Month: February 2022

Abu-Dawood-5103

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5103. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் இரவில் நாய் உளையிடுவதையும் கழுதை கத்துவதையும் செவியுற்றால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடுங்கள். ஏனென்றால் அவைகள் உங்களால் பார்க்க முடியாத (தீய)வற்றை பார்க்கின்றன.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


«إِذَا سَمِعْتُمْ نُبَاحَ الْكِلَابِ، وَنَهِيقَ الْحُمُرِ بِاللَّيْلِ، فَتَعَوَّذُوا بِاللَّهِ فَإِنَّهُنَّ يَرَيْنَ مَا لَا تَرَوْنَ»


Musnad-Ahmad-15460

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

15460. அபுத்தய்யாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : வயோதிகராக இருந்த அப்துர் ரஹ்மான் பின் கம்பஷ் (ரலி) அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தை அடைந்தவரா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்று கூறினார்கள். ஷைத்தான்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (தாக்குவதற்காக) நெருங்கிய போது நபியவர்கள் என்ன செய்தார்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் அந்த இரவில் ஷைத்தான்கள் ஓடைகளிலிருந்தும் மலைக் கணவாய்களிலிருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி (தாக்குவதற்காக) விரைந்தன.

அவர்களில் ஒரு ஷைத்தானுடைய கையில் தீப்பந்தம் இருந்தது. அதன் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தை கரிப்பதற்கு அந்த ஷைத்தான் நினைத்தது. அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானிலிருந்து இறங்கி வந்து முஹம்மதே நான் கூறுவதை நீங்களும் கூறிக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும் வானிலிருந்து இறங்குபவற்றின் தீங்கிலிருந்தும் வானில் ஏறுபவற்றின் தீங்கிலிருந்தும் இரவு பகலில் ஏற்படும் குழப்பதின் தீங்கிலிருந்தும் நன்மையை விளைவிக்கும் நட்சத்திரத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து தாரகைகளின் தீங்கிலிருந்தும் அளவற்ற அருளாளனே (உன்னிடம்)

قُلْتُ: لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ خَنْبَشٍ التَّمِيمِيِّ، وَكَانَ كَبِيرًا، أَدْرَكْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: قُلْتُ: كَيْفَ صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ كَادَتْهُ الشَّيَاطِينُ، فَقَالَ: إِنَّ الشَّيَاطِينَ تَحَدَّرَتْ تِلْكَ اللَّيْلَةَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْأَوْدِيَةِ، وَالشِّعَابِ، وَفِيهِمْ شَيْطَانٌ بِيَدِهِ شُعْلَةُ نَارٍ، يُرِيدُ أَنْ يُحْرِقَ بِهَا وَجْهَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَهَبَطَ إِلَيْهِ جِبْرِيلُ، فَقَالَ: يَا مُحَمَّدُ قُلْ، قَالَ: «مَا أَقُولُ؟» قَالَ: ” قُلْ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ، وَذَرَأَ وَبَرَأَ، وَمِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ، وَمِنْ شَرِّ مَا يَعْرُجُ فِيهَا، وَمِنْ شَرِّ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ، وَمِنْ شَرِّ كُلِّ طَارِقٍ إِلَّا طَارِقًا يَطْرُقُ بِخَيْرٍ، يَا رَحْمَنُ “، قَالَ: فَطَفِئَتْ نَارُهُمْ، وَهَزَمَهُمُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى


Musnad-Ahmad-15958

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

15958. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஆதமுடைய மகனை வழிகெடுப்பதற்காக ஷைத்தான் (நல்) வழிகளில் அமர்ந்துகொள்கிறான். அவனை வழிகெடுப்பதற்காக இஸ்லாம் என்ற (நல்) வழியில் அமர்ந்துகொண்டு உனது மார்க்கத்தையும் உனது தந்தையின் மார்க்கத்தையும் உனது பாட்டனாரின் மார்க்கத்தையும் விட்டுவிட்டு நீ இஸ்லாத்தை ஏற்கப்போகிறாயா? என்று கூறுவான். \

