Month: July 2024

Nasaayi-141

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

141.


كُنَّا جُلُوسًا إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ فَقَالَ: ” وَاللَّهِ مَا خَصَّنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ دُونَ النَّاسِ إِلَّا بِثَلَاثَةِ أَشْيَاءَ: فَإِنَّهُ أَمَرَنَا أَنْ نُسْبِغَ الْوُضُوءَ، وَلَا نَأْكُلَ الصَّدَقَةَ، وَلَا نُنْزِيَ الْحُمُرَ عَلَى الْخَيْلِ


Ibn-Majah-426

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

உளூவை முழுமையாகச் செய்யவேண்டும் என்பது குறித்து வந்துள்ளவை.

426. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உளூ எனும் அங்கத்தூய்மையை நாங்கள் முழுமையாகச் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.


«أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِسْبَاغِ الْوُضُوءِ»


Tirmidhi-1701

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(இனப்பெருக்கத்திற்காக) கழுதையைக் குதிரையுடன் இணையவிடுவது வெறுப்புக்குரியது என்பது பற்றி வந்துள்ளவை.

1701. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

திண்ணமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அல்லாஹ்வால்) கட்டளையிடப்படும் ஓர் அடியாராக இருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மற்ற) மக்களுக்கு சொல்லாமல் எங்களுக்காக மட்டும் எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால் மூன்று விஷயங்களைத் தவிர. (அதை எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார்கள்.) 

அவைகள்:

1 . நாங்கள் உளூ எனும் அங்கத்தூய்மையை முழுமையாகச் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
2 . தர்மப் பொருளை உண்ணக்கூடாது என்று உத்தரவிட்டார்கள்.
3 . (இனப்பெருக்கத்திற்காக) கழுதையைக் குதிரையுடன் இணையவிடக் கூடாது என்று தடுத்தார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி, அலீ (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.

மேற்கண்ட செய்தி ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள், அபூஜஹ்ளம் —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் —> இப்னு அப்பாஸ்

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدًا مَأْمُورًا، مَا اخْتَصَّنَا دُونَ النَّاسِ بِشَيْءٍ إِلَّا بِثَلَاثٍ: «أَمَرَنَا أَنْ نُسْبِغَ الوُضُوءَ، وَأَنْ لَا نَأْكُلَ الصَّدَقَةَ، وَأَنْ لَا نُنْزِيَ حِمَارًا عَلَى فَرَسٍ»


Abu-Dawood-808

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

808.


دَخَلْتُ عَلَى ابْنِ عَبَّاسٍ، فِي شَبَابٍ مِنْ بَنِي هَاشِمٍ فَقُلْنَا لِشَابٍّ مِنَّا: سَلِ ابْنَ عَبَّاسٍ أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ؟ فَقَالَ: لَا، لَا، فَقِيلَ لَهُ: فَلَعَلَّهُ كَانَ يَقْرَأُ فِي نَفْسِهِ، فَقَالَ: خَمْشًا هَذِهِ شَرٌّ مِنَ الْأُولَى، كَانَ عَبْدًا مَأْمُورًا بَلَّغَ مَا أُرْسِلَ بِهِ وَمَا اخْتَصَّنَا دُونَ النَّاسِ بِشَيْءٍ إِلَّا بِثَلَاثِ خِصَالٍ «أَمَرَنَا أَنْ نُسْبِغَ الْوُضُوءَ، وَأَنْ لَا نَأْكُلَ الصَّدَقَةَ، وَأَنْ لَا نُنْزِيَ الْحِمَارَ عَلَى الْفَرَسِ»


Ibn-Khuzaymah-176

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

176. ஒரு வியாபாரத்தை இரண்டு வியாபாரமாக (அதாவது உடனடி விற்பனைக்கு ஒரு விலையும், தவணைமுறை விற்பனைக்கு வேறு ஒரு கூடுதலான விலையும் வைத்து வியாபாரம்) செய்வது வட்டியாகும் என்று (எனது தந்தை) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

மேலும் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உளூ எனும் அங்கத்தூய்மையை நாங்கள் முழுமையாகச் செய்யவேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் (ரஹ்)


الصَّفْقَةُ بِالصَّفْقَتَيْنِ رَبًّا، وَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِسْبَاغِ الْوُضُوءِ


ஹதீஸில் ஏற்படும் இடைச்செருகள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஹதீஸில் ஏற்படும் இடைச்செருகள் பற்றிய விளக்கம்: ஹதீஸ்வகைகளில் “முத்ரஜ்” என்ற ஒரு வகை உள்ளது. அதாவது, அறிவிப்பாளரின் சொந்தக் கருத்து நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று இடம் பெற்று விடும். இதற்கு இடைச் செருகல் (முத்ரஜ்) என்று கூறுவர். (இதைப் பற்றி பார்க்க: முத்ரஜ்) இந்தக் கட்டுரையில் நாம் தெரிந்துக் கொள்ளவேண்டிய வகை, அறிவிப்பாளர்களின் தவறின் காரணமாக அல்லது பொய்யின் காரணமாக, அல்லது...

Ibn-Khuzaymah-2179

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நான் முன்பு கூறிய கருத்தை தெளிவாக விளக்கும் மற்றொரு செய்தி.

இதில் நபி (ஸல்) அவர்கள், (ஏறுவரிசைப்படி) ரமளான் மாதத்தின் கடந்துவிட்ட நாட்களிலிருந்து 23 வது நாளில் லைலத்துல் கத்ரை தேடுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். இது (இறங்குவரிசைப்படி) மீதமுள்ள நாட்களிலிருந்து 7 வது இரவாகும்.

