தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-1471

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

கஅப் பின் உஜ்ரா (ரலி) அறிவித்தார் :

நபி (ஸல்) அவர்கள் அனைவரும் மிம்பருக்கு (அருகில்) வாருங்கள் என்று கூறினார்கள். நாங்கள் அனைவரும் ஆஜரானோம். அப்போது முதல் படியில் ஏறும் போது “ஆமீன்” என்று கூறினார்கள். இரண்டாவது படியில் ஏறும் போதும் “ஆமீன்” என்று கூறினார்கள். மூன்றாவது படியில் ஏறும் போதும் “ஆமீன்” என்று கூறினார்கள். அவர்கள் இறங்கிய உடன் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் (என்றைக்குமே) கேள்விப்படாத ஒன்றை இன்று உங்களிடமிருந்து செவியேற்றோமே என்று கேட்டோம்.

நான் முதல் படியில் ஏறும் போது ஜிப்ரீல் (அலை) எனக்கு காட்சி தந்து யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவன் பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்றேன். நான் இரண்டாவது படியில் ஏறும் போது யாரிடத்தில் (முஹம்மதாகிய) நீங்கள் நினைவுகூறப்பட்டும் அவன் உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்று கூறினேன். நான் மூன்றாவது படியில் ஏறும் போது ஒருவனிடத்தில் அவனுடைய பெற்றோர்கள் வயோதிகப் பருவத்தை அடைந்து (அவர்களுக்கு பணிவிடை செய்வதின் மூலம்) அந்த இருவரும் இவனை சுவர்கத்தில் நுழைவிக்கவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்று கூறினேன் என்று (பதில்) கூறினார்கள்.

(shuabul-iman-1471: 1471)

أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ الْفَضْلِ الْقَطَّانُ، أخبرنا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ، حدثنا يَعْقُوبُ بْنُ سُفْيَانَ، حدثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حدثنا مُحَمَّدُ بْنُ هِلَالٍ، حَدَّثَنِي سَعْدُ بْنُ إِسْحَاقَ بْنِ كَعْبِ بْنِ عُجْرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

احْضُرُوا الْمِنْبَرَ ” فَحَضَرْنَا، فَلَمَّا ارْتَقَى دَرَجَةً قَالَ: ” آمِينَ “، فَلَمَّا ارْتَقَى الدَّرَجَةَ الثَّانِيَةَ قَالَ: ” آمِينَ “، فَلَمَّا ارْتَقَى الدَّرَجَةَ الثَّالِثَةَ قَالَ: ” آمِينَ “، فَلَمَّا فَرَغَ نَزَلَ مِنَ الْمِنْبَرِ قَالَ: فَقُلْنَا له يَا رَسُولَ اللهِ لَقَدْ سَمِعْنَا الْيَوْمَ مِنْكَ شَيْئًا لَمْ نَكُنْ نَسْمَعُهُ قَالَ: ” إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامِ عَرْضَ لِي فَقَالَ: بَعُدَ مَنْ أَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ فَقُلْتُ: آمِينَ فَلَمَّا رَقِيتُ الثَّانِيَةَ قَالَ: بَعُدَ مَنْ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَقُلْتُ: آمِينَ، فَلَمَّا رَقِيتُ الثَّالِثَةَ قَالَ: بَعُدَ مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ الْكِبَرَ عِنْدَهُ أَوْ أَحَدُهُمَا، فلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ – أَظُنُّهُ قَالَ – فَقُلْتُ: آمِينَ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-1471.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-1468.




إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات وصدوقيين عدا إسحاق بن كعب القضاعي وهو مجهول الحال

மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-315 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.