Month: May 2024

raavi-39-அபான் பின் யஸீத் அல்அத்தார்

அபான் பின் யஸீத் அல்அத்தார்-أبان بن يزيد العطار இறப்பு: ஹி-160. தரம்: பலமானவர். சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார். இயற்பெயர்: அபான் தந்தை பெயர்: யஸீத் குறிப்புப் பெயர்: அபூயஸீத் தொழில் மற்றும் ஊர் பெயர்: அல்அத்தார், பஸரீ பிறப்பு: இறப்பு: ஹிஜ்ரீ-160. கால கட்டம்: 7. ....

raavi-34888-மாலிக் இமாம்-மாலிக் பின் அனஸ்

மாலிக் இமாம் - مالك بن أنس الأصبحي (ஹி-93 -179 வயது 86) தரம்: ஹதீஸ்துறையின் முக்கியமான இமாம், மிகப் பலமானவர். இயற்பெயர்: மாலிக். தந்தை பெயர்: அனஸ் பின் மாலிக் குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ் குலம்: இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது. பிறப்பு: ஹிஜ்ரீ 92 - 95 க்குள் மதீனாவில் பிறந்தார். இறப்பு: ஹிஜ்ரீ...

அறிவிப்பாளர்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஜவாமிஉல் கலிம் அறிவிப்பாளர் எண் வரிசைப்படி இதுவரை நாம் தொகுத்துள்ள சில அறிவிப்பாளர்கள் விவரம். இன்ஷா அல்லாஹ், அறிவிப்பாளர்கள் விவரம் என்ற தனிப்பகுதியில் இனி ஒவ்வொரு அறிவிப்பாளர் பற்றியும் தனித்தனியாக பதிவு செய்யப்படும். ராவீ நம்பர் பெயர் - ஜவாமிஃ-49845 அறிவிப்பாளர்கள் தரம் -11236- ஹபீப் பின் யஸீத் -16227- ஸுஹைர் பின் முஹம்மத் -26597- அப்துல்மலிக் பின் அம்ர் -4991- அஹ்மத் பின்...

Ibn-Majah-2252

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

2252. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஒரு அடிமைப் பெண்ணை வாங்கினால், “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரஹா, வ கைர மா ஜபில்தஹா அலைஹி. வ அவூது பிக மின் ஷர்ரிஹா, வ ஷர்ரி மா ஜபில்தஹா அலைஹி” என்று கூறி (அல்லாஹ்விடம்) அருள்வளத்தைக் கேட்கவும்.

(பொருள்: அல்லாஹ்வே! இதன் மூலம் ஏற்படும் அனைத்து நலவுகளையும்; இதை எந்த நியதியின்படி நீ படைத்துள்ளாயோ அந்த நலவுகளையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் இதன் மூலம் ஏற்படும் அனைத்து தீங்குகளையும்; இதை எந்த நியதியின்படி நீ படைத்துள்ளாயோ அந்த தீங்குகளையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)

உங்களில் ஒருவர், ஒரு ஒட்டகத்தை வாங்கினால் அதன் திமிலைப் பிடித்துக் கொண்டு (அல்லாஹ்விடம்) அருள்வளத்தைக் கேட்டு இதே போன்றுக் கூறவும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


إِذَا اشْتَرَى أَحَدُكُمُ الْجَارِيَةَ، فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَلْيَدْعُ بِالْبَرَكَةِ، وَإِذَا اشْتَرَى أَحَدُكُمْ بَعِيرًا، فَلْيَأْخُذْ بِذِرْوَةِ سَنَامِهِ، وَلْيَدْعُ بِالْبَرَكَةِ، وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ


Ibn-Majah-1918

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

வீட்டுக்கு மணப்பெண் வரும்போது (மணமகனான) ஒரு ஆண் கூற வேண்டிய பிரார்த்தனை.

