Month: May 2023

Sharh-Mushkil-Al-Athar-3583

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3583. நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களை யமன் (எனும்) நாட்டுக்கு அனுப்பும் போது, “ஏதேனும் வழக்கு ஏற்படும்போது நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நான் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார். அதைப் பற்றி அல்லாஹ்வின் வேதத்தில் நீ காணவில்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையில் உள்ளதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார்.

அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறையிலும் நீ காணவில்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “என்னுடைய சிந்தனையைக் கொண்டு முடிந்தவரை ஆய்வு செய்வேன்” என்று பதிலளித்தார். (உடனே) நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களின் நெஞ்சில் அடித்து விட்டு, “அல்லாஹ்வின் தூதரை மகிழ்ச்சிப்படுத்தும் செயலின் பக்கம் அல்லாஹ்வின் தூதரின் தூதருக்கு, நல்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: ஹிம்ஸ் நகரைச் சேர்ந்த முஆத் (ரலி) அவர்களின் தோழர்கள்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَهُ إِلَى الْيَمَنِ قَالَ: ” كَيْفَ تَقْضِي إِذَا عَرَضَ لَكَ قَضَاءٌ؟ ” قَالَ أَقْضِي بِمَا فِي كِتَابِ اللهِ عَزَّ وَجَلَّ قَالَ: ” فَإِنْ لَمْ يَكُنْ فِي كِتَابِ اللهِ عَزَّ وَجَلَّ؟ ” , قُلْتُ: بِسُنَّةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ: ” فَإِنْ لَمْ يَكُنْ فِي سُنَّةِ رَسُولِ اللهِ؟ قَالَ: أَجْتَهِدُ رَأْيِي وَلَا آلُو , قَالَ: فَضَرَبَ صَدْرِي بِيَدِهِ وَقَالَ: ” الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللهِ لِمَا يُرْضِي رَسُولَ اللهِ “

قَالَ: ثُمَّ كَذَلِكَ كَانَ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَعْدِهِ فِي هَذَا الْمَعْنَى

كَمَا حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ عَدِيٍّ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ , عَنِ الشَّيْبَانِيِّ أَبِي إِسْحَاقَ , عَنْ أَبِي الضُّحَى , عَنْ مَسْرُوقٍ , أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ كَتَبَ بِقَضِيَّةٍ إِلَى عَامِلٍ لَهُ , فَكَتَبَ الْكَاتِبُ: هَذَا مَا أَرَى الله عُمَرَ , فَقَالَ: امْحُهُ وَاكْتُبْ: ” هَذَا مَا رَأَى عُمَرُ , فَإِنْ يَكُنْ صَوَابًا فَمِنَ اللهِ عَزَّ وَجَلَّ , وَإِنْ يَكُنْ خَطَأً فَمِنْ عُمَرَ “

وَمِثْلُ ذَلِكَ مَا كَانَ مِنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ لَمَّا سُئِلَ عَنِ الرَّجُلِ الَّذِي تَزَوَّجَ امْرَأَةً فَلَمْ يَدْخُلْ بِهَا , وَلَمْ يُسَمِّ لَهَا صَدَاقًا حَتَّى تُوُفِّيَ: ” أَقُولُ فِيهَا بِرَأْيِي , فَإِنْ يَكُنْ خَطَأً فَمِنْ قِبَلِي , وَإِنْ يَكُنْ صَوَابًا فَمِنِ اللهِ عَزَّ وَجَلَّ “.


Musannaf-Ibn-Abi-Shaybah-29100

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29100. நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களை (யமன் எனும் நாட்டுக்கு) அனுப்பும் போது, “(பிரச்சனை ஏற்படும்போது) நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நான் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார். (அந்தப் பிரச்சனைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தில் இல்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையில் உள்ளதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார்.

அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறையிலும் இல்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “என்னுடைய சிந்தனையைக் கொண்டு ஆய்வு செய்வேன்” என்று பதிலளித்தார். (உடனே) நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரின் தூதருக்கு நல்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹிம்ஸ் நகரைச் சேர்ந்த முஆத் (ரலி) அவர்களின் தோழர்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَهُ، قَالَ: «كَيْفَ تَقْضِي؟»، قَالَ: أَقْضِي بِكِتَابِ اللَّهِ، قَالَ: «فَإِنْ لَمْ يَكُنْ كِتَابٌ؟» قَالَ: أَقْضِي بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «فَإِنْ لَمْ تَكُنْ سُنَّةٌ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟»، قَالَ: أَجْتَهِدُ بِرَأْيِي، قَالَ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللَّهِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-22989

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22989. நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களை (யமன் எனும் நாட்டுக்கு) அனுப்பும் போது, “(பிரச்சனை ஏற்படும்போது) நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நான் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார்.

அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத; நபிய்யும், நல்லோர்களும் தீர்வு கூறாத பிரச்சனை ஏற்பட்டால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “என்னுடைய சிந்தனையைக் கொண்டு ஆய்வு செய்து உண்மையைக் கண்டறிவேன்” என்று பதிலளித்தார்.

