தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

புகாரீ, முஸ்லிம் இமாம்களின் நிபந்தனைகள்

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

1 . புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்களின் நிபந்தனைகள்:

புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் அவர்களின் நிபந்தனைகள்:

1 . ஒரு ஹதீஸை சரியானது, பலமானது என்பதற்கு கூறப்படும் பொதுவான நிபந்தனைகள்: 5, அவைகள்:

  • اتصال السند – அறிவிப்பாளர்தொடர் இடைமுறிவு ஏற்படாமல் இருக்க வேண்டும்.
  • عدالة الرواة – அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
  • ضبط الرواة – அறிவிப்பாளர்கள் நினைவாற்றலில் உறுதியானவர்களாக இருக்க வேண்டும். (நூலில் ஹதீஸை எழுதிவைத்தவர் என்றால் அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்)
  • عدم الشذوذ – குறிப்பிட்ட செய்தி மற்ற மிக பலமானவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக இருக்கக் கூடாது.
  • عدم العلة – வேறு நுணுக்கமான குறைபாடு இருக்கக் கூடாது.

2 . ஒரு ஆசிரியரின் 5 வகையான மாணவர்களில் முதல் தரத்தில் உள்ளவர்களின் செய்திகளை அசல் செய்திகளாகவும், இரண்டாம் தரத்தில் உள்ளவர்களின் செய்திகளை துணைச் சான்றாகவும் கூறுவதை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் தனது நூலில் கடைப்பிடித்துள்ளார். இது புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் மட்டும் கடைபிடித்த ஒரு நிபந்தனையாகும். (5 வகை மாணவர்களைப் பற்றிய விளக்கத்தைக் காணவும்)


3 . தத்லீஸ் செய்யாத அறிவிப்பாளர் என்றாலும், அவர் தனது ஆசிரியரை சந்தித்துள்ளார் அல்லது அவரிடம் செவியேற்றுள்ளார் என்பதற்கு சான்று இருக்க வேண்டும். ஆசிரியரும், மாணவரும் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும்; அல்லது இருவரும் சந்திக்க வாய்ப்புள்ளது என்பதும் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாமிடம் போதுமாகாது. இந்தச் சான்று இல்லாதவர்களின் அன்அனா செய்திகளை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் ஏற்கமாட்டார். (இவ்வாறே புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் ஆசிரியரான இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்களும் நிபந்தனை வைத்திருந்தார். அபூபக்ர் அஷ்ஷாஃபிஈ அவர்களின் நிபந்தனையும் இதுவே).


முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் அவர்களின் நிபந்தனைகள்:

1 . ஒரு ஹதீஸை சரியானது, பலமானது என்பதற்கு கூறப்படும் பொதுவான 5 நிபந்தனைகள். (புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாமைப் போன்றே)


2 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம், முதல் இரண்டு வகையினர்களின் செய்திகளை பரவலாகவும், 3 வது வகையினர்களின் செய்திகளை சில சமயமும் குறிப்பிடுவார்.


3 . மாணவரும், ஆசிரியரும் சமகாலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து, இருவரும் சந்திக்க வாய்ப்புகள் இருந்து, மாணவர் தத்லீஸ் செய்யாதவர் என்றால் அவரின் அன்அனா செய்திகளை ஆதாரமாக ஏற்கலாம்.


ஒரு ஆசிரியரின் மாணவர்களை வகைப்படுத்துதல்:

அறிவிப்பாளர்கள் நம்பகத்தன்மையிலும், நினைவாற்றலிலும், தனது ஆசிரியருடன் உள்ள தொடர்புகள் விசயத்திலும் பல வகையினர்களாக உள்ளனர்.

உதாரணம்:

ஸுஹ்ரீ இமாம் அவர்களின் 5 வகையான மாணவர்கள்:

1 . நம்பகத்தன்மையும், சிறந்த நினைவாற்றலும் உள்ளவர்கள் என்பதுடன்; ஸுஹ்ரீ அவர்களிடம் அதிக காலத்தை செலவிட்டு அவர்களிடமிருந்து ஹதீஸைக் கேட்டவர்கள்.

இந்த வகையினரை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் முதலிடத்தில் வைத்துள்ளார்.

