Month: May 2024

Tirmidhi-66

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

தண்ணீரை எப்பொருளும் அசுத்தப்படுத்தாது.

66. மாதவிடாய்த் துணிகளும், நாய்களின் மாமிசத்துண்டும், நாற்றமான பொருட்களும் ‎போடப்படுகின்ற புழாஆ என்ற கிணற்று நீரில் நாங்கள் உளூச் செய்யலாமா? என்று ‎அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, தண்ணீர் ‎தூய்மைப் படுத்தும் பொருளாகும். எப்பொருளுமே அதை அசுத்தப்படுத்தாது என்று ‎நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள்.


قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَتَتَوَضَّأُ مِنْ بِئْرِ بُضَاعَةَ، وَهِيَ بِئْرٌ يُلْقَى فِيهَا الحِيَضُ، وَلُحُومُ الكِلَابِ، وَالنَّتْنُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ المَاءَ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَيْءٌ».


Tirmidhi-65

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரில் ஆண் உளூச் செய்வதற்கு அனுமதி.

65. நபி (ஸல்) அவர்கள் மனைவியரில் ஒருவர், வாய் அகன்ற பாத்திரத்தில் குளித்தார்கள். ‎அப்போது நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக வந்த ‎போது, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் குளிப்பு கடமையானவளாக இருந்தேன் ‎என்று அவர் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அதனால்) தண்ணீர் பெருந்துடக்குள்ளதாக-தூய்மையற்றதாக ஆகிவிடாது” என்று  ‎பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَفْنَةٍ، فَأَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَوَضَّأَ مِنْهُ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ جُنُبًا، فَقَالَ: «إِنَّ المَاءَ لَا يُجْنِبُ».


Tirmidhi-64

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

64. பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரில் ஆண் உளூச் செய்வதை நபி (ஸல்) அவர்கள் ‎தடை செய்தார்கள் .

அறிவிப்பவர்: ஹகம் பின் அமர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் மஹ்மூத் பின் ஃகைலான் பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீர் அல்லது பெண் வாய் வைத்த தண்ணீர் என்று சந்தேகமாக அறிவிக்கிறார். முஹம்மத் பின் பஷ்ஷார் அவ்வாறு சந்தேகமாக அறிவிக்வில்லை.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ طَهُورِ المَرْأَةِ – أَوْ قَالَ: بِسُؤْرِهَا – “،


raavi-25382-இப்னு லஹீஆ

இப்னு லஹீஆ (அப்துல்லாஹ் பின் லஹீஆ) - عبد الله بن لهيعة الحضرمي ஹி 70; 95; 96; 97 - 170; 173; 174; 175, வயது 77. தரம்: சில குறிப்பிட்ட அறிவிப்பாளர்கள் இவரிடமிருந்து அறிவித்தால் அந்தச் செய்தி வேறு குறைகள் இல்லாவிட்டால் சரியானது. மற்ற சிலர் அறிவித்தால் பலவீனமானது. இயற்பெயர்: அப்துல்லாஹ் தந்தை பெயர்: லஹீஆ குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ் தொழில் மற்றும் ஊர்...

raavi-34540-கஸீர் பின் கைஸ்

கஸீர் பின் கைஸ் - كثير بن قيس الشامي தரம்: பலவீனமானவர். இயற்பெயர்: கஸீர் தந்தை பெயர்: கைஸ் குறிப்புப் பெயர்: ஊர்: ஷாம் நாட்டைச் சேர்ந்தவர் பிறப்பு: இறப்பு: கால கட்டம்: 3. ...

Tirmidhi-63

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரை பயன்படுத்துவது வெறுப்புக்குரியது.

63. பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரை (பயன்படுத்துவதை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.

அறிவிப்பவர்: பனூ ஃகிஃபார் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ فَضْلِ طَهُورِ المَرْأَةِ».


Tirmidhi-62

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஆணும், பெண்ணும் ஒரே பாத்திரத்தில் உளூச் செய்தல்.

62. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் நபி (ஸல்) அவர்களும் பெருந்துடக்கினால் ஒரே பாத்திரத்தில் குளிப்போம்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:


«كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنَ الْجَنَابَةِ»


Tirmidhi-61

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

நபி (ஸல்) அவர்கள் ஒரே உளூவில் பல(நேரத்)தொழுகைகளை தொழுதது குறித்து வந்துள்ளவை.

61. நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்பவர்களாக இருந்தார்கள். மக்கா வெற்றியின் போது ஒரே உளூவில் ஐந்து நேரத்தொழுகைகளை தொழுதார்கள். தனது காலுறைகளுக்கு மஸஹ் செய்து கொண்டார்கள். அப்போது அவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள், நீங்கள் இது வரை செய்திராத ஒன்றை இன்று செய்தீர்களே (ஏன்) என்று கேட்க, “நான் வேண்டுமென்று தான் செய்தேன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: புரைதா பின் ஹுஸைப் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:


«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ، فَلَمَّا كَانَ عَامُ الفَتْحِ صَلَّى الصَّلَوَاتِ كُلَّهَا بِوُضُوءٍ وَاحِدٍ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ»، فَقَالَ عُمَرُ: إِنَّكَ فَعَلْتَ شَيْئًا لَمْ تَكُنْ فَعَلْتَهُ، قَالَ: «عَمْدًا فَعَلْتُهُ».


Nasaayi-73

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஒருவருக்கு உளூச் செய்ய போதுமான தண்ணீரின் அளவு.

73. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முத்து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்வார்கள்; ஐந்து முத்து அளவுத் தண்ணீரில் குளிப்பார்கள்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَتَوَضَّأُ بِمَكُّوكٍ وَيَغْتَسِلُ بِخَمْسِ مَكَاكِيَّ»


Nasaayi-72

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

குளிப்புக் கடமையானவரின் சிறப்பு.

72. நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரே பாத்திரத்தில் (சேர்ந்து) குளிப்பேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.


أَنَّهَا كَانَتْ تَغْتَسِلُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْإِنَاءِ الْوَاحِدِ


Next Page » « Previous Page