(உடனே) நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் விரும்பியவாறு தீர்ப்பளிப்பதற்கு, அல்லாஹ்வின் தூதரின் தூதருக்கு நல்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மது பின் உபைதுல்லாஹ் (அபூஅவ்ன்-ரஹ்)


لَمَّا بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعَاذًا إِلَى الْيَمَنِ قَالَ: «يَا مُعَاذُ بِمَ تَقْضِي؟» قَالَ: أَقْضِي بِكِتَابِ اللَّهِ، قَالَ: «فَإِنْ جَاءَكَ أَمْرٌ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، وَلَمْ يَقْضِ فِيهِ نَبِيُّهُ، وَلَمْ يَقْضِ فِيهِ الصَّالِحُونَ؟» قَالَ: أَؤُمُّ الْحَقَّ جَهْدِي، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ رَسُولَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْضِي بِمَا يَرْضَى بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-22988

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

நீதிபதி முதலில் தீர்வை எதிலிருந்து (தேடி) பெற வேண்டும்?

22988. நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களை (யமன் எனும் நாட்டுக்கு) அனுப்பும் போது, “(பிரச்சனை ஏற்படும்போது) நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நான் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார். அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத பிரச்சனை ஏற்பட்டால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையில் உள்ளதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார்.

அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறையிலும் இல்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “என்னுடைய சிந்தனையைக் கொண்டு ஆய்வு செய்வேன்” என்று பதிலளித்தார். (உடனே) நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரின் தூதருக்கு நல்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: ஹிம்ஸ் நகரைச் சேர்ந்த முஆத் (ரலி) அவர்களின் தோழர்கள்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَهُ، قَالَ: «كَيْفَ تَقْضِي؟» قَالَ: أَقْضِي بِمَا فِي كِتَابِ اللَّهِ، قَالَ: «فَإِنْ جَاءَكَ أَمْرٌ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ»، قَالَ: أَقْضِي بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «فَإِنْ لَمْ تَكُنْ سُنَّةٌ مِنْ رَسُولِ اللَّهِ؟» قَالَ: أَجْتَهِدُ رَأْيِي، قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Tayalisi-560

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் (வழியாக வரும்) ஹதீஸ்கள்.

560. நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களை யமன் (எனும்) நாட்டுக்கு அனுப்பும் போது, “ஏதேனும் வழக்கு ஏற்படும்போது நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நான் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார். அதைப் பற்றி அல்லாஹ்வின் வேதத்தில் நீ காணவில்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையில் உள்ளதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார்.

அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறையிலும் நீ காணவில்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “என்னுடைய சிந்தனையைக் கொண்டு முடிந்தவரை ஆய்வு செய்வேன்” என்று பதிலளித்தார். (உடனே) நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களின் நெஞ்சில் அடித்து விட்டு, “அல்லாஹ்வின் தூதரை மகிழ்ச்சிப்படுத்தும் செயலின் பக்கம் அல்லாஹ்வின் தூதரின் தூதருக்கு, நல்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: ஹிம்ஸ் நகரைச் சேர்ந்த முஆத் (ரலி) அவர்களின் தோழர்கள்.

தயாலிஸீ இமாம் கூறுகிறார்:

ஷுஅபா அவர்கள், ஒரு தடவை ஹாரிஸ்

إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ قَالَ لَهُ: «كَيْفَ تَقْضِي إِنْ عَرَضَ لَكَ قَضَاءٌ؟» قَالَ: أَقْضِي بِكِتَابِ اللَّهِ قَالَ: «فَإِنْ لَمْ تَجِدْهُ فِي كِتَابِ اللَّهِ؟» قَالَ: أَقْضِي بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَإِنْ لَمْ تَجِدْهُ فِي سُنَّةِ رَسُولِ اللَّهِ؟» قَالَ: أَجْتَهِدُ رَأْيِي لَا آلُو قَالَ: فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللَّهِ لِمَا يُرْضِي رَسُولَ اللَّهِ»


அறிவிப்பாளர்களின் தர விளக்க வார்த்தைகள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ألفاظ الجرح والتعديل ஹதீஸ் அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையிலும், நினைவாற்றலிலும் இருக்கும் (جرح , تعديل) குறை நிறைகளை குறிப்பிடுவதற்கு அறிஞர்கள் சில வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். இதன்மூலம் அறிவிப்பாளர்களின் தரங்களையும், அவர்கள் இடம்பெறும் ஹதீஸின் தரத்தையும் ஓரளவு நாம் அறிந்துக் கொள்ளலாம். முதல் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள்: 1 . (நம்பகத்தன்மையிலும், நினைவாற்றலிலும்) மிகவும் பலமானவர்கள்; உறுதியானவர்கள் என்று குறிப்பிட பயன்படுத்தும் வார்த்தைகள்: 1...
« Previous Page