தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-151

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நாங்கள் நபியவர்களுடன் பயணத்தில் இருந்தோம். நான் ஒரு தோல் பையில் தண்ணீர் வைத்திருந்தேன். நபியவர்கள் இயற்கை கடனை நிறைவேற்ற சென்று திரும்பி வந்தார்கள். அவர்களிடம் சென்று தோல் பையில் இருக்கும் நீரை ஊற்றினேன். நபியவர்கள் தமது கைகளையும் முகத்தையும் கழுவினார்கள். (அப்போது) ரோம் நாட்டு கம்பளி ஆடையை அணிந்து இருந்தார்கள்.

(உளூ செய்ய) தமது முன்கையை வெளியே எடுக்க முயற்சித்தார்கள். ஆடையின் கைப்பகுதி குறுகலாக இருந்ததால் இயலவில்லை. எனவே ஆடையின் கீழ்ப்பகுதி வழியாக கையை நீட்டினார்கள். அவர்களின் காலுறையை கழற்றுவதற்காக மடித்தேன். ஆனால், நபியவர்கள் அதை விட்டு விடு; கால் பாதங்கள் தூய்மையாக இருக்கும் நிலையில் தான் அவற்றை அணிந்தேன் எனக் கூறிவிட்டு, அதன் மேற்பகுதியில் மஸஹ் செய்தார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் முகீரா (ரலி).

ஷஃபியி கூறியதாவது, இதை உர்வா தமது தந்தை வழியாகவும் அவரின் தந்தை நபி வழியாகவும் அறிவிக்கிறார்கள்.

(அபூதாவூத்: 151)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنِي أَبِي، عَنِ الشَّعْبِيِّ، قَالَ: سَمِعْتُ عُرْوَةَ بْنَ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، يَذْكُرُ عَنْ أَبِيهِ، قَالَ

كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَكْبِهِ وَمَعِي إِدَاوَةٌ فَخَرَجَ لِحَاجَتِهِ، ثُمَّ أَقْبَلَ فَتَلَقَّيْتُهُ بِالْإِدَاوَةِ فَأَفْرَغْتُ عَلَيْهِ فَغَسَلَ كَفَّيْهِ وَوَجْهَهُ، ثُمَّ أَرَادَ أَنْ يُخْرِجَ ذِرَاعَيْهِ، وَعَلَيْهِ جُبَّةٌ مِنْ صُوفٍ مِنْ جِبَابِ الرُّومِ، ضَيِّقَةُ الْكُمَّيْنِ، فَضَاقَتْ فَادَّرَعَهُمَا ادِّرَاعًا، ثُمَّ أَهْوَيْتُ إِلَى الْخُفَّيْنِ لِأَنْزَعَهُمَا، فَقَالَ لِي: «دَعِ الْخُفَّيْنِ، فَإِنِّي أَدْخَلْتُ الْقَدَمَيْنِ الْخُفَّيْنِ وَهُمَا طَاهِرَتَانِ فَمَسَحَ عَلَيْهِمَا»، قَالَ أَبِي: قَالَ الشَّعْبِيُّ: شَهِدَ لِي عُرْوَةُ، عَلَى أَبِيهِ، وَشَهِدَ أَبُوهُ، عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


AbuDawood-Tamil-151.
AbuDawood-Shamila-151.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.