(உ.ம்) யூனுஸ் பின் யஸீத், உகைல் பின் காலித், மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம், இப்னு உயைனா, ஷுஐப் பின் அபூஹம்ஸா, …

2 . நம்பகத்தன்மையும், நினைவாற்றலும் உள்ளவர்கள் என்பதுடன்; ஸுஹ்ரீ அவர்களிடம் குறைந்த காலத்தை செலவிட்டு அவர்களிடமிருந்து ஹதீஸைக் கேட்டவர்கள். இவர்கள் முதல் வகையினரைவிட நினைவாற்றலில் சிறிது குறைந்தவர்கள். ஸுஹ்ரீ அவர்களின் ஹதீஸ்களை முதல் வகையினர் அளவுக்கு அறிந்திருக்க மாட்டார்கள்.

இந்த வகையினரை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாமும் முக்கிய ஆதாரமாக எடுத்துள்ளார்.

(உ.ம்) அவ்ஸாஈ இமாம், லைஸ் பின் ஸஃத், அப்துர்ரஹ்மான் பின் காலித், இப்னு அபூதிஃப், …

3 . ஸுஹ்ரீ அவர்களிடம் அதிக காலத்தை செலவிட்டு அவர்களிடமிருந்து ஹதீஸைக் கேட்டவர்கள் தான், என்றாலும் இவர்களின் சில தவறுகளால் விமர்சிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களின் செய்திகளை ஏற்கலாம் என்றும், ஏற்கக்கூடாது என்றும் இரு கருத்துகள் இருக்கும்.

இந்த வகையினர்களில் சிலரை அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோரும் ஆதாரமாக எடுத்துள்ளனர்.

(உ.ம்) ஜஃபர் பின் புர்கான், ஸுஃப்யான் பின் ஹுஸைன், இஸ்ஹாக் பின் யஹ்யா அல்கல்பீ, …

4 . ஸுஹ்ரீ அவர்களிடம் குறைந்த காலத்தை செலவிட்டு அவர்களிடமிருந்து ஹதீஸைக் கேட்டவர்கள் என்பதுடன், இவர்களின் சில தவறுகளால் விமர்சிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களின் செய்திகளை ஏற்கலாம் என்றும், ஏற்கக்கூடாது என்றும் இரு கருத்துகள் இருக்கும்.

இந்த வகையினர்களில் சிலரின் செய்திகளை திர்மிதீ இமாம் துணைச் சான்றாக குறிப்பிட்டுள்ளார்.

(உ.ம்) ஸம்ஆ பின் ஸாலிஹ், முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ, முஸன்னா பின் ஸப்பாஹ்,

5 . அனைவராலும் பலவீனமானவர்கள் என்றோ அல்லது அறியப்படாதவர்கள் என்றோ விமர்சிக்கப்பட்டவர்கள்.

(உ.ம்) அப்துல்குத்தூஸ் பின் ஹபீப், ஹகம் பின் அப்துல்லாஹ் அல்அய்லீ, முஹம்மத் பின் ஸயீத் அல்மஸ்லூப்,


மேற்கண்ட 5 வகையினர்களில் முதல் வகையினர்களின் செய்திகளையே பரவலாக புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் குறிப்பிடுவார். சில சமயம் 2 வது வகையினர்களின் செய்திகளையும் (அவைகளில் சரியானதை ஆய்வு செய்து) ஆதாரமாக குறிப்பிடுவார். இவர்களின் செய்திகளையும், 3 வது வகையினர்களின் செய்திகளையும் பெரும்பாலும் தஃலீக்காக குறிப்பிடுவார்.

முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம், முதல் இரண்டு வகையினர்களின் செய்திகளை பரவலாகவும், 3 வது வகையினர்களின் செய்திகளை சில சமயமும் குறிப்பிடுவார்.

மேலும் புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியோர் 4 வது, 5 வது வகையினர்களின் செய்திகளை தனித்த ஆதாரமாக கூறவில்லை.

(இவ்வாறே ஒவ்வொரு அறிவிப்பாளரின் அல்லது அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கும் அறிஞரின் மாணவர்களை வகைப்படுத்தி அவர்களின் செய்திகளை ஆய்வு செய்வது மிக முக்கியமானதாகும்.)


