தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-7451

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவரிடம் என்னுடைய பெயர் கூறப்பட்டும் அவர் என் மீது ஸலவாத் சொல்லவில்லையென்றால் அவரின் மூக்கு மண்ணை கவ்வட்டும்.

ஒருவர் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவருடைய மூக்கு மண்ணை கவ்வட்டும்.

தம் பெற்றோரை அவர்களின் முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ரிப்இய்யு பின் இப்ராஹீம், தன் ஆசிரியர், “பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ” என்று கூறியதாக கருதுகிறேன் என்று கூறுகிறார்.

(முஸ்னது அஹமது: 7451)

حَدَّثَنَا رِبْعِيُّ بْنُ إِبْرَاهِيمَ، «وَهُوَ أَخُو إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ يَعْنِي ابْنَ عُلَيَّةَ» ، «وَكَانَ يُفَضَّلُ عَلَى أَخِيهِ» ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ فَانْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ، وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ عِنْدَهُ أَبَوَاهُ الْكِبَرَ فَلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ»

قَالَ رِبْعِيٌّ: وَلَا أَعْلَمُهُ إِلَّا قَدْ قَالَ: «أَوْ أَحَدُهُمَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-7451.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-7269.




إسناده حسن رجاله ثقات عدا عبد الرحمن بن إسحاق العامري وهو صدوق حسن الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21461-அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் பற்றி சில அறிஞர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றலில் குறையுள்ளவர் என்று விமர்சித்துள்ளனர்.
  • ஆரம்ப கால அறிஞர்களான யஹ்யல் கத்தான், இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    ஸுஃப்யான் போன்றோர்,  இவர் கத்ரியா (விதியை மறுக்கும்) கத்ரியா போன்ற மாறுபட்ட கொள்கையில் உள்ளவர் என்பதற்காக நம்பகமான எவரது ஹதீஸும் நிராகரிக்கப்படாது. பல கத்ரியாக்களின் ஹதீஸ்கள் புகாரி முஸ்லிமில் கூட உள்ளன.கொள்கையுடையவர் என்பதால் மதீனாவாசிகள் விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    யஃகூப் பின் ஷைபா,பிறப்பு ஹிஜ்ரி 182
    இறப்பு ஹிஜ்ரி 262
    வயது: 80
    இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    போன்றோர் இவர் சுமாரானவர் எனக் கூறியுள்ளனர். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இவர் பலவீனமானவர் எனக் கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/487)
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/570)

மேலும் பார்க்க: முஸ்லிம்-4987 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.