1918. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் முடித்தால் அல்லது ஒரு அடிமையையோ அல்லது  வாகனத்தையோ வாங்கினால் அதன் நெற்றி முடியை பிடித்தவாறு, “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் கைரிஹா, வ கைரி மா ஜுபிலத் அலைஹி. வ அவூது பிக மின் ஷர்ரிஹா, வ ஷர்ரி மா ஜுபிலத் அலைஹி” என்று கூறவும்.

(பொருள்: அல்லாஹ்வே! இதன் மூலம் ஏற்படும் அனைத்து நலவுகளையும்; இதை எந்த நியதியின்படி படைக்கப்பட்டுள்ளதோ அந்த நலவுகளையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் இதன் மூலம் ஏற்படும் அனைத்து தீங்குகளையும்; இதை எந்த நியதியின்படி படைக்கப்பட்டுள்ளதோ அந்த தீங்குகளையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


إِذَا أَفَادَ أَحَدُكُمُ امْرَأَةً، أَوْ خَادِمًا، أَوْ دَابَّةً، فَلْيَأْخُذْ بِنَاصِيَتِهَا، وَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا، وَخَيْرِ مَا جُبِلَتْ عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا جُبِلَتْ عَلَيْهِ


Abi-Yala-6610

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

6610. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஒரு அடிமையை வாங்கினால் அவரின் நெற்றி முடியை பிடித்தவாறு, “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் கைரிஹா, வ கைரி மா ஜபில்தஹா அலைஹி”  என்று கூறவும்.

(பொருள்: அல்லாஹ்வே! இதன் மூலம் ஏற்படும் அனைத்து நலவுகளையும்; இதை எந்த நியதியின்படி நீ படைத்துள்ளாயோ அந்த நலவுகளையும் உன்னிடம் கேட்கிறேன்.)

உங்களில் ஒருவர், ஒரு ஒட்டகத்தை வாங்கினால் அதன் திமிலைப் பிடித்துக் கொண்டு இதே போன்று கூறவும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إِذَا اشْتَرَى أَحَدُكُمْ خَادِمًا فَلْيَأْخُذْ بِنَاصِيَتِهَا وَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِهَا وَخَيْرِ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَإِذَا اشْتَرَى بَعِيرًا فَلْيَأْخُذْ بِذُرْوَةِ سَنَامِهِ وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ


Abu-Dawood-2160

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

திருமணம் குறித்து வந்துள்ள மற்ற பொதுவானவை.

2160. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் அல்லது ஒரு அடிமையை வாங்கினால், “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரஹா, வ கைர மா ஜபில்தஹா அலைஹி. வ அவூது பிக மின் ஷர்ரிஹா, வமின் ஷர்ரி மா ஜபில்தஹா அலைஹி” என்று கூறவும்.

(பொருள்: அல்லாஹ்வே! இதன் மூலம் ஏற்படும் அனைத்து நலவுகளையும்; இதை எந்த நியதியின்படி நீ படைத்துள்ளாயோ அந்த நலவுகளையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் இதன் மூலம் ஏற்படும் அனைத்து தீங்குகளையும்; இதை எந்த நியதியின்படி நீ படைத்துள்ளாயோ அந்த தீங்குகளையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)

உங்களில் ஒருவர், ஒரு ஒட்டகத்தை வாங்கினால் அதன் திமிலைப் பிடித்துக் கொண்டு இதே போன்று கூறவும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

அபூஸயீத் (அப்துல்லாஹ் பின் ஸயீத்) அவர்கள், மணப்பெண், அடிமை விசயத்தில், “பிறகு நெற்றி முடியை பிடித்து அருள்வளம் பெறுவதற்காக துஆ செய்யட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கூடுதலாக அறிவித்துள்ளார்.


«إِذَا تَزَوَّجَ أَحَدُكُمُ امْرَأَةً أَوِ اشْتَرَى خَادِمًا، فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَإِذَا اشْتَرَى بَعِيرًا فَلْيَأْخُذْ بِذِرْوَةِ سَنَامِهِ وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ».


« Previous Page