தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-34

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

34. ‘நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Book :2


حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا: إِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ»

تَابَعَهُ شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ


Bukhari-Tamil-34.
Bukhari-TamilMisc-34.
Bukhari-Shamila-34.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.

புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

محمد بن إسماعيل البخاري

இறப்பு: ஹி-256.

தரம்: மிகப் பலமானவர்.


இயற்பெயர்: முஹம்மத்

தந்தை பெயர்: இஸ்மாயீல் பின் இப்ராஹீம்

வமிசம்: அல்ஜுஅஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ்

பிறப்பு: ஹிஜ்ரி-194.

இறப்பு: ஹிஜ்ரி-256

கால கட்டம்: 10.


இமாம் புகாரி

முழுப்பெயர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் இப்னுல் முகீரா  (ஸஹீஹுல் புகாரி என்ற ஹதீஸ் நூலை தொகுத்த இமாம் ஆவார்)

புனைப்பெயர்: அபூ அப்தில்லாஹ் இப்னு அபீ ஹஸனில் புகாரி அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: இஸ்மாயில்

பிறந்த ஊர்: ரஷ்யாவில் உள்ள புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். எனவே தான் புகாரி – புகாராவைச் சார்ந்தவர் என்ற கருத்தில் அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 194ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: கல்விக்காகத் தனது 10 வயதில் இருந்தே ஈரானில் உள்ள குராஸான், கூஃபா, பாக்தாத் போன்ற  ஊர்களுக்கும் இன்னும் பஸரா,  எகிப்து, ஸிரியா, மக்கா, மதீனா, போன்ற உலகத்தின் பல பாகங்களுக்கு பயணம் செய்து இருக்கிறார்.

ஸஹீஹ் அல்புகாரிக்கு இமாம் புகாரி வைத்த பெயர்: அல்ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (நபியவர்களிடமிருந்து ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர்களுடன் வந்துள்ள செய்திகள் இன்னும் அவர்களின் வழிமுறைகள், வாழ்நாட்கள்)

ஜாமிவுஸ் ஸஹீஹுல் முஸ்னத் மின் அஹாதீஸி ரசூலில்லாஹ் வஸுனனிஹி வஅய்யாமிஹி (ஸஹீஹுல் புகாரி)

அல் அதபுல் முஃப்ரத்,

அத்தாரிகுல் கபீர், (அறிவிப்பாளர் தொடர்பான நூல்),

அல்லுஃபாவுஸ் ஸகீர் (பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர்பான நூல்),

ரஃபவுல் யதய்ன் ஃபிஸ் ஸலாதி, (தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்),

அல் கிராஅது கல்ஃபல் இமாம்  (இமாமுக்கு பின்னால் ஓதுதல்) போன்ற பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

அஹ்மது இப்னு ஹன்பல், இப்ராஹீம் இப்னு மூஸா அர்ராஸியி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ்,           ஹஸன் இப்னு பஸருல் பஜலீ, அபுல் யமான் அல்ஹகம் இப்னு நாபிஃ, கைஸ் இப்னு ஹஃப்ஸுத்தாரமி, நுஐம் இப்னுல் ஹம்மாது அல்மரூஸியி, யஹ்யா இப்னு மயீன், ஹஸன் இப்னு லிஹாக் நைஸாபூரி, அப்துல்லாஹ் இப்னு அப்துர்ரஹ்மானுத்தாரமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்

அபூக்கர் அப்துல்லாஹ் இப்னு அபீதாவூத், ஃபல் இப்னுல் அப்பாஸுர்ராஸி அல்ஹாஃபிழ், அபுஹாதம் முஹம்மது இப்னு இத்ரீஸு அர்-ராஸியி, முஹம்மது இப்னு யூசுஃபுல் ஃபர்பரீய், அத்திர்மிதி, முஸ்லிம் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்

இறப்பு:  ஹிஜ்ரி 256ல் ஷவ்வால் மாதம் நோன்பு பெருநாள் அன்று சனிக்கிழமை இஷா தொழுகை நேரத்தில் மரணித்தார். அப்போது அவருக்கு 62 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

கபிஸா பின் உக்பா-ஸவாயீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஸுஃப்யான் ஸவ்ரீ-ஸுஃப்யான் பின் ஸயீத்

ஸுஃப்யான் ஸவ்ரீ-அஸ்ஸவ்ரீ (ரஹ்) – Sufyan bin Sa‘id Ath-Thawri

இறப்பு: ஹிஜ்ரி 161, பஸரா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஸுஃப்யான் பின் ஸயீத் பின் மஸ்ரூக்

தந்தை பெயர்: ஸயீத் பின் மஸ்ரூக் அஸ்ஸவ்ரீ

வம்சம்: பனூ தவ்ர் பின் அப்து மனாத்

புனைப்பெயர்: அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: கூஃபா

பயணித்த ஊர்கள்: கூஃபா, ஹிஜாஸ், பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 97, கூஃபா

இறப்பு: ஹிஜ்ரி 161, பஸரா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 97 ஆம் ஆண்டு கூஃபாவில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 161 ஆம் ஆண்டு பஸராவில் மரணமடைந்தார்கள். இவர் மிகப் பலமானவர், ஹாஃபிழ், ஃபகீஹ், இமாம், ஹுஜ்ஜத் ஆவார்.

