தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1907

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“கபா” எனும்) மேலங்கிகளை(த் தம் தோழர்களுக்கு)ப் பங்கிட்டார்கள். (ஆனால், என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. ஆகவே, மக்ரமா (ரலி) அவர்கள் (என்னிடம்), “அன்பு மகனே! (என்னோடு வா!) நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்வோம்” என்று சொல்ல, அவர்களுடன் நான் சென்றேன். (அங்கு சென்று சேர்ந்ததும்) “நீ உள்ளே போய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை என்னிடம் அழைத்து வா” என்று சொன்னார்கள். நான் அவ்வாறே மக்ரமா (ரலி) அவர்களிடம் வரும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்ரமா (ரலி) அவர்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அப்போது அவர்களிடம் அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களுக்காக இதை நான் பத்திரப்படுத்தி வைத்தேன்” என்று சொன்னார்கள். மக்ரமா (ரலி) அவர்கள் அந்த அங்கியைக் கூர்ந்து பார்த்துவிட்டு, “மக்ரமா திருப்தி அடைந்து விட்டான்” என்று சொன்னார்கள்.

Book : 12

(முஸ்லிம்: 1907)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، أَنَّهُ قَالَ

قَسَمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبِيَةً وَلَمْ يُعْطِ مَخْرَمَةَ شَيْئًا، فَقَالَ مَخْرَمَةُ: يَا بُنَيَّ، انْطَلِقْ بِنَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَانْطَلَقْتُ مَعَهُ، قَالَ: ادْخُلْ فَادْعُهُ لِي، قَالَ: فَدَعَوْتُهُ لَهُ، فَخَرَجَ إِلَيْهِ وَعَلَيْهِ قَبَاءٌ مِنْهَا، فَقَالَ: «خَبَأْتُ هَذَا لَكَ» قَالَ: فَنَظَرَ إِلَيْهِ فَقَالَ: «رَضِيَ مَخْرَمَةُ»


Tamil-1907
Shamila-1058
JawamiulKalim-1757




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.