2 . புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அறிஞர்களின் அறிவிப்பாளர்களை பற்றி ஆய்வு செய்யும் போது கிடைத்த கீழ்க்கண்ட தகவல்:

1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் கூறாத; புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் மட்டும் ஆதாரமாக கூறிய அறிவிப்பாளர்கள் 430 நபர்களுக்கு மேல் உள்ளனர். இவர்களில் 80 நபர்கள் பற்றி சில விமர்சனம் உள்ளது.

2 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறாத; முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் மட்டும் ஆதாரமாக கூறிய அறிவிப்பாளர்கள் 620 நபர்கள் ஆவார்கள். இவர்களில் 160 நபர்கள் பற்றி சில விமர்சனம் உள்ளது.

3 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் விமர்சிக்கப்பட்ட அறிவிப்பாளர்களில் அதிகமானோர் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் ஆசிரியர்கள் ஆவார்கள். இவர்களின் நிலைகளை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் நன்கு அறிந்தவர் ஆவார்.

4 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்களின் விமர்சிக்கப்பட்ட அறிவிப்பாளர்களில் அதிகமானோர் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாமின் காலத்துக்கு முன்னுள்ள அறிவிப்பாளர்கள் ஆவார்கள். எனவே புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் தனது ஆசிரியர்களை அறிந்த அளவுக்கு முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் தனது ஆசிரியர்களின் ஆசிரியர்களையோ அல்லது அதற்கு முன்னுள்ளவர்களையோ அந்தளவுக்கு நேரடியாக கண்டு அவர்களின் நிலையை அறிந்திருப்பது மிகவும் குறைவாகும்.


3 . இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
(ரஹ்), இமாம் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
(ரஹ்) ஆகியோர் ஹதீஸ்நூலை தொகுக்கும் போது கடைபிடித்த வேறு சில அம்சங்கள்:

புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
நூல்களை ஆய்வு செய்த அறிஞர்கள் “ஒரு ஹதீஸை சரியானது என்று கூறுவதற்கு கடும் நிபந்தனைகளை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் வைத்துள்ளார்” என்ற அடிப்படையில் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
நூலை விட புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
நூலுக்கு முதலிடம் தருகின்றனர்.

ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர்களை ஒரே இடத்தில் குறிப்பிட்டு, அதில் உள்ள கூடுதல் தகவல், குறைந்த தகவல் போன்ற விசயங்களை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் ஒரே இடத்தில் கூறியதாலும், அழகிய முறையில் அவர்களின் தொகுப்பு இருப்பதாலும் சிலர் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
நூலுக்கு முதலிடம் தருகின்றனர்.

புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகிய இருவரின் தொகுப்பில் உள்ள சில வேறுபாடுகள்:

இருவரின் நிபந்தனைகள், தொகுக்கும் போது கடைபிடித்த அம்சங்கள் ஆகியவற்றில் இருவருக்கும் உள்ள வேறுபாடுகளைக் குறித்து, இமாம் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
(ரஹ்) அவர்கள் கூறியுள்ள தகவல்கள்:

முதலாவது வேறுபாடு:

  • இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    (ரஹ்) அவர்கள், ஹதீஸ்களை அதன் கருத்தின் அடிப்படையிலும் அறிவிக்கலாம் (அதாவது ரிவாயத் பில் மஃனா) என்ற கருத்தை ஏற்றுள்ளார்.

மேலும், நீண்ட ஹதீஸை சுருக்கமாகவும் சில இடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

(எனவே, “இது ஹதீஸின் சுருக்கம் என்று குறிப்பிடாமல், ஒரு ஹதீஸின் சில பகுதியை மட்டும் அறிவிக்கலாம் என்ற கருத்தை ஏற்றுள்ளார்)

  • ஆனால் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம், ஹதீஸ்களை அதன் அஸல் வார்த்தையில் அறிவிக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் தந்துள்ளார்.

இதற்கான காரணங்கள் இரண்டு:

  • இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    (ரஹ்) அவர்களின் பயணமும், நினைவாற்றலும்:

இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
(ரஹ்) அவர்கள் தமது ஸஹீஹ் புகாரியை தமது நீண்ட பயணங்களின்போது தொகுத்தார். இது குறித்து அவர்கள், “நான் ஷாமில் ஒரு ஹதீஸைக் கேட்டு அதை மிஸ்ரிலும், பஸராவில் ஒரு ஹதீஸைக் கேட்டு அதை குராசானிலும் எழுதினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, சில சமயங்களில் அவர்கள் ஹதீஸ்களை தமது நினைவாற்றலில் இருந்து எழுதியதால், அதன் மூல வார்த்தைகளை முழுமையாகச் சேர்க்காமல், கருத்தில் சிறிய மாற்றங்களுடன் அதை அறிவித்தார்.

