Month: July 2024

Almujam-Alawsat-8147

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8147. அதாஉ பின் அபூரபாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), ஜாபிர் பின் உமைர் (ரலி) ஆகிய இருவரும் அம்பெறிந்து பயிற்சி செய்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். (சிறிது நேரத்தில்) இருவரில் ஒருவர் சோர்ந்து உட்கார்ந்து விட்டார். உடனே மற்றவர், நீங்கள் சோர்ந்து விட்டீர்களா? என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின் வருமாறு) கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்:

அல்லாஹ்வின் நினைவு இல்லாத எந்த ஒன்றும் வீணானதே. நான்கு செயல்களைத் தவிர. அவைகள்:

1 . (அம்பெறிவதற்காக) இரு இலக்குகளை குறிபார்க்க நடப்பது.
2 . தனது குதிரைக்கு பயிற்சியளிப்பது.
3 . தனது மனைவியோடு விளையாடுவது.
4 . நீச்சல் அடிக்க கற்றுக் கொள்வது.


رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، وَجَابِرَ بْنَ عُمَيْرٍ الْأَنْصَارِيَّ يَرْتَمِيَانِ، فَمَلَّ أَحَدُهُمَا فَجَلَسَ، فَقَالَ لَهُ الْآخَرُ: كَسَلْتَ؟ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كُلُّ شَيْءٍ لَيْسَ مِنْ ذِكْرِ اللَّهِ فَهُوَ لَهْوٌ وَسَهْوٌ، إِلَّا أَرْبَعَ خِصَالٍ: مَشْيُ الرَّجُلِ بَيْنَ الْغَرَضَيْنِ، وَتَأْدِيبُهُ فَرَسَهُ، وَمُلَاعَبَتُهُ أَهْلَهُ، وَتَعَلُّمُ السِّبَاحَةِ»


Kubra-Nasaayi-8890

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8890. அதாஉ பின் அபூரபாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), ஜாபிர் பின் உமைர் (ரலி) ஆகிய இருவரும் அம்பெறிந்து பயிற்சி செய்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அவ்விருவரில் ஒருவர், மற்றவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின் வருமாறு) கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்:

அல்லாஹ்வின் நினைவு இல்லாத எந்த ஒன்றும் வீணானதே. நான்கு செயல்களைத் தவிர. அவைகள்:

1 . தனது மனைவியோடு விளையாடுவது.(அம்பெறிவதற்காக)
2 . தனது குதிரைக்கு பயிற்சியளிப்பது.
3 . இரு இலக்குகளை குறிபார்க்க நடப்பது.
4 . (பிறருக்கு) நீச்சல் அடிக்க கற்றுத் தருவது.


رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ وَجَابِرَ بْنَ عُمَيْرٍ الْأَنْصَارِيَّيْنِ يَرْمِيَانِ فَقَالَ أَحَدُهُمَا: لِصَاحِبِهِ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كُلُّ شَيْءٍ لَيْسَ فِيهِ ذِكْرُ اللهِ فَهُوَ لَهْوٌ وَلَعِبٌ إِلَّا أَرْبَعَ، مُلَاعَبَةُ الرَّجُلِ امْرَأَتَهُ، وَتَأْدِيبُ الرَّجُلِ فَرَسَهُ، وَمَشْيُهُ بَيْنَ الْغَرَضَيْنِ، وَتَعْلِيمُ الرَّجُلِ السَّبَّاحَةَ»


Kubra-Nasaayi-8889

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8889. அதாஉ பின் அபூரபாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), ஜாபிர் பின் உமைர் (ரலி) ஆகிய இருவரும் அம்பெறிந்து பயிற்சி செய்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். (சிறிது நேரத்தில்) இருவரில் ஒருவர் சலிப்படைந்து உட்கார்ந்து விட்டார். உடனே மற்றவர், நீங்கள் கலைப்படைந்து விட்டீர்களா? என்று கேட்க, அவர் ஆம் என்று கூறினார்.

உடனே அவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின் வருமாறு) கூறியதை நீங்கள் செவியேற்கவில்லையா? என்று கூறிவிட்டு அவர் சொன்னதாவது:

அல்லாஹ்வின் நினைவு இல்லாத எந்த ஒன்றும் வீணானதே. நான்கு செயல்களைத் தவிர. அவைகள்:

1 . தனது மனைவியோடு விளையாடுவது.
2 . தனது குதிரைக்கு பயிற்சியளிப்பது.
3 . (அம்பெறிவதற்காக) இரு இலக்குகளை குறிபார்க்க நடப்பது.
4 . (பிறருக்கு) நீச்சல் அடிக்க கற்றுத் தருவது.


رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ وَجَابِرَ بْنَ عُمَيْرٍ الْأَنْصَارِيَّيْنِ يَرْمِيَانِ قَالَ: «فَأَمَّا أَحَدُهُمَا فَجَلَسَ» فَقَالَ لَهُ صَاحِبُهُ: «أَكَسِلْتَ؟» قَالَ: «نَعَمْ» فَقَالَ أَحَدُهُمَا لِلْآخَرِ: أَمَا سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” كُلُّ شَيْءٍ لَيْسَ مِنْ ذِكْرِ اللهِ فَهُوَ لَعِبٌ، لَا يَكُونُ أَرْبَعَةٌ: مُلَاعَبَةُ الرَّجُلِ امْرَأَتَهُ، وَتَأْدِيبُ الرَّجُلِ فَرَسَهُ، وَمَشْيُ الرَّجُلِ بَيْنَ الْغَرَضَيْنِ، وَتَعَلُّمُ الرَّجُلِ السَّبَّاحَةَ “


Kubra-Nasaayi-8891

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

8891. அதாஉ பின் அபூரபாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), ஜாபிர் பின் உமைர் (ரலி) ஆகிய இருவரும் அம்பெறிந்து பயிற்சி செய்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். (சிறிது நேரத்தில்) இருவரில் ஒருவர் சலிப்படைந்து உட்கார்ந்து விட்டார். உடனே மற்றவர், நீங்கள் கலைப்படைந்து விட்டீர்களா? என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின் வருமாறு) கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்:

அல்லாஹ்வின் நினைவு இல்லாத எந்த ஒன்றும் வீணானதே. நான்கு செயல்களைத் தவிர. அவைகள்:

1 . (அம்பெறிவதற்காக) இரு இலக்குகளை குறிபார்க்க நடப்பது.
2 . தனது குதிரைக்கு பயிற்சியளிப்பது.
3 . தனது மனைவியோடு விளையாடுவது.
4 . (பிறருக்கு) நீச்சல் அடிக்க கற்றுத் தருவது.


رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ وَجَابِرَ بْنَ عُمَيْرٍ الْأَنْصَارِيَّيْنِ يَرْمِيَانِ، فَمَلَّ أَحَدُهُمَا فَجَلَسَ فَقَالَ الْآخَرُ: «كَسِلْتَ؟» سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” كُلُّ شَيْءٍ لَيْسَ مِنْ ذِكْرِ اللهِ فَهُوَ لَغْوٌ وَلَهْوٌ إِلَّا أَرْبَعَةَ خِصَالٍ: مَشْيٌ بَيْنَ الْغَرَضَيْنِ، وَتَأْدِيبُهُ فَرَسَهُ، وَمُلَاعَبَتُهُ أَهْلَهُ، وَتَعْلِيمُ السَّبَّاحَةِ “


Nasaayi-3578

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஒருவர் தனது குதிரைக்குப் பயிற்சியளித்தல்.

3578. காலித் பின் யஸீத் அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “காலித்! நம்மோடு புறப்படுங்கள். நாம் அம்பெறி(ந்து பயிற்சி செய்)வோம்” என்று கூறினார்கள். (இவ்வாறு நாங்கள் செய்துகொண்டி ருந்தபோது) ஒரு நாள் நான் தாமதித்துவிட்டேன்.

அப்போது அவர்கள், “காலித்! வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை உமக்குத் தெரிவிக்கிறேன்” என்று சொன்னார்கள். எனவே நான் அவர்களிடம் சென்றேன்.

அச்சமயத்தில் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னதாவது:

(திண்ணமாக அல்லாஹ் ஓர் அம்பின் மூலம் மூன்று பேரைச் சொர்க்கத்தில் நுழையச் செய்கிறான்:

1 . செய்கின்றபோது நன்மையை நாடி அதைச் செய்பவர்.
2 . அதை எறிபவர்.
3 . அம்பெறிவதற்காக (மீண்டும் பயன்படுத்த எடுத்துக் கொடுத்தோ பொருளாதார ரீதியாகவோ) உதவி செய்பவர்.

(எனவே) அம்பெறி(ந்து பயிற்சி செய்)யுங்கள். (குதிரை) சவாரி செய்யுங்கள். நீங்கள் (குதிரை) சவாரி செய்வதைவிட அம்பெறி(ந்து பயிற்சி செய்)வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.)

மூன்று விஷயங்களில் வீண் என்பது கிடையாது.

