

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8131. …

அபூஹுரைரா (ரலிஅவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு முறை நபி {ஸல்} அவர்கள் சொற்பொழிவு மேடை மீது ஏறும் போது மூன்று முறை “ஆமீன்” கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் மிம்பரின் மீது ஏறும் போது “ஆமீன்” என மூன்று முறை கூறினீர்களே! இது போன்று) இதற்கு முன் செய்ததில்லையே என வினவப்பட்டது.

என்னிடம் வானவர் ஜிப்ரயீல் (அலை) வருகை தந்து தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார். நான் ஆமீன் என்றேன்.

யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவன் பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவன் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார். நான் ஆமீன் என்றேன்.

யாரிடத்தில் (முஹம்மதாகிய) நீங்கள் நினைவுகூறப்பட்டும் அவன் உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவன் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார். நான் ஆமீன் என்றேன்” என்று (பதில்) கூறினார்கள்.


صَعِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمِنْبَرَ، فَلَمَّا وَضَعَ رِجْلَهُ عَلَى مِرْقَاةً قَالَ: «آمِينَ» ، ثُمَّ صَعِدَ، فَقَالَ: «آمِينَ» ، ثُمَّ صَعِدَ، فَقَالَ «آمِينَ» . فَقَالَ: «أَتَانِي جِبْرِيلُ، فَقَالَ: مَنْ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ فَمَاتَ فَلَمْ يُغْفَرْ لَهُ، فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْتُ: آمِينَ. قَالَ: وَمَنْ أَدْرَكَ أَبَوَيْهِ أَوْ أَحَدَهُمَا فَمَاتَ فَلَمْ يُغْفَرْ لَهُ، فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْتُ: آمِينَ. قَالَ: وَمَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ، فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْتُ: آمِينَ»


Shuabul-Iman-7500

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7500. நபி (ஸல்) அவர்கள், ”மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­)


رَغِمَ أَنْفٌ، ثُمَّ رَغِمَ أَنْفٌ، ثُمَّ رَغِمَ أَنْفُ رَجُلٍ، أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ، أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَمْ يَدْخُلِ الْجَنَّةَ


Al-Adabul-Mufrad-646

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

646. அபூஹுரைரா (ரலிஅவர்கள் அறிவித்தார்கள்:

ஒரு முறை நபி {ஸல்} அவர்கள் சொற்பொழிவு மேடை மீது ஏறும் போது மூன்று முறை “ஆமீன்” கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் மிம்பரின் மீது ஏறும் போது “ஆமீன்” என மூன்று முறை கூறினீர்களே! இது போன்று) இதற்கு முன் செய்ததில்லையே என வினவப்பட்டது.

என்னிடம் வானவர் ஜிப்ரயீல் (அலை) வருகை தந்து தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார். நான் ஆமீன் என்றேன்.

யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவன் பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவன் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார். நான் ஆமீன் என்றேன்.

யாரிடத்தில் (முஹம்மதாகிய) நீங்கள் நினைவுகூறப்பட்டும் அவன் உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவன் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார். நான் ஆமீன் என்றேன்” என்று (பதில்) கூறினார்கள்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَقَى الْمِنْبَرَ فَقَالَ: «آمِينَ، آمِينَ، آمِينَ» ، قِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، مَا كُنْتَ تَصْنَعُ هَذَا؟ فَقَالَ: ” قَالَ لِي جِبْرِيلُ: رَغِمَ أَنْفُ عَبْدٍ أَدْرَكَ أَبَوَيْهِ أَوْ أَحَدَهُمَا لَمْ يُدْخِلْهُ الْجَنَّةَ، قُلْتُ: آمِينَ. ثُمَّ قَالَ: رَغِمَ أَنْفُ عَبْدٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ لَمْ يُغْفَرْ لَهُ، فَقُلْتُ: آمِينَ. ثُمَّ قَالَ: رَغِمَ أَنْفُ امْرِئٍ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ، فَقُلْتُ: آمِينَ


Al-Adabul-Mufrad-21

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21. நபி (ஸல்) அவர்கள், ”அவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; அவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; அவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் “என்று கூறினார்கள். ”யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?” என்று (நபித்தோழர்கள்) கேட்டனர். தம் பெற்றோரை முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்யாமல் இருந்து அதன் மூலம்) நரகம் சென்றவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­)


«رَغِمَ أَنْفُهُ، رَغِمَ أَنْفُهُ، رَغِمَ أَنْفُهُ» ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَنْ؟ قَالَ: «مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ عِنْدَ الْكِبْرِ، أَوْ أَحَدَهُمَا، فَدَخَلَ النَّارَ»


Musnad-Ahmad-8557

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8557. நபி (ஸல்) அவர்கள், ”மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­)


«رَغِمَ أَنْفُ، ثُمَّ رَغِمَ أَنْفُ، ثُمَّ رَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ وَالِدَيْهِ، أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا عِنْدَ الْكِبَرِ، لَمْ يَدْخُلِ الْجَنَّةَ»


Musnad-Ahmad-7451

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7451. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவரிடம் என்னுடைய பெயர் கூறப்பட்டும் அவர் என் மீது ஸலவாத் சொல்லவில்லையென்றால் அவரின் மூக்கு மண்ணை கவ்வட்டும்.

ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவருடைய மூக்கு மண்ணை கவ்வட்டும்.

தம் பெற்றோரை அவர்களின் முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ரிப்இய்யு பின் இப்ராஹீம், தன் ஆசிரியர், “பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ” என்று கூறியதாக கருதுகிறேன் என்று கூறுகிறார்.


«رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ فَانْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ عِنْدَهُ أَبَوَاهُ الْكِبَرَ فَلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ»


Ibn-Hibban-412

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

412. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை ஏசுவது பெரும் பாவங்களில் மிகப்பெரும் பாவமாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரையே எப்படி ஏசுவார்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையை ஏசுவார். ஒருவர் இன்னொருவரின் தாயை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தாயை ஏசுவார். (ஆக, தம் பெற்றோர் ஏசப்படுவதற்கு இவரே காரணமாகிவிடுகிறார்)” என்று கூறினார்கள்.


«إِنَّ مِنْ أَكْبَرِ الْكَبَائِرِ أَنْ يَسُبَّ الرَّجُلُ وَالِدَيْهِ»، قَالَ: وَكَيْفَ يَسُبُّ الرَّجُلُ وَالِدَيْهِ؟، قَالَ: «يَسُبُّ أَبَا الرَّجُلِ فَيَسُبُّ أَبَاهُ، وَيَسُبُّ أُمَّهُ فَيَسُبُّ أُمَّهُ»


Ibn-Hibban-411

ஹதீஸின் தரம்: More Info

411. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஒரு மனிதர் தம் பெற்றோரை ஏசுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் பெற்றோரையே எப்படி ஏசுவார்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம். ஒருவர் மற்றவரை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய பெற்றோரை ஏசுவார். (ஆக, தம் பெற்றோர் ஏசப்படுவதற்கு இவரே காரணமாகிவிடுகிறார்)” என்று கூறினார்கள்.


«مِنَ الْكَبَائِرِ أَنْ يَسُبَّ الرَّجُلُ وَالِدَيْهِ»، قِيلَ: وَكَيْفَ يَسُبُّ الرَّجُلُ وَالِدَيْهِ؟، قَالَ: «يَتَعَرَّضُ لِلنَّاسِ فَيَسُبُّ وَالِدَيْهِ»


Shuabul-Iman-7485

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7485. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்:

ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில்மிகப்பெரும் பாவமாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’ என்று கேட்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)’ என்றார்கள்.


إِنَّ أَكْبَرَ الْكَبَائِرِ أَنْ يَلْعَنَ الرَّجُلُ وَالِدَيْهِ “، قِيلَ: يَا رَسُولَ اللهِ، وَكَيْفَ يَلْعَنُ وَالِدَيْهِ؟ قَالَ: ” يَسُبُّ أَبَا الرَّجُلِ فَيَسُبُّ أَبَاهُ، وَيَسُبُّ أُمَّهُ فَيَسُبُّ أُمَّهُ


Shuabul-Iman-7486

ஹதீஸின் தரம்: More Info

7486. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இஸ்லாத்தில் ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை ஏசுவது பெரும் பாவங்களில் மிகப்பெரும் பாவமாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரையே எப்படி ஏசுவார்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையை ஏசுவார். ஒருவர் இன்னொருவரின் தாயை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தாயை ஏசுவார். (ஆக, தம் பெற்றோர் ஏசப்படுவதற்கு இவரே காரணமாகிவிடுகிறார்)” என்று கூறினார்கள்.


إِنَّ مِنْ أَكْبَرِ الْكَبَائِرِ وَالذَّنُوبِ أَنْ يَسُبَّ الرَّجُلُ وَالِدَيْهِ فِي الْإِسْلَامِ “، قِيلَ: يَا رَسُولَ اللهِ، وَكَيْفَ يَسُبُّ وَالِدَيْهِ؟ قَالَ: ” يَسُبُّ أَبَا الرَّجُلِ فَيَسُبُّ أَبَاهُ، وَيَسُبُّ أُمَّهُ فَيَسُبُّ أُمَّهُ


Next Page » « Previous Page