  • இமாம் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    (ரஹ்) அவர்களின் உள்ளூர் தொகுப்பும் துல்லியமும்:

இமாம் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
(ரஹ்) அவர்கள் தமது ஸஹீஹ் முஸ்லிமை தமது சொந்த ஊரில், பல ஆசிரியர்களின் அசல் நூல்கள் உடனிருக்கும்போது தொகுத்தார். இதன் காரணமாக, அவர்கள் ஹதீஸின் அஸல் வார்த்தைகள் மற்றும் அதன் தொகுப்பில் மிகுந்த துல்லியத்துடன் செயல்பட்டார்.

இரண்டாவது வேறுபாடு:

இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
(ரஹ்) அவர்கள், தமது நூலை சட்ட (ஃபிக்ஹ்) வரிசையில் தொகுத்தார்கள். எனவே ஒரு ஹதீஸ் பல சட்ட அம்சங்களைக் கொண்டிருந்தால், ஒவ்வொரு அம்சத்திற்கும் ஒரு தனி அத்தியாயத்தில் அதைப் பிரித்து, அந்தச் சட்ட அம்சத்திற்கு ஆதாரமாக உள்ள பகுதியை மட்டும் அந்த அத்தியாயத்தில் சேர்த்தார்கள். இவ்வாறு செய்யாமல், முழு ஹதீஸையும் ஒவ்வொரு இடத்திலும் சேர்த்திருந்தால், நூல் மிக நீளமாகி இருக்கும்.

இமாம் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
(ரஹ்) அவர்களின் அணுகுமுறை:

இமாம் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
(ரஹ்) அவர்கள் இந்த அணுகுமுறையைப் பின்பற்றவில்லை. மாறாக, ஒரு அத்தியாயத்தில் உள்ள அனைத்து ஹதீஸ்களையும் ஒரே இடத்தில், ஒன்றுக்கொன்று இணைத்து முழுமையாக அறிவித்தார். ஒரு ஹதீஸ் பல சட்ட அம்சங்களைக் கொண்டிருந்தாலும், அதில் மிகவும் பொருத்தமான மற்றும் அதிகம் தொடர்புடைய ஒரு இடத்தில் அதை முழுமையாக, துல்லியமான வார்த்தைகளுடன் குறிப்பிட்டார்.

(நூல்கள்: அன்னுகத்-1/282-283, அஷ்ஷர்து இன்தஷ் ஷைகைன்)


4 . புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அறிஞர்கள் மீது கூறப்படும் விமர்சனம்:

சில விமர்சிக்கப்பட்ட அறிவிப்பாளர்களின் செய்திகளையும், அறிவிப்பாளர்தொடர்களையும் புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர் என்பதாகும்.

அவர்களின் நோக்கம் சரியான ஹதீஸை பதிவு செய்யவேண்டும் என்பதே ஆகும். சில நேரம் பலமானவரின் செய்தி கூட ஷாத் என்பதாலோ அல்லது வேறு சில காரணத்தாலோ பலவீனமாகிவிடும். சில நேரம் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சிக்கப்பட்ட பலவீனமானவர் கூட சில குறிப்பிட்ட செய்தியை சரியாக மனனம் செய்திருப்பார்.

எனவே விமர்சிக்கப்பட்ட சிலரின் செய்திகளை அவர்கள் பதிவு செய்ததற்கு 5 காரணங்களில் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அவைகள்:

1 . சிலரால் விமர்சிக்கப்பட்ட அறிவிப்பாளர்தான் என்றாலும், இவர்களின் ஆய்வில் அந்த விமர்சனம் ஏற்புடையதாக இருக்காது.

உதாரணம்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமை-இக்ரிமா.


2 . இன்ன அறிவிப்பாளர் தனித்து அறிவித்தால் மட்டுமே ஏற்கப்படாதவர்; அவரைப் போன்று மற்றவர்கள் அறிவித்திருந்தால் ஏற்கலாம் என்ற தரத்தில் இருப்பார்.

