தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5665

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 16

நோயாளி ‘‘நான் நோய்வாய்ப்பட் டுள்ளேன்” என்றோ ‘‘என் தலை (வலி)யே” என்றோ ‘‘எனக்கு நோய் அதிகரித்துவிட்டது” என்றோ கூறலாம்.

(இறைத்தூதர்) அய்யூப் (அலை) அவர்கள் கூறினார்கள்: எனக்கு (நோயால்) துன்பம் நேர்ந் திருக்கிறது. (இறைவா! அதை அகற்றிடு வாயாக!) நீ கருணையாளர்களிலெல்லாம் பெரும் கருணையாளன் ஆவாய் (21:83).

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருந்த சமயம் ஹுதைபியாவில்) நான் (சமையல்) பாத்திரத்தின் கீழிருந்து தீ மூட்டிக்கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்துசென்றார்கள். அப்போது, ‘‘(கஅபே!) உங்கள் தலையிலுள்ள பேன்கள் உங்களுக்குத் தொந்தரவு தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் நாவிதரை அழைத்தார்கள். நாவிதர் எனது தலைமுடியை மழித்தார்.

பிறகு என்னை (இஹ்ராமுடைய நிலையில் தலை மழித்துக்கொண்டதற் காக)ப் பரிகாரம் செய்யும்படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.23

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 75

(புகாரி: 5665)

بَابُ قَوْلِ المَرِيضِ: ” إِنِّي وَجِعٌ، أَوْ وَا رَأْسَاهْ، أَوِ اشْتَدَّ بِي الوَجَعُ
وَقَوْلِ أَيُّوبَ عَلَيْهِ السَّلاَمُ: {أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ} [الأنبياء: 83]

حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، وَأَيُّوبَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ:

مَرَّ بِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أُوقِدُ تَحْتَ القِدْرِ، فَقَالَ: «أَيُؤْذِيكَ هَوَامُّ رَأْسِكَ؟» قُلْتُ: نَعَمْ، فَدَعَا الحَلَّاقَ فَحَلَقَهُ، ثُمَّ أَمَرَنِي بِالفِدَاءِ


Bukhari-Tamil-5665.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-5665.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




4 comments on Bukhari-5665

  1. இறந்தவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வது கண்டிப்பாக மார்க்கம் வழியுறுத்திய சுன்னத்தாகும்அதுவும் ஹதீஸில் வரக்கூடிய வார்தை தைகளைக்கொண்டே ஆறுதல் சொல்வது சிறப்பாகும்.(இன்ன லில்லாஹி மா அகத வலஹ_ மா அஃதா வகுல்லு ஷையின் இன்தஹ_ பிஅஜலின்முஸம்மா ஃபஸ்பிர் வஹ்த்தஸிப்) பொருள்:- நிச்சயமாக இறைவன் எதனை எடுத்துக் கொண்டானோஅது அவனு அவனுக் க் குரியதே யதே இன்னும் எதனை கொடுத்துள்ளானோ அதுவும் அவனு அவனுக்குரியதே அவனிடத் தில் எல்லாவற்றுக்கும் ஒரு தவணையுண்டு (அந்த தவணை முடியும்போது அவன் அதைஎடுத்துக் கொள்வான் அதுதான் நியதி எனவே) நன்மையை நாடி பொறுத்து கொள்ளுங்கள் என்றுஆறுதல் சொல்வதுதான் நபிவழி (புஹாரி, முஸ்லிம்) இன்னும் ( பிவழி அஃழமல்லாஹ_ அஜ்ரக ரக்) இந்த;) சோதனைக்காக அல்லாஹ் உங்களின் மறுவுலக கூலியை மகத்தானதாக்கட்டும் என்றும் இன்னும் (அஹ்ஸ னல்லாஹ_ அஜ்ரக்)உங்களின் கூலியை அல்லாஹ் அழகானதாக மாற்றிவிடட்டும்என்றும் ஆறுதல் சொல்லலாம்.

    இது ஸயியானதா மற்றும் தகவல் வேண்டும்

  2. அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஹதீஸ் கலை தேடி கண்டுபிடிப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது அதை வரிசையாக சீர் படுத்த முடியுமா. அல்லது ஒரு ஹதீத் எப்படி எளிமையாக கண்டுபிடிப்பது என்று உங்களுடைய இணையதளத்தில் பதிவிடுங்கள் .

    1. வ அலைக்கும் ஸலாம். நீங்கள் கேட்பது ஹதீஸ்கலை பற்றியதா அல்லது ஹதீஸ்களை தேடி எடுப்பது பற்றியதா என்று தெளிவாக புரியவில்லை. ஹதீஸ்களை என்பதற்கு தான் ஹதீஸ் கலை என்று கூறியுள்ளீர்கள் என தெரிகிறது.
      தற்போது, ஹதீஸ்நூல்களின் நம்பர் மூலம் ஹதீஸ்களை பெறலாம். ஷாமிலாவின் அரப் வார்த்தைகள் மூலம் தேடி எடுக்கலாம். தமிழ் வார்த்தைகள் மூலம் தேடினாலும் கிடைக்க வாய்ப்புள்ளது. என்றாலும் வார்த்தைகளை சரியாக டைப் செய்தால் தான் பெறமுடியும். அல்லது இந்த இணையதளத்தில் கேள்விகேட்டு பெறலாம். இன்ஷா அல்லாஹ் தலைப்பு வாரியாக தொகுக்கும் பணி பிறகு ஆரம்பிக்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.