Month: February 2022

Ibn-Majah-4020

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4020. …என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்…

அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)


«لَيَشْرَبَنَّ نَاسٌ مِنْ أُمَّتِي الْخَمْرَ، يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا، يُعْزَفُ عَلَى رُءُوسِهِمْ بِالْمَعَازِفِ، وَالْمُغَنِّيَاتِ، يَخْسِفُ اللَّهُ بِهِمُ الْأَرْضَ، وَيَجْعَلُ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيرَ»


Almujam-Alawsat-7215

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7215. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவு உண்பவர்கள் (தங்களது) “ஸரீத்” (தக்கடி) எனும் உணவுக்கு அழைப்பது போல், பிற (எதிரி) சமூகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எனது சமுதாயத்திற்கு எதிராக மற்றவர்களை அழைக்கும் நிலை ஏற்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«يُوشِكُ أَنْ تَدَاعَى الْأُمَمُ عَلَى أُمَّتِي كَمَا تَدَاعَى عَلَى الثَّرِيدِ أَكَلَتُهُ»


Musnad-Ahmad-8713

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8713. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸவ்பானே! நீங்கள் பசியோடு இருக்கும்போது ஒருவருக்கொருவர் உணவுத் தட்டை நோக்கி அழைப்பது போன்று, (எதிரி) சமூகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து (உங்களுக்கெதிராக மற்றவர்களை) அழைக்கும் நிலை ஏற்பட்டால் உங்கள் நிலை எப்படி இருக்குமோ! என்று கூறினார்கள். அதற்கு ஸவ்பான் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ‘அந்நேரம் நாங்கள் எண்ணிக்கை குறைந்தவர்களாக இருப்போமா?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இல்லை, அந்நேரம் நீங்கள் எண்ணிக்கை கூடியவர்களாக இருப்பீர்கள். என்றாலும் உங்கள் உள்ளங்களிலே ‘வஹ்ன்’ போடப்பட்டிருக்கும் என்று கூறினார்கள். அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்’ என்றால் என்ன?’ என்றுக் கேட்க, ‘உலகத்தை நேசிப்பதும், போரை வெறுப்பதும் தான் அது என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِثَوْبَانَ: «كَيْفَ أَنْتَ يَا ثَوْبَانُ، إِذْ تَدَاعَتْ عَلَيْكُمُ الْأُمَمُ كَتَدَاعِيكُمْ عَلَى قَصْعَةِ الطَّعَامِ تُصِيبُونَ مِنْهُ؟» قَالَ ثَوْبَانُ: بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، أَمِنْ قِلَّةٍ بِنَا؟ قَالَ: «لَا، بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ، وَلَكِنْ يُلْقَى فِي قُلُوبِكُمُ الْوَهَنُ» قَالُوا: وَمَا الْوَهَنُ؟ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «حُبُّكُمُ الدُّنْيَا وَكَرَاهِيَتُكُمُ الْقِتَالَ»


Almujam-Alkabir-1452

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1452. ஹதீஸ் எண்-1451 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது…

(என்றாலும் இதன் ஆரம்பத்தில்) “பிற சமுதாயங்கள், உங்களைக் கொன்றிட (ஒருவர் மற்றொருவரை) அழைத்துக் கொள்ளும் ஒரு நிலை வரும்” என்று வந்துள்ளது.


«يُوشِكُ أَنْ تَتَدَاعى عَلَيْكُمُ الْأُمَمُ» فَذَكَرَ الْحَدِيثَ


Musannaf-Ibn-Abi-Shaybah-37247

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

37247. ஒரு கூட்டம் தங்களது உணவுத் தட்டின் பக்கம் அழைப்பது போல், பிற சமுதாயங்கள், உங்களைக் கொன்றிட (ஒருவர் மற்றொருவரை) அழைத்துக் கொள்வார்கள். அப்போது உங்கள் எதிரிகளின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழற்றப்பட்டு உங்களுடைய உள்ளங்களில் அவர்களைப் பற்றிய அச்சம் போடப்பட்டிருக்கும். மேலும் அப்போது உங்களுக்கு உலகமே விருப்பமாக ஆக்கப்பட்டிருக்கும் என்று ஸவ்பான் (ரலி) கூறினார்கள். (அவருடன் இருந்தவர்கள்), “அப்போது நாம்  எண்ணிக்கை குறைந்தவர்களாக இருப்போமா? என்று கேட்டனர். அதற்கவர்கள்,  இல்லை. உங்களில் அதிகமானோர் அன்றைய தினம் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் உபைத்


تُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا يَتَدَاعَى الْقَوْمُ عَلَى قَصْعَتِهِمْ , يُنْزَعُ الْوَهْنُ مِنْ قُلُوبِ عَدُوِّكُمْ، وَيُجْعَلُ فِي قُلُوبِكُمْ، وَتُحَبَّبُ إِلَيْكُمُ الدُّنْيَا , قَالُوا: مِنْ قِلَّةٍ؟ قَالَ: أَكْثَرُكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ


Tayalisi-1085

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

1085. “ஒரு கூட்டம் தங்களது உணவுத் தட்டின் பக்கம் அழைப்பது போல், பிற சமுதாயங்கள், உங்களைக் கொன்றிட (ஒருவர் மற்றொருவரை) அழைத்துக் கொள்வார்கள்” என்று ஸவ்பான் (ரலி) கூறினார்கள். அப்போது அவர்களிடம் “அன்றைய தினம் (முஸ்லிம்கள்) எண்ணிக்கை குறைந்தவர்களாக இருப்பார்களா? என்றுக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “இல்லை. எனினும் அன்றைய தினம் நீங்கள் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி இருப்பீர்கள். நீங்கள் உலகத்தை நேசித்து, மரணத்தை வெறுப்பவர்களாக இருந்ததால் உங்களுடைய உள்ளங்களில் வஹ்ன் ஏற்பட்டிருக்கும்; உங்கள் விரோதியின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழற்றப்பட்டிருக்கும்! என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் உபைத்


«يُوشِكُ أَنْ تَدَاعَى عَلَيْكُمُ الْأُمَمُ كَمَا تَدَاعَى الْقَوْمُ إِلَى قَصْعَتِهِمْ» قَالَ: قِيلَ: مِنْ قِلَّةٍ؟ قَالَ: «لَا وَلَكِنَّهُ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ يُجْعَلُ الْوَهَنُ فِي قُلُوبِكُمْ، وَيُنْزَعُ الرُّعْبُ مِنْ قُلُوبِ عَدُوِّكُمْ لِحُبِّكُمُ الدُّنْيَا وَكَرَاهِيَتِكُمُ الْمَوْتَ»


Abu-Dawood-4297

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

(எதிரி) சமுதாயங்கள் இஸ்லாத்திற்கு எதிராக ஒருவர் மற்றவரை அழைப்பது.

4297. உணவு உண்பவர்கள், (ஒருவர் மற்றொருவரை) உணவுத் தட்டை நோக்கி அழைப்பது போன்று, (எதிரி) சமூகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உங்களுக்கெதிராகச் செயல்பட அழைத்துக்கொள்வார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒருவர், ‘அந்நேரம் நாங்கள் எண்ணிக்கை குறைந்தவர்களாக இருப்போமா?’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, அந்நேரம் நீங்கள் எண்ணிக்கை கூடியவர்களாக இருப்பீர்கள். எனினும் நீங்கள் வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லும் சருகுகளைப் போன்று இருப்பீர்கள். இன்னும், உங்களைப் பற்றிய பயத்தை உங்கள் எதிரிகளின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் கழற்றி எடுத்துவிட்டு, உங்கள் உள்ளங்களிலே ‘வஹ்ன்’ எனும் சிந்தனையைப் போட்டு விடுவான்’ எனக் கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்’ என்றால் என்ன?’ என ஒரு மனிதர் கேட்க, ‘உலகத்தை நேசிப்பதும், மரணத்தை வெறுப்பதும், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)


«يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا»، فَقَالَ قَائِلٌ: وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ؟ قَالَ: «بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ، وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ، وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمُ الْمَهَابَةَ مِنْكُمْ، وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمُ الْوَهْنَ»، فَقَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا الْوَهْنُ؟ قَالَ: «حُبُّ الدُّنْيَا، وَكَرَاهِيَةُ الْمَوْتِ»


Almujam-Alkabir-796

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

796.


قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ: «أَلَا أُخْبِرُكُمْ بِالْمُؤْمِنِ؟ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى أَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ، وَالْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ فِي طَاعَةِ اللهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ الْخَطَايَا وَالذُّنُوبَ»


Kubra-Bayhaqi-10270

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10270. எவரேனும் என் மீது ஸலாம் சொன்னால் நான் அவருக்குப் பதில் ஸலாம் சொல்வதற்காக அல்லாஹ் எனக்கு எனது ரூஹைத் திருப்புகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلَّا رَدَّ اللهُ إِلِيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلَامَ


Next Page » « Previous Page