ஹதீஸ் கலையில் 'அமீருல் முஃமினீன்' என்று போற்றப்பட்டார்கள். அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹ் அவர்கள், 'நான் 1100 ஷேக்குகளிடமிருந்து எழுதினேன், ஸுஃப்யான் ரஹ் அவர்களை விட சிறந்த ஒருவரிடமிருந்தும் நான் எழுதவில்லை' என்று கூறினார்கள். இமாம் அஹ்மத் ரஹ் அவர்கள், 'இமாம் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

இமாம் ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ ரஹ் அவர்கள்தான். என் இதயத்தில் அவரை விட யாரும் முந்தியதில்லை' என்று கூறினார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸயீத் பின் மஸ்ரூக் அஸ்ஸவ்ரீ, ஸுலைமான் பின் அபூ ஸுலைமான், அபூ இஸ்ஹாக் அஸ்ஸபியீ, அப்துல் மாலிக் பின் உமைர், இஸ்மாயீல் பின் அபூ காலித், ஸலமா பின் கஹைல், ஸுலைமான் அல்அஃமஷ், மன்ஸூர் பின் அல்மஃதமர், ஹம்மாத் பின் அபூ ஸுலைமான், ஸுபைத் பின் அல்ஹாரிஸ், அதா பின் அஸ்ஸாயிப் அஸ்ஸகஃபீ, ஸைத் பின் அஸ்லம்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): மாலிக் இமாம், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான், அப்துல்லாஹ் பின் முபாரக், ஜரீர் பின் அப்துல் ஹமீத், ஹஃப்ஸ் பின் கியாஸ், ஹம்மாத் பின் உஸாமா, வகீஃ பின் அல்ஜர்ராஹ், யஸீத் பின் ஹாறூன், அபூ நுஐம், உபைதுல்லாஹ் பின் மூஸா, அல்ஃபள்ல் பின் மூஸா அஸ்ஸீனானீ

வேறு பெயர்கள்: ஸுஃப்யான் பின் ஸயீத் அஸ்ஸவ்ரீ, அபூ அப்துல்லாஹ்


ஆதாரம்: muslimscholars.info (20012) · Should verify

அஃமஷ்-ஸுலைமான் பின் மிஹ்ரான்

سليمان بن مهران الأعمش

இறப்பு: ஹிஜ்ரி 148, கூஃபா

தரம்: மிகப் பலமானவர், ஹாஃபிழ்


விபரங்கள்

இயற்பெயர்: ஸுலைமான் பின் மிஹ்ரான்

தந்தை பெயர்: மிஹ்ரான்

வம்சம்: அல்அஸதீ, அல்காஹிலீ

புனைப்பெயர்: அபூ முஹம்மத்

ஊர் பெயர்: கூஃபா

பயணித்த ஊர்கள்: கூஃபா, வாஸித், மக்கா

பிறப்பு: ஹிஜ்ரி 61, கூஃபா

இறப்பு: ஹிஜ்ரி 148, கூஃபா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸுலைமான் பின் மிஹ்ரான் அல்அஃமஷ் ரஹ் அவர்கள் ஒரு தாபிஈ ஆவார். இவர் ஹிஜ்ரி 61 ஆம் ஆண்டு கூஃபாவில் பிறந்தார். இவர் ஹதீஸ் கலையில் மிகப் பலமானவர் மற்றும் ஹாஃபிழ் ஆவார்.

குர்ஆன் கிராஅத் மற்றும் ஃபராயித் (பாகப்பிரிவினை) சட்டங்களிலும் இவர் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார். இவர் ஹிஜ்ரி 148 ஆம் ஆண்டு கூஃபாவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அனஸ் பின் மாலிக், அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா, ஸைத் பின் வஹ்ப் அல்ஜுஹனீ, ஷகீக் பின் ஸலமா அல்அஸதீ, ஸஃத் பின் இயாஸ், அபூ அம்ர் ஷைபானீ, கைஸ் பின் அபூஹாஸிம், இஸ்மாயீல் பின் ரஜா பின் ரபீஆ அஸ்ஸுபைதீ, ஜமாஃ பின் ஷத்தாத் அல்மஹாரபீ, ஹுஸைன் பின் ஜுன்துப் பின் அல்ஹாரிஸ், கைஸமா பின் அப்துர்ரஹ்மான், ஆமிர் அஷ்ஷஅபீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஹகம் பின் உதைபா, ஸுபைது பின் அல்ஹாரிஸ், அபூ இஸ்ஹாக் அஸ்ஸபாயீ, ஸுலைமான் பின் தர்கான் அத்தைமீ, ஸுஹைல் பின் அபூஸாலிஹ், முஹம்மத் பின் வாஸிஃ பின் ஜாபிர், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், ஸுஃப்யான் பின் ஸயீத் அஸ்ஸவ்ரீ, ஸுஃப்யான் பின் உயைனா, இப்ராஹீம் பின் தஹ்மான், ஜரீர் பின் ஹாஸிம் பின் ஸைத், இஸ்ராயீல் பின் யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக்

வேறு பெயர்கள்: அஃமஷ், ஸுலைமான் பின் மிஹ்ரான்


ஆதாரம்: muslimscholars.info (11060) · Should verify

அப்துல்லாஹ் பின் முர்ரா-அல்ஹம்தானீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

மஸ்ரூக் பின் அஜ்தஃ-அல்ஹம்தானீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துல்லாஹ் பின் அம்ர்-அஸ்ஸஹ்மீ (ரலி)

நபித்தோழர்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.