1 . ஒருவர் தனது குதிரைக்குப் பயிற்சியளிப்பது.
2 . ஒருவர் தனது மனைவியுடன்

كَانَ عُقْبَةُ بْنُ عَامِرٍ، يَمُرُّ بِي فَيَقُولُ: يَا خَالِدُ، اخْرُجْ بِنَا نَرْمِي، فَلَمَّا كَانَ ذَاتَ يَوْمٍ أَبْطَأْتُ عَنْهُ، فَقَالَ: يَا خَالِدُ، تَعَالَ أُخْبِرْكَ بِمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَأَتَيْتُهُ، فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ وَلَيْسَ اللَّهْوُ إِلَّا فِي ثَلَاثَةٍ: تَأْدِيبِ الرَّجُلِ فَرَسَهُ، وَمُلَاعَبَتِهِ امْرَأَتَهُ، وَرَمْيِهِ بِقَوْسِهِ، وَنَبْلِهِ، وَمَنْ تَرَكَ الرَّمْيَ بَعْدَ مَا عَلِمَهُ رَغْبَةً عَنْهُ، فَإِنَّهَا نِعْمَةٌ كَفَرَهَا ” أَوْ قَالَ: «كَفَرَ بِهَا»


Musannaf-Ibn-Abi-Shaybah-10829

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10829.


«يَوَدُّ أَهْلُ الْبَلَاءِ يَوْمَ الْقِيَامَةِ أَنَّ أَجْسَادَهُمْ كَانَتْ فِي الدُّنْيَا تُقْرَضُ بِالْمَقَارِيضِ»


Tirmidhi-2402

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

2402. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உலகில் சோதனைகளுக்குள்ளானவர்களுக்கு மறுமையில் நன்மை வழங்கப்படும் போது, உலகில் ஆரோக்கியமாக (நல்ல நிலையில்) வாழ்ந்தவர்கள், “நாங்கள் உலகில் வாழும்போது எங்களுடைய தோல்கள் கத்திரிக்கோலால் வெட்டப்பட்டிருக்க வேண்டுமே!” என்று ஆசைப்படுவார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த (அரிதான) செய்தியாகும். இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே இது வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.

வேறு சிலர் அஃமஷ் அவர்களிடமிருந்து, அஃமஷ் —> தல்ஹா பின் முஸர்ரிஃப் —> மஸ்ரூக் என்ற அறிவிப்பாளர்தொடரில் மஸ்ரூக் அவர்களின் சொல்லாக இதில் சிலதை அறிவித்துள்ளனர்.


«يَوَدُّ أَهْلُ العَافِيَةِ يَوْمَ القِيَامَةِ حِينَ يُعْطَى أَهْلُ البَلَاءِ الثَّوَابَ لَوْ أَنَّ جُلُودَهُمْ كَانَتْ قُرِضَتْ فِي الدُّنْيَا بِالمَقَارِيضِ»


Musnad-Ahmad-3783

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3783. ஒரு வியாபாரத்தை இரண்டு வியாபாரமாக (அதாவது உடனடி விற்பனைக்கு ஒரு விலையும், தவணை முறை விற்பனைக்கு வேறு ஒரு கூடுதலான விலையும் வைத்து வியாபாரம்) செய்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸிமாக் அவர்கள், “ஒரு வியாபாரத்தை இரண்டு வியாபாரமாக செய்வது” என்றால் என்ன என்பது பற்றி விளக்கமளிக்கையில், “ஒருவர் ஒரு பொருளை விற்கும் போது தவணைமுறையில் வாங்கினால் இன்ன விலையும்; உடனடி விலைக்கு வாங்கினால் இன்ன விலையும் என்று கூறி விற்பதாகும்” என்று கூறினார்கள்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَفْقَتَيْنِ فِي صَفْقَةٍ وَاحِدَةٍ»

قَالَ أَسْوَدُ: قَالَ شَرِيكٌ: قَالَ سِمَاكٌ: ” الرَّجُلُ يَبِيعُ الْبَيْعَ، فَيَقُولُ: هُوَ بِنَسَاءٍ بِكَذَا وَكَذَا، وَهُوَ بِنَقْدٍ بِكَذَا وَكَذَا “


Nasaayi-3581

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ، فَسَأَلَهُ رَجُلٌ أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ؟، قَالَ: لَا، قَالَ: فَلَعَلَّهُ كَانَ يَقْرَأُ فِي نَفْسِهِ؟ قَالَ: خَمْشًا، هَذِهِ شَرٌّ مِنَ الْأُولَى، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدٌ أَمَرَهُ اللَّهُ تَعَالَى بِأَمْرِهِ، فَبَلَّغَهُ، وَاللَّهِ مَا اخْتَصَّنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ دُونَ النَّاسِ إِلَّا بِثَلَاثَةٍ: «أَمَرَنَا أَنْ نُسْبِغَ الْوُضُوءَ، وَأَنْ لَا نَأْكُلَ الصَّدَقَةَ، وَلَا نُنْزِيَ الْحُمُرَ عَلَى الْخَيْلِ»


Next Page » « Previous Page