தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-236

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 95

இரவில் தூங்கி எழுந்து ஆடையில் ஈரத்தை காணுதல்.

ஆனால் ஆடையில் ஈரத்தைக் காண்கிறார். (ஒரு மனிதர் ஒரு மாதிரியான கனவு கண்டு விந்து வெளிப்பட்டதாக அவருக்கு நினைவு இல்லை.) (அவர் குளிக்க வேண்டுமா?) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது, அவர் குளிக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ஒருவர் (ஒரு மாதிரியான) கனவு கண்டதாக நினைவு கொள்கிறார். ஆனால் அவர் ஈரத்தை காணவில்லை என்றால் (அவர் குளிக்க வேண்டுமா?) என்று வினவப்பட்டபோது அவர், குளிக்க வேண்டியதில்லை என்று பதிலளித்தார்கள். அப்போது உம்மு ஸுலைம் (ரலி) அன்ஹா அவர்கள் ஒரு பெண் இதை (ஈரத்தை) காண்கிறாள் என்றால் அவள் மீது குளிப்பு கடமையாகுமா? என்று கேட்போது ஆம் பெண்கள் ஆண்களை (இது விஷயத்தில்) ஒத்தவர்கள் தான் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி).

(அபூதாவூத்: 236)

95- بَابٌ فِي الرَّجُلِ يَجِدُ الْبِلَّةَ فِي مَنَامِهِ

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ الْخَيَّاطُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ الْعُمَرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ قَالَتْ

سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ يَجِدُ الْبَلَلَ وَلَا يَذْكُرُ احْتِلَامًا. قَالَ: «يَغْتَسِلُ»، وَعَنِ الرَّجُلِ يَرَى أَنَّهُ قَدْ احْتَلَمَ وَلَا يَجِدُ الْبَلَلَ. قَالَ: «لَا غُسْلَ عَلَيْهِ» فَقَالَتْ: أُمُّ سُلَيْمٍ الْمَرْأَةُ تَرَى ذَلِكَ أَعَلَيْهَا غُسْلٌ؟ قَالَ: «نَعَمْ. إِنَّمَا النِّسَاءُ شَقَائِقُ الرِّجَالِ»


AbuDawood-Tamil-236.
AbuDawood-Shamila-236.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.