ஆதமுடைய மகன் ஷைத்தானிற்கு மாறுசெய்து இஸ்லாத்தை ஏற்றுவிட்டால் அவனை வழிகெடுப்பதற்காக ஹிஜ்ரத் (இறைவனுக்காக நாடுதுறத்தல்) என்ற (நல்) வழியில் அமர்ந்துகொண்டு உனது பூமியையும் உனது வானத்தையும் விட்டுவிட்டு நீ ஹிஜ்ரத் செய்யப்போகிறாயா? ஹிஜ்ரத் செய்தவர் கட்டிப்போடப்பட்ட குதிரையைப் போன்றவர் ஆவார் என்று கூறுவான். ஷைத்தானிற்கு மாறுசெய்து ஹிஜ்ரத் செய்துவிட்டால் ஆதமுடைய மகனை வழிகெடுப்பதற்காக அறப்போர் என்ற (நல்) வழியில் ஷைத்தான் அமர்ந்துகொண்டு அறப்போரில் உயிரையும் பொருளையும் அற்பணிக்க வேண்டும்.

நீ போரிட்டு கொல்லப்பட்டுவிட்டால் (உன்) மனைவியை மற்றவர் மணமுடித்துக்கொள்வார். உனது செல்வம் பங்கிடப்பட்டு மற்றவரால் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறுவான். (உறுதியுள்ள மனிதன்) இவனுக்கு மாறு செய்து அறப்போரில் கலந்துகொள்வான். இந்த நல்ல காரியங்களை செய்தவராக யார் மரணிக்கிறாரோ அவரை

إِنَّ الشَّيْطَانَ قَعَدَ لِابْنِ آدَمَ بِأَطْرُقِهِ، فَقَعَدَ لَهُ بِطَرِيقِ الْإِسْلَامِ، فَقَالَ لَهُ: أَتُسْلِمُ وَتَذَرُ دِينَكَ، وَدِينَ آبَائِكَ، وَآبَاءِ أَبِيكَ؟ ” قَالَ: ” فَعَصَاهُ، فَأَسْلَمَ، ثُمَّ قَعَدَ لَهُ بِطَرِيقِ الْهِجْرَةِ، فَقَالَ: أَتُهَاجِرُ وَتَذَرُ أَرْضَكَ، وَسَمَاءَكَ، وَإِنَّمَا مَثَلُ الْمُهَاجِرِ كَمَثَلِ الْفَرَسِ فِي الطِّوَلِ ” قَالَ: «فَعَصَاهُ فَهَاجَرَ» قَالَ: ” ثُمَّ قَعَدَ لَهُ بِطَرِيقِ الْجِهَادِ، فَقَالَ: هُوَ جَهْدُ النَّفْسِ، وَالْمَالِ، فَتُقَاتِلُ فَتُقْتَلُ، فَتُنْكَحُ الْمَرْأَةُ، وَيُقَسَّمُ الْمَالُ ” قَالَ: «فَعَصَاهُ فَجَاهَدَ» فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَمَنْ فَعَلَ ذَلِكَ مِنْهُمْ فَمَاتَ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ قُتِلَ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، وَإِنْ غَرِقَ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ وَقَصَتْهُ دَابَّةٌُ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ»


Ibn-Majah-296

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

296. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த கழிப்பிடங்கள் (ஷைத்தான்கள்) வருகை தரும் இடமாக உள்ளது. ஆகவே உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, “இறைவா! (அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கிலி)ருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி)


إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ، فَإِذَا دَخَلَ أَحَدُكُمْ، فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ “

حَدَّثَنَا جَمِيلُ بْنُ الْحَسَنِ الْعَتَكِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، ح وَحَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْقَاسِمِ بْنِ عَوْفٍ الشَّيْبَانِيِّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَذَكَرَ الْحَدِيثَ


Musnad-Ahmad-11729

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11729.