உதாரணம்: ஃபுளைல் பின் ஸுலைமான், முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அத்துஃபாவீ, அஃப்லஹ் பின் ஹுமைத்.


3 . இன்ன அறிவிப்பாளர், இன்ன ஆசிரியரிடமிருந்து அறிவித்தால் மட்டுமே பலவீனமானவர்; வேறு ஆசிரியரிடமிருந்து அறிவித்தால் ஏற்கலாம் என்ற தரத்தில் இருப்பார்.

உதாரணம்: மஃமர் —> ஸாபித் (விமர்சனம் உள்ள அறிவிப்பாளர்தொடர்)


4 . மூளைக் குழம்பியவர் என்று விமர்சிக்கப்பட்டவர். ஆனால் இவரிடமிருந்து இன்ன மாணவர் இவர் மூளைக் குழம்புவதற்கு முன் கேட்டார் என்ற விவரம் இருக்கும். எனவே அந்த வகைச் செய்திகளை பதிவு செய்திருப்பார்கள்.

உதாரணம்: ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமீ.


5 . இன்ன அறிவிப்பாளர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்பதால் விமர்சிக்கப்பட்டிருப்பார். இது போன்றவர்களின் செய்திகளை (முதாபஅத் அல்லது ஷாஹித் அடிப்படையில்) துணைச் சான்றாகவோ அல்லது முஅல்லக் செய்திகளாகவோ குறிப்பிடுவார்கள்.

ஒரு அறிவிப்பாளரை முதாபஅத்தாக-அதாவது மேற்கண்ட செய்தியில் இடம்பெறும் ஆசிரியரிடமிருந்து இவரும் அறிவித்துள்ளார் என்று கூறுவதால் இவரை பலவீனமானவர் என்றும் கருதிவிடக் கூடாது. சில நேரம் பலமான அறிவிப்பாளரைக் கூட முதாபஅத்தாக அல்லது ஷாஹிதாக கூறப்படும்.

பார்க்க: புகாரி-34, 113, …


சரியான ஹதீஸ்களின் படித்தரங்கள்:

1 . புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இருவரும் (ஒருமித்து) அறிவித்த ஹதீஸ்கள். (இவைகளில் சிலவை முத்தஃபக் அலைஹி எனும் தரத்தை அடைகிறது. இவை முதல் தர ஹதீஸ்கள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்)

2 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் மட்டும் தனித்து அறிவித்த ஹதீஸ்கள்.

3 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் மட்டும் தனித்து அறிவித்த ஹதீஸ்கள்.

4 . புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இருவரின் நிபந்தனைப்படி மற்றவர்கள் அறிவித்த ஹதீஸ்கள்.

5 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் நிபந்தனைப்படி மற்றவர்கள் அறிவித்த ஹதீஸ்கள்.

6 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் நிபந்தனைப்படி மற்றவர்கள் அறிவித்த ஹதீஸ்கள்.

7 . புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அல்லாத மற்ற அறிஞர்களின் நிபந்தனைப்படி உள்ள சரியான ஹதீஸ்கள்.


الفرق بين “رواه الشيخان” و”متفق عليه”
المصطلح عليه عند أهل العلم بلفظ (متفق عليه) أنه رواه البخاري ومسلم عن صحابي واحد أي المتن والمخرج أي الصحابي متحد سواء اتفقا على لفظه أو اختلفا فيه ولو اشتركا في الصحابي فقط. المهم هو الاتفاق في المعنى. إما إذا كان المتن بمخرجين مختلفين والمتن في الصحيحين ولكل متن مخرج مختلف فهذا يقال فيه: رواه البخاري ومسلم ولا يقال متفق عليه. يقال فيه: رواه البخاري عن فلان، ومسلم عن فلان فهما بمعنى واحد.
الحاصل أن الحديث الذي يُقال له متفق عليه هو ما رواه الإمامان البخاري ومسلم وأخرجاه في كتابيهما، ولو اشتركا في الصحابي فقط. وسواء اتفقا على لفظه أو اختلفا فيه المهم هو الاتفاق في المعنى.


