Month: February 2021

Musannaf-Ibn-Abi-Shaybah-6660

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6660. (நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் பள்ளிக்குள் நுழைந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “யாராவது எழுந்து சென்று இவருடன் சேர்ந்து தொழுகின்றீர்களா ?” என்று கூறினார்கள்.

அப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் (தான், ஏற்கனவே நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி  தொழுகையை நிறைவுசெய்திருந்தும்) எழுந்து அவருடன் தொழுதார்கள்.

அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)


أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ وَقَدْ صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَلَا رَجُلٌ يَقُومُ إِلَى هَذَا فَيُصَلِّي مَعَهُ»، فَقَامَ أَبُو بَكْرٍ فَصَلَّى مَعَهُ، وَقَدْ كَانَ صَلَّى تِلْكَ الصَّلَاةَ


Kubra-Bayhaqi-5014

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5014. (நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அவர் தனியாக தொழ நின்றபோது நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம் இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர் யார்?” என்று கேட்டார்கள்)

அப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் (தான், ஏற்கனவே நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி  தொழுகையை நிறைவுசெய்திருந்தும்) எழுந்து அவருடன் தொழுதார்கள்.

அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)


فِي هَذَا الْخَبَرِ فَقَامَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ فَصَلَّى مَعَهُ، وَقَدْ كَانَ صَلَّى مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Almujam-Alawsat-7286

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7286. நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அவர் தனியாக தொழ நின்றபோது நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம் இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர் யார்?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


أَنَّ رَجُلًا جَاءَ وَقَدْ صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ يُصَلِّي وَحْدَهُ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَتَّجِرُ عَلَى هَذَا فَيُصَلِّي مَعَهُ؟»


Daraqutni-1081

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1081. நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அவர் தனியாக தொழ நின்றபோது நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம் இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர் யார்?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


أَنَّ رَجُلًا جَاءَ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ يُصَلِّي وَحْدَهُ , فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَتَّجِرُ عَلَى هَذَا فَلْيُصَلِّي مَعَهُ؟»


Musnad-Ahmad-22316

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22316. ஹதீஸ் எண்-22315 இல் வரும் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. அதிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்விருவரும் ஜமாஅத் தான்” என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.


«هَذَانِ جَمَاعَةٌ»


Musnad-Ahmad-22315

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22315. (நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி முடித்த பிறகு) ஒரு மனிதர் பள்ளிக்கு வந்து, தொழ ஆரம்பித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள்.

ஒரு மனிதர் எழுந்து, வந்த மனிதருடன் சேர்ந்து தொழுதார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்விருவரும் ஜமாஅத் தான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : வலீத் பின் அபூமாலிக் (ரஹ்)


دَخَلَ رَجُلٌ الْمَسْجِدَ فَصَلَّى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ؟» قَالَ: فَقَامَ رَجُلٌ فَصَلَّى مَعَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَانِ جَمَاعَةٌ»


Musnad-Ahmad-22189

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22189. (பள்ளிக்குத் தாமதமாக வந்து) தனியாக தொழும் மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள். ஒரு மனிதர் எழுந்து, வந்த மனிதருடன் சேர்ந்து தொழுதார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்விருவரும் ஜமாஅத் தான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يُصَلِّي فَقَالَ: «أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا يُصَلِّي مَعَهُ؟» فَقَامَ رَجُلٌ فَصَلَّى مَعَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَانِ جَمَاعَةٌ»


Darimi-1409

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1409. நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)

…..


أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ وَقَدْ صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّي مَعَهُ؟»


Darimi-1408

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1408. (பள்ளிக்குத் தாமதமாக வந்து) தனியாக தொழ நின்ற மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يُصَلِّي وَحْدَهُ فَقَالَ: «أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا، فَيُصَلِّي مَعَهُ»


Musnad-Ahmad-11808

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11808. நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு லுஹர் தொழுகை நடத்தி முடித்தார்கள். அப்போது நபித்தோழர் ஒருவர் (பள்ளிக்குள்) வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உம்மை (குறித்த நேரத்தில்) தொழ வரவிடாமல் தடுத்தது எது? என்று கேட்டார்கள். அதற்கு அவர் காரணத்தை கூறினார்.

பிறகு அவர் தனியாக தொழ நின்ற போது நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள்.  அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.

அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)


صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَصْحَابِهِ الظُّهْرَ، قَالَ: فَدَخَلَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا حَبَسَكَ يَا فُلَانُ عَنِ الصَّلَاةِ؟» قَالَ: فَذَكَرَ شَيْئًا اعْتَلَّ بِهِ، قَالَ: فَقَامَ يُصَلِّي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ» قَالَ: فَقَامَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَصَلَّى مَعَهُ


Next Page » « Previous Page