தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-332

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 125

குளிப்புக் கடமையானவர் தயம்மும் செய்தல்.

அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் சில ஆடுகள் திரண்டிருந்தன. அப்போது அவர்கள் (என்னை நோக்க) அபூதரே! இவற்றை நீ காட்டிற்கு ஓட்டிச் செல் என்று சொன்னார்கள். நான் ரபதா என்ற இடத்திற்கு (ஓட்டிச்) சென்றேன். (அங்கு) என்னை ஜனாபத் தீண்டி நான் (குளிக்க முடியாமல்) ஐந்து அல்லது ஆறு (நாட்கள்) தங்கியிருந்தேன். பின்பு நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவர்கள் என்னை, ‘அபூதரே!’ என்று அழைத்தார்கள். நான் (பதில் கூறாது) மௌனம் சாதித்தேன். அப்போது அவர்கள், அபூதரே! உடனது தாய் இழக்க கடவது! உமக்கு அழிவுண்டாகட்டும்! என்று கூறி எனக்காக ஒரு கருத்த அடிமைப் பெண்ணை அழைத்தார்கள். அப்பெண்மணி தண்ணீர் பாத்திரத்தை கொண்டு வந்தாள். (ஒரு புறத்தில்) அவள் ஒரு ஆடையைக் கொண்டு என்னை மறைத்தாள். நானும் (இன்னொரு புறத்தில்) ஒரு ஒட்டகையை மறைவாக்கிக் கொண்டு குளிப்பை நிறைவேற்றினேன். அப்போது தான் நான் என் மேலிருந்த மலையை இறக்கியவன் போலானேன். அப்போது அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் ‘(தண்ணீர் இல்லாது) பத்தாண்டுகள் ஆயினும் (பரிசுத்தமான) மண் ஒரு முஸ்லிமின் உளூ(விற்கு அல்லது குளிப்பிற்கு பரிகாரமாகும்)வாகும்’! எனவே எப்போது தண்ணீரை பெற்றுக் கொள்கிறாயோ அப்போது உனது உடலை தண்ணீரில் கழுவச் செய்க! இதுவே சிறந்ததாகும்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூதர் (ரலி).

(அபூதாவூத்: 332)

125- بَابُ الْجُنُبِ يَتَيَمَّمُ

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا خَالِدٌ الْوَاسِطِيُّ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ [ص:91]، عَنْ أَبِي قِلَابَةَ، ح حَدَّثَنَا مُسَدَّدٌ، أَخْبَرَنَا خَالِدٌ يَعْنِي ابْنَ عَبْدِ اللَّهِ الْوَاسِطِيَّ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ عَمْرِو بْنِ بُجْدَانَ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ

اجْتَمَعَتْ غُنَيْمَةٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا أَبَا ذَرٍّ ابْدُ فِيهَا». فَبَدَوْتُ إِلَى الرَّبَذَةِ فَكَانَتْ تُصِيبُنِي الْجَنَابَةُ فَأَمْكُثُ الْخَمْسَ وَالسِّتَّ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أبُو ذَرٍّ». فَسَكَتُّ فَقَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ أَبَا ذَرٍّ لِأُمِّكَ الْوَيْلُ». فَدَعَا لِي بِجَارِيَةٍ سَوْدَاءَ فَجَاءَتْ بِعُسٍّ فِيهِ مَاءٌ فَسَتَرَتْنِي بِثَوْبٍ وَاسْتَتَرْتُ بِالرَّاحِلَةِ، وَاغْتَسَلْتُ فَكَأَنِّي أَلْقَيْتُ عَنِّي جَبَلًا فَقَالَ «الصَّعِيدُ الطَّيِّبُ وَضُوءُ الْمُسْلِمِ وَلَوْ إِلَى عَشْرِ سِنِينَ، فَإِذَا وَجَدْتَ الْمَاءَ فَأَمِسَّهُ جِلْدَكَ فَإِنَّ ذَلِكَ خَيْرٌ»

وَقَالَ: مُسَدَّدٌ: «غُنَيْمَةٌ مِنَ الصَّدَقَةِ» قَالَ أَبُو دَاوُدَ: «وَحَدِيثُ عَمْرٍو أَتَمُّ»


AbuDawood-Tamil-332.
AbuDawood-Shamila-332.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.