(எனவே ஒற்றைப்படை என்பதை கடந்துவிட்ட நாட்களிலிருந்து கணக்கிட வேண்டும். மீதமுள்ள நாட்களிலிருந்து கணக்கிடக்கூடாது)

2179. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் லைலதுல் கத்ர் இரவைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நினைவூட்டினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்த மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்துவிட்டன? என்று கேட்டார்கள்.

அதற்கு நாங்கள், 22 நாட்கள் முடிந்துவிட்டன; மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என்று கூறினோம். இல்லை, மாறாக 7 நாட்களே மீதம் உள்ளன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இல்லை, மாறாக 8 நாட்கள் மீதம் உள்ளன என நபித்தோழர்கள் கூறினார்கள். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன என நபி (ஸல்) கூறினார்கள்.

இல்லை மாறாக 8 நாட்கள் மீதம் உள்ளன என நபித்தோழர்கள் கூறினார்கள். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன; இந்த மாதம் 29 நாட்களைக் கொண்டது என நபி (ஸல்) கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், தன் கையில் 29 நாட்கள் வரை எண்ணினார்கள்.

 ذَكَرْنَا لَيْلَةَ الْقَدْرِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَمْ مَضَى مِنَ الشَّهْرِ؟» قُلْنَا: مَضَى اثْنَانِ وَعِشْرُونَ، وَبَقِيَ ثَمَانٍ قَالَ: «لَا، بَلْ بَقِيَ سَبْعٌ» قَالُوا: لَا، بَلْ بَقِيَ ثَمَانٍ قَالَ: «لَا، بَلْ بَقِيَ سَبْعٌ» قَالُوا: لَا، بَلْ بَقِيَ ثَمَانٍ قَالَ: «لَا، بَلْ بَقِيَ سَبْعٌ، الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ» . ثُمَّ قَالَ بِيَدِهِ، حَتَّى عَدَّ تِسْعَةً وَعِشْرِينَ “، ثُمَّ قَالَ: «الْتَمِسُوهَا اللَّيْلَةَ»


Musnad-Ahmad-7423

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7423. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு ரமளான் மாதத்தின் இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்த மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்துவிட்டன? என்று கேட்டார்கள்.

அதற்கு நாங்கள், 22 நாட்கள் முடிந்துவிட்டன; மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என்று கூறினோம்.

அதற்கவர்கள், “இல்லை. மாறாக 22 நாட்கள் முடிந்துவிட்டன; 7 நாட்களே மீதம் உள்ளன. இன்றைய இரவில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்” எனக் கூறினார்கள்.

அஹ்மத் இமாம் கூறுகிறார்:

யஃலா அவர்களின் அறிவிப்பில், (7 நாட்களே மீதம் உள்ளன என்ற வாக்கியத்துடன்) “இந்த மாதம் 29 நாட்களைக் கொண்டது” என்று நபி (ஸல்) கூறியதாக கூடுதலாக இடம்பெற்றுள்ளது.


«كَمْ مَضَى مِنَ الشَّهْرِ؟» قَالَ: قُلْنَا: مَضَتْ ثِنْتَانِ وَعِشْرُونَ، وَبَقِيَ ثَمَانٍ. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا، بَلْ مَضَتْ مِنْهُ ثِنْتَانِ وَعِشْرُونَ، وَبَقِيَ سَبْعٌ، اطْلُبُوهَا اللَّيْلَةَ» قَالَ يَعْلَى، فِي حَدِيثِهِ: «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ»


Almujam-Alawsat-7572

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

7572. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், இரு பெருநாட்களிலும் இந்த (கீழ்க்கண்ட) பிரார்த்தனையை செய்வார்கள்.

“அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக ஈஷதன் தகிய்யஹ். வ மீததன் ஸவிய்யஹ். வ மரத்தன் ஃகைர முக்ஸிவ் வலா ஃபாளிஹ்.

அல்லாஹும்ம லா தஹ்லிக்னா ஃபஜ்அதவ், வலா தஃகுத்னா பஃக்தஹ். வலா துஃஜில்னா அன் ஹக்கிவ் வலா வஸிய்யஹ்.

அல்லாஹும்ம இன்னா நஸ்அலுகல் அஃபாஃப, வல்ஃகினா, வத்துகா, வல்ஹுதா, வ ஹஸன ஆகிபதில் ஆகிரதி, வத்துன்யா. வ நஊது பிக மினஷ் ஷக்கி வஷ்ஷிகாகி, வர்ரியாஇ, வஸ்ஸும்அதி ஃபீ தீனிக்.

யா முகல்லிபல் குலூபி, லா துஸிஃக் குலூபனா பஃத இத் ஹதைதனா வஹப் லனா மில்லதுன்க ரஹ்மஹ். இன்னக அன்தல் வஹ்ஹாப்”.

(பொருள்: ..)

 


كَانَ دُعَاءُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعِيدَيْنِ «اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ عِيشَةً تَقِيَّةً، وَمِيتَةً سَوِيَّةً، وَمَرَدًّا غَيْرَ مُخْزٍ وَلَا فاضِحٍ، اللَّهُمَّ لَا تُهْلِكْنَا فَجْأَةً، وَلَا تَأْخُذْنَا بَغْتَةً، وَلَا تُعْجِلْنَا عَنْ حَقٍّ وَلَا وَصِيَّةٍ، اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ الْعَفَافَ وَالْغِنَى، وَالتُّقَى وَالْهُدَى، وَحَسَنَ عَاقِبَةِ الْآخِرَةِ وَالدُّنْيَا، وَنَعُوذُ بِكَ مِنَ الشَّكِّ وَالشِّقَاقِ، وَالرِّيَاءِ وَالسُّمْعَةِ فِي دِينِكَ، يَا مُقَلِّبَ الْقُلُوبِ لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً، إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ»


Next Page » « Previous Page