قَالَ إِبْلِيسُ: أَيْ رَبِّ لَا أَزَالُ أُغْوِي بَنِي آدَمَ، مَا دَامَتْ أَرْوَاحُهُمْ فِي أَجْسَادِهِمْ “، قَالَ: ” فَقَالَ الرَّبُّ عَزَّ وَجَلَّ: «لَا أَزَالُ أَغْفِرُ لَهُمْ، مَا اسْتَغْفَرُونِي»


Musnad-Ahmad-11367

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11367.


إِنَّ إِبْلِيسَ قَالَ لِرَبِّهِ عَزَّ وَجَلَّ: وَعِزَّتِكَ وَجَلَالِكَ لَا أَبْرَحُ أُغْوِي بَنِي آدَمَ مَا دَامَتِ الْأَرْوَاحُ فِيهِمْ، فَقَالَ لَهُ رَبُّهُ عَزَّ وَجَلَّ: فَبِعِزَّتِي وَجَلَالِي لَا أَبْرَحُ أَغْفِرُ لَهُمْ مَا اسْتَغْفَرُونِي


Musnad-Ahmad-11244

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

11244. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(எனது இறைவா) உனது கண்ணியத்தின் மீதும் மகத்துவத்தின் மீதும் சத்தியமாக ஆதமுடைய மக்கள் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் அவர்களை நான் வழிகெடுத்துக்கொண்டே இருப்பேன் என்று இப்லீஸ் இறைவனிடம் கூறினான். அதற்கு இறைவன் எனது கண்ணியத்தின் மீதும் மகத்துவத்தின் மீதும் சத்தியமாக அவர்கள் என்னிடம் பாவமன்னிப்புத் தேடும் காலமெல்லாம் அவர்களை நான் மன்னித்துக்கொண்டே இருப்பேன் என்று கூறினான்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)


إِنَّ إِبْلِيسَ قَالَ لِرَبِّهِ: بِعِزَّتِكَ وَجَلَالِكَ لَا أَبْرَحُ أُغْوِي بَنِي آدَمَ مَا دَامَتِ الْأَرْوَاحُ فِيهِمْ، فَقَالَ لَهُ اللَّهُ: فَبِعِزَّتِي وَجَلَالِي لَا أَبْرَحُ أَغْفِرُ لَهُمْ مَا اسْتَغْفَرُونِي


Musnad-Ahmad-11237

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11237. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(எனது இறைவா) உனது கண்ணியத்தின் மீதும் மகத்துவத்தின் மீதும் சத்தியமாக ஆதமுடைய மக்கள் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் அவர்களை நான் வழிகெடுத்துக்கொண்டே இருப்பேன் என்று இப்லீஸ் இறைவனிடம் கூறினான். அதற்கு இறைவன் எனது கண்ணியத்தின் மீதும் மகத்துவத்தின் மீதும் சத்தியமாக அவர்கள் என்னிடம் பாவமன்னிப்புத் தேடும் காலமெல்லாம் அவர்களை நான் மன்னித்துக்கொண்டே இருப்பேன் என்று கூறினான்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)


إِنَّ الشَّيْطَانَ قَالَ: وَعِزَّتِكَ يَا رَبِّ، لَا أَبْرَحُ أُغْوِي عِبَادَكَ مَا دَامَتْ أَرْوَاحُهُمْ فِي أَجْسَادِهِمْ، قَالَ الرَّبُّ: وَعِزَّتِي وَجَلَالِي لَا أَزَالُ أَغْفِرُ لَهُمْ مَا اسْتَغْفَرُونِي


Darimi-2174

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2174.


قَالَ: لِرَجُلٍ رَآهُ يَشْرَبُ قَائِمًا قِئْ قَالَ: لِمَ. قَالَ: «أَتُحِبُّ أَنْ تَشْرَبَ مَعَ الْهِرِّ» قَالَ: لَا. قَالَ: «فَقَدْ شَرِبَ مَعَكَ شَرٌّ مِنْهُ الشَّيْطَانُ»


Next Page » « Previous Page