وأما إذا روي البخاري متنًا من طريق أبي هريرة – مثلاً – ورواه مسلم من طريق أنس فلا ينطق هنا متفق عليه بل ينطق: أخرجه الشيخان.
قال الحافظ ابن حجر في النكت (1 / 365) : (تنبيه : جميع ما قدمنا الكلام عليه من المتفق هو : ما اتفقا على تخريجه من حديث صحابي واحد أما إذا كان المتن الواحد عند أحدهما من حديث صحابي غير الصحابي
الذي أخرجه عنه الآخر مع اتفاق لفظ المتن أو معناه فهل يقال في هذا أنه من المتفق ؟ فيه نظر على طريقة المحدثين . والظاهر من تصرفاتهم أنهم لا يعدونه من المتفق إلا أن الجوزقي منهم استعمل ذلك في كتاب (المتفق) له في عدة أحاديث ، وقد قدمنا حكاية ذلك عنه وما يتمشى له ذلك إلا على طريقة الفقهاء) .
ولمزيد الإيضاح في ذلك أنظر النكت على ابن الصلاح للحافظ ابن حجر -رحمه الله- (1 / 298 ، 364).


ومنهم من له اصطلاح خاص وهو المجد ابن تيمية-جد شيخ الإسلام أحمد بن تيمية-
وذلك في كتابه (منتقى الأخبار في أحاديث سيد الأخبار) الذي شرحه الشوكاني في كتابه (نيل الأوطار) فالمجد إذا قال: متفق عليه، فيكون مراده: أخرجه أحمد والبخاري ومسلم
أما ما رواه البخاري ومسلم ولم يروه أحمد فليس متفقا عليه عنده بل يقول رواه الشيخان .
وهذه اصطلاحات خاصة للعلماء وقد نبه على ذلك في مقدمة كتابه المنتقى , فتنبه.


والبغوي في شرح السنة قد يُطلق (متفق عليه) مع اختلاف الصحابي، ويبيِّن أن المراد بـ(المتفق عليه) متفق على متنه، ولذلك يقول: (متفق عليه، رواه محمد عن أبي هريرة، ومسلم عن ابن عمر) مثلًا وهذا أيضًا اصطلاح خاص به وإلا فالأصل أنه لا يقال: (متفق عليه) إلا إذا اتَّحد الصحابي.


كذلك نبه بعض أهل العلم أن أبا نعيم الأصبهاني في كتابه ( حلية الأولياء) يطلق مصطلح ( متفق عليه) على ما اجتمعت فيه شروط الصحة عند المحدثين ولا يقصره على ما رواه الشيخان واتفقا عليه . والله أعلم

முத்தஃபகுன் அலைஹி மற்றும் ரவாஹுஷ் ஷைக்கானி ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு:

ஹதீஸ்கலை அறிஞர்களிடம் ‘முத்தஃபகுன் அலைஹி’ (متفق عليه) என்ற சொல் வழக்கமாக ஒரு குறிப்பிட்ட பொருளிலேயே கையாளப்படுகிறது. அதாவது,

1 . ஒரு ஹதீஸை இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
மற்றும் இமாம் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகிய இருவருமே ஒரே நபித்தோழர் வழியாக அறிவித்திருக்க வேண்டும். ஹதீஸின் வார்த்தை அமைப்பு அல்லது கருத்து ஒன்றாக இருக்க வேண்டும்.

இருவரின் ஹதீஸின் வாசக அமைப்பு ஒன்றாக இருந்தாலும் அல்லது வாசக அமைப்பு சிறு மாற்றங்களுடன் இருந்தாலும், அதன் பொருள் ஒன்றாக இருந்து, நபித்தோழரும் ஒருவராக இருந்தால் அதையே ‘முத்தஃபகுன் அலைஹி’ என்று கூறுவார்கள்.

2 . மாறாக, ஒரு ஹதீஸின் கருத்து புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
மற்றும் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகிய இரு நூல்களிலும் இருந்து, அவை வெவ்வேறு நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தால், அதை ‘முத்தஃபகுன் அலைஹி’ என்று கூறுவதில்லை. அதற்குப் பதிலாக ‘ரவாஹுஷ் ஷைக்கானி’ (رواه الشيخان – இரு ஷேக்குகளும் அறிவித்துள்ளனர்) என்று கூறுவார்கள்.

