முதுமைப் பருவத்தில் பெற்றோர் இருவரையுமோ, அல்லது அவர்களில் ஒருவரையோ அடைந்தும் (அவர்களுக்கு நன்மை செய்து) சொர்க்கம் செல்லத் தவறியவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்.
4987. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்” என்று கூறினார்கள். “யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத் தான்)” என்று பதிலளித்தார்கள்.
இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.
அதிகமானோர், நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறியபோது ஆமீன் என்று கூறிய நிகழ்வுடன் இந்தச் செய்தியை மூன்று பகுதியாக அறிவித்துள்ளனர்.
மூன்று பகுதியாக வந்துள்ள செய்திகளும் சில ஹஸன் தர அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளன. எனவே இவை ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19359-ஷைபான் பின் ஃபர்ரூக் சில செய்திகளில் தவறிழைத்துள்ளதால் இவர் ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث ஆவார். இவரைப் போன்று அபூஅவானா அவர்களிடமிருந்து வேறுசிலரும் அறிவித்துள்ளனர் என்பதால் இது சரியான செய்தியாகும்.
மேலும் இதில் வரும் ராவீ-18816-ஸுஹைல் பின் அபூஸாலிஹ் அவர்கள் பற்றி சிலர் பலவீனமானவர் என்று விமர்சித்திருந்தாலும் இவருக்கு கடைசிகாலத்தில் நோயின் காரணமாக நினைவாற்றலில் கோளாறு ஏற்பட்டது என்பதால் (அல்லது சிலரின் கருத்துப்படி இவரின் சகோதரர் திடீரென இறந்துவிட்டதால் அதனால் பாதிப்புக்குள்ளாகி நினைவாற்றலில் கோளாறு ஏற்பட்டது என்பதால்) அப்போது அவர் அறிவிக்கும் செய்திகளில் தவறு ஏற்பட்டது என்பதால் ஆகும்.
அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164 இறப்பு ஹிஜ்ரி 241 வயது: 77 அவர்கள், இவரைவிட முஹம்மத் பின் அம்ர் அவர்கள் நமக்கு பிரியமானவர் என்று யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120 இறப்பு ஹிஜ்ரி 168 / 198 ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள் கூறினார். ஆனால் முஹம்மத் பின் அம்ர் அவர்களை விட ஸுஹைலே நம் அறிஞர்களிடம் பலமானவர் என்று கூறியுள்ளார்.
இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181 இறப்பு ஹிஜ்ரி 261 வயது: 80 இமாம் அவர்கள், இவர் பலமானவர் என்றும், இவரிடமிருந்து அறிவித்தவர்களின் தவறினால் தான் இவரின் சில செய்திகளில் தவறு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்.
புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 அவர்கள் இவரின் ஒரு செய்தியை துணை ஆதாரமாகக் கூறியுள்ளார்.
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204 இறப்பு ஹிஜ்ரி 261 வயது: 57 இமாம் அவர்கள் இவரை தனி ஆதாரமாக ஏற்று இவர் அறிவிக்கும் பல செய்திகளை தனது ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்துள்ளார்.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
ஸுஹைல் பின் அபூஸாலிஹ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
யஹ்யா பின் உபைதுல்லாஹ் —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
Abdul Hakkim on Bukhari-5688: “அஸ்ஸலாமு அலைக்கும். எந்த ஹதீஸ் கேட்கிறீர்கள்?” Oct 19, 08:14
asraa siddiq on Bukhari-5688: “இந்த ஹதீஸ் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது” Oct 18, 18:35
Ummu Huraira on Shuabul-Iman-7379: “அபூதாவூத் உடைய 4010-வது ஹதீஸையும் ஏற்கனவே பார்த்தேன். ஜஸாக்கல்லாஹ் ஹைரன். குற்றாலத்தில் பெண்களுக்கென்று சுவர்களால் மூடப்பட்ட அறைகள் போன்ற ஒரு திரைமறைவு வசதியை ஏற்படுத்தியுள்ளார்கள். அதுவும் திறந்தவெளி…” Oct 12, 11:52
Abdul Hakkim on Shuabul-Iman-7379: “நம்முடைய குடும்ப பெண்கள் மட்டும் குளிக்கும்போது இந்த தடை இல்லை. அப்போதும் கூட உடல் அவயங்களை மறைத்து குளிப்பது முக்கியம். வேறு பொதுவான ஆதாரத்தை தான் ஏற்கனவே…” Oct 11, 10:22
Ummu Huraira on Shuabul-Iman-7379: “வேறு பொதுவான ஆதாரங்களின்படி இது தடைதான் என்றால் அந்த ஆதாரங்களைத் தரமுடியுமா? இது சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகள் ஏதாவது உள்ளதா?” Oct 11, 02:56
Ummu Huraira on Shuabul-Iman-7379: “பொதுக் குளிப்பிடங்கள் என்றால், நமக்கு தெரிந்தவர்களின் தோட்டங்களில் உள்ள போர் தண்ணீருக்கான தொட்டியில், பல பெண்கள் சேர்ந்துக் குளிக்கும் வசதியுடன் திரைகள் எல்லாம் போடப்பட்டுள்ள, அல்லது சுற்றியுள்ள…” Oct 11, 02:51
Abdul Hakkim on Shuabul-Iman-7379: “வ அலைக்கும் ஸலாம். பெண்கள் ஆடை அணிந்து குளித்தாலும் துணி ஈரத்தினால் அவர்களின் உடல்பகுதிகள் தெரியும், மேற்கண்ட கருத்தில் வரும் செய்திகளில் விமர்சனம் உள்ளது. என்றாலும் வேறு…” Oct 10, 19:47
Ummu Huraira on Shuabul-Iman-7379: “அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஹதீஸ் பற்றிய ஆய்வுகள் முடிந்துவிட்டதா? இதன் தரம் என்ன? இதில், “அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட உங்களது பெண்களில் எவரும் (பல…” Oct 10, 12:39
Abdul Hakkim on Bukhari-3835: “அஸ்ஸலாமு அலைக்கும். சில செய்திகளில் இந்தப் பெண் அல்லாஹ்விடம் துஆச் செய்தேன் என்று கூறியதாக வந்துள்ளது. பார்க்க: புகாரி-439.” Oct 4, 17:30
Syed Ibrahim on Bukhari-3835: “BUhari 3835 – இந்தச் சம்பவம் பற்றிய விரிவான செய்தி ஏதும் உண்டா?” Oct 4, 15:41
சமீப விமர்சனங்கள்