தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-315

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

கஅப் பின் உஜ்ரா (ரலி) அறிவித்தார் :

நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் மிம்பரின் முதல் படியில் ஏறும் போது “ஆமீன்” என்று கூறினார்கள். இரண்டாவது படியில் ஏறும் போதும் “ஆமீன்” என்று கூறினார்கள். மூன்றாவது படியில் ஏறும் போதும் “ஆமீன்” என்று கூறினார்கள். அவர்கள் இறங்கி சிறிது ஓய்வுக்குபின் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (என்றைக்குமே) கேள்விப்படாத ஒன்றை இன்று உங்களிடமிருந்து செவியேற்றோமே என்று கேட்டோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் செவியேற்றீர்களா? என்று கேட்க, நாங்கள் ஆம் என்று கூறினோம்.

நான் முதல் படியில் ஏறும் போது ஜிப்ரீல் (அலை) எனக்கு காட்சி தந்து ஒருவனிடத்தில் அவனுடைய பெற்றோர்களில் இருவரோ அல்லது ஒருவரோ வயோதிகப் பருவத்தை அடைந்து (அவர்களுக்கு பணிவிடை செய்வதின் மூலம்) அந்த இருவரும் இவனை சுவர்க்கத்தில் நுழைவிக்கவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்று கூறினேன்.

நான் இரண்டாவது படியில் ஏறும் போது யாரிடத்தில் (முஹம்மதாகிய) நீங்கள் நினைவுகூறப்பட்டும் அவன் உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்று கூறினேன்.

நான் மூன்றாவது படியில் ஏறும் போது யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவன் பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் (பதில்) கூறினார்கள்.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 315)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثنا إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ الْفَرْوِيُّ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْعَلَّافُ، ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَا: ثنا مُحَمَّدُ بْنُ هِلَالٍ، مَوْلَى بَنِي جُمَحَ الْمَدِينِيُّ، عَنْ سَعْدِ بْنِ إِسْحَاقَ بْنِ كَعْبِ بْنِ عُجْرَةَ، عَنْ أبِيهِ، عَنْ جَدِّهِ كَعْبِ بْنِ عُجْرَةَ،

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمًا إِلَى الْمِنْبَرِ فَقَالَ حِينَ ” ارْتَقَى دَرَجَةً: «آمِينَ» ، ثُمَّ ارْتَقَى الْأُخْرَى فَقَالَ: «آمِينَ» ، ثُمَّ ارْتَقَى الثَّالِثَةَ فَقَالَ: «آمِينَ» ، فَلَمَّا نَزَلَ عَنِ الْمِنْبَرِ وَفَرَغَ، قُلْنَا: يَا رَسُولَ اللهِ لَقَدْ سَمِعْنَا مِنْكَ كَلَامًا الْيَوْمَ مَا كُنَّا نَسْمَعُهُ قَبْلَ الْيَوْمِ؟، قَالَ: «وَسَمِعْتُمُوهُ؟» ، قَالُوا: نَعَمْ، قَالَ: ” إِنَّ جِبْرِيلَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَ لِي حِينَ ارْتَقَيْتُ دَرَجَةً فَقَالَ: بَعُدَ مَنْ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبْرِ أَوْ أَحَدَهُمَا لَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ، قَالَ: قُلْتُ: آمِينَ، وَقَالَ: بَعُدَ مَنْ ذُكِرْتُ عِنْدَهُ وَلَمْ يُصَلِّ عَلَيْكَ، فَقُلْتُ: آمِينَ، ثُمَّ قَالَ: بَعُدَ مَنْ أَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ، فَقُلْتُ: آمِينَ


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-315.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-15668.




إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات وصدوقيين عدا إسحاق بن كعب القضاعي وهو مجهول الحال

  • இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் இஸ்ஹாக் பின் கஃப் என்பவர் அறியப்படாதவர் என்று இப்னுல் கத்தான், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்றோர் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/126, தக்ரீபுத் தஹ்தீப்-1/131)

1 . இந்தக் கருத்தில் கஅப் பின் உஜ்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-315 , ஹாகிம்-7256 , ஷுஅபுல் ஈமான்-1471 ,

2 .

3 .

4 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.