உதாரணமாக, புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் ஒரு ஹதீஸை அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாகவும், முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்கள் அதே கருத்துள்ள ஹதீஸை அனஸ் (ரலி) வழியாகவும் அறிவித்தால், அது ‘இருவரும் அறிவித்தது’ என்றுதான் சொல்லப்படுமே தவிர ‘ஏகோபித்தது’ (முத்தஃபகுன் அலைஹி) என்று சொல்லப்படாது.

இது குறித்து ஹாஃபிள் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

“நாம் இதுவரை விளக்கிய ‘முத்தஃபகுன் அலைஹி’ என்பது, ஒரே நபித்தோழர் வழியாக புகாரியும் முஸ்லிமும் ஒரு ஹதீஸைப் பதிவு செய்வதைக் குறிக்கும். ஆனால், கருத்து ஒன்றாக இருந்து நபித்தோழர் மட்டும் வேறாக இருந்தால், ஹதீஸ் கலை அறிஞர்களின் முறைப்படி அது ‘முத்தஃபகுன் அலைஹி’ என்பதில் அடங்காது. எனினும், அல்ஜவ்ஸகீ போன்ற ஒரு சில அறிஞர்கள் இதையும் ‘முத்தஃபகுன் அலைஹி’ என்றே குறிப்பிட்டுள்ளனர். இது பெரும்பாலும் ஃபிக்ஹ் (சட்டக் கலை) அறிஞர்களின் வழக்காகும்.

(நூல்: அன்னுகத்-1/365).


முத்தஃபக் அலைஹி பற்றி வேறு சில தனித்துவமான வழக்குச்சொற்கள்:

சில அறிஞர்கள் முத்தஃபக் அலைஹி என்ற வார்த்தைக்கு தங்களுக்கெனத் தனித்துவமான விளக்கங்களை வைத்துள்ளனர்:

இமாம் மஜ்துத்தீன் இப்னு தைமிய்யா: ‘முன்தகல் அக்பார்’ என்ற நூலின் ஆசிரியரான இவர், ‘முத்தஃபகுன் அலைஹி’ எனக் குறிப்பிட்டால், அதற்கு இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகிய மூவரும் அந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ளனர் என்று பொருள். புகாரியும் முஸ்லிமும் மட்டும் அறிவித்திருந்தால் அதை ‘ரவாஹுஷ் ஷைக்கானி’ என்று குறிப்பிடுகிறார்.

இமாம் பகவீ: ‘ஷரஹுஸ் ஸுன்னா’ என்ற நூலில், நபித்தோழர் வேறாக இருந்தாலும் ஒரு ஹதீஸின் கருத்து புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
மற்றும் முஸ்லிமில் இருந்தால் அதை ‘முத்தஃபகுன் அலைஹி’ எனக் குறிப்பிடுகிறார். “இது முத்தஃபகுன் அலைஹி; புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
வழியாகவும், முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
வழியாகவும் அறிவித்துள்ளனர்” என்று அவரே விளக்கியும் கூறுகிறார்.

அபூநுஐம் அல்அஸ்பஹானி: இவர் தனது ‘ஹில்யதுல் அவ்லியா’ என்ற நூலில், ஹதீஸ்கலை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ள நிபந்தனைப்படி அந்த ஹதீஸ் சரியாக இருந்தால் அதை ‘முத்தஃபகுன் அலைஹி’ என்று கூறுகிறார். இது புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
மட்டும் ஒன்றுப்படும் செய்திகளைக் குறிப்பதல்ல.


புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அறிஞர்களின் அறிவிப்பாளர்கள் பற்றிய நிலைப்பாடு:

تحرير تقريب التهذيب (1/ 29):
ونستخلِصُ مما تقدم، ومما عرفناه بالاستقراء ما يأتي:
1 – أن كُلَّ مَنْ روى عنه البخاري ومسلم في “صحيحيهما”، واحتجَّا به في الحلال والحرام والأصول، فهو ثقة عندهما.
2 – أنهما انتقيا مِن رواية بعض المتكلَّم فيهم أحاديثَ يعلمانِ أنهم قد حَفِظوها، وهي غالبًا في غير الحلال والحرام، كالتفسيرِ والمغازي والأدب والرِّقاق والفضائلَ.
3 – أنهما لم يلتزما الشروطَ المعتبرةَ في الثقةِ فيما خرجاه من الأحاديث في المتابعات والشواهِدِ.
4 – أنَّهما لم يلتزما ذلك في التعاليق.
ويتعينُ اعتبارُ هذه الأمورِ عندَ الحكم على كُل راو ممن أخرج له الشيخان في “صحيحيهما” أو أحدهما،

