ஈராக் நாட்டவர்கள் சிலர் இப்னு அப்பாஸ் (ரலி)யிடம் வந்து இப்னு அப்பாஸே ஜும்ஆ நாளன்று குளிப்பு கடமை என்றா கருதுகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) பின் வருமாறு பதில் கூறினார்கள்:
யார் குளிக்கின்றாரோ அவருக்கு அது தூய்மையானதும், சிறந்ததும் ஆகும். யார் குளிக்கவில்லையோ அவருக்கு அது கடமையில்லை. குளிப்பு எப்படி ஆரம்பமானது என்று நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். மக்கள் கடுமையான வறுமையின் பிடியில் இருந்தார்கள். கம்பளியை அணிந்து கொண்டும் தங்கள் முதுகுகளில் சுமைகளை சுமந்து கொண்டும் இருந்தனர். அவர்களது (அன்றைய) பள்ளிவாசல் நெருக்கடியானதாகவும் முகடு தாழ்வானதாகவும் இருந்தது. அது (பேரீத்த மர நாரினால் வேயப்பட்