முன்னர் விளக்கியவற்றிலிருந்தும், (ஹதீஸ் கலை விதிகளைப்) பரவலாக ஆய்வு செய்ததன் (இஸ்திக்ராஃ) மூலமும் நாம் பின்வரும் முடிவுகளைப் பெறுகிறோம்:

1. புகாரியும் முஸ்லிமும் தங்களது “ஸஹீஹ்” நூல்களில் யாருடைய ஹதீஸ்களை அறிவித்து, அவற்றை ஹலால், ஹராம், கொள்கை போன்ற அடிப்படையான மார்க்க சட்டங்களுக்கு ஆதாரமாகப் பயன்படுத்தியுள்ளார்களோ, அந்த அறிவிப்பாளர்கள் அனைவரும் அவர்கள் இருவரிடத்திலும் நம்பகமானவர்கள் ஆவார்கள்.

2. (அறிவிப்பாளர் கலையில்) விமர்சனத்திற்குள்ளான சில அறிவிப்பாளர்களிடமிருந்தும் இவர்கள் சில ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்துப் பதிவு செய்துள்ளனர். அவ்வாறு பதிவு செய்யும் போது, அந்த குறிப்பிட்ட ஹதீஸ்களை அவர்கள் துல்லியமாக மனனம் செய்துள்ளார்கள் என்பதை இந்த இரு இமாம்களும் உறுதியாக அறிந்தே பதிந்துள்ளனர். மேலும், இத்தகைய ஹதீஸ்கள் பெரும்பாலும் ஹலால், ஹராம் சார்ந்த சட்டங்களாக இருக்காது; மாறாக குர்ஆன் விரிவுரை (தஃப்ஸீர்), போர்கள் (மஃகாஸீ), ஒழுக்கநெறிகள் (அதப்), உள்ளத்தை உருக்கும் அறிவுரைகள் (ரிகாக்), சிறப்புகள் (ஃபளாயில்) போன்ற தலைப்புகளிலேயே அமைந்திருக்கும்.

3. முதன்மை ஹதீஸ்களுக்குத் துணையாக வரும் ஹதீஸ்களுக்கு (அதாவது முதாபஆத், ஷவாஹித்) செய்திகளுக்கு அவர்கள் கடும் நிபந்தனைகளை வைக்கவில்லை.

4. இதேபோல, அறிவிப்பாளர்தொடரைக் கூறாமல் குறிப்பிடும் ‘முஅல்லக்’ வகை ஹதீஸ்களிலும் அவர்கள் இந்த கடுமையான நிபந்தனைகளை வைக்கவில்லை.

புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகிய இரு இமாம்களும் அல்லது அவர்களில் ஒருவரோ தங்களது “ஸஹீஹ்” நூல்களில் இடம்பெறச் செய்துள்ள ஒவ்வொரு அறிவிப்பாளரைப் பற்றியும் (அவர் பலவீனமானவரா அல்லது பலமானவரா என்று) தீர்ப்பு வழங்கும்போது, மேலே கூறப்பட்ட இந்த நான்கு விஷயங்களையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியமாகும்.

(சுருக்கமாக): புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
மற்றும் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
நூல்களில் ஒரு அறிவிப்பாளர் இடம்பெற்றுவிட்டார் என்பதற்காகவே அவர் எல்லா இடங்களிலும் நூறு சதவீதம் பலமானவர் என்று கண்ணை மூடிக்கொண்டு முடிவெடுக்கக் கூடாது. அவர் முதன்மை ஆதாரமாக வந்துள்ளாரா, அல்லது வெறும் துணைச் சான்றாக வந்துள்ளாரா, அல்லது சட்டம் அல்லாத பொதுவான நல்லுரைகளில் வந்துள்ளாரா என்பதைப் பிரித்தறிந்துதான் அந்த அறிவிப்பாளரின் தரத்தை நாம் எடைபோட வேண்டும்.

(நூல்: தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப்-பாகம்: 1, பக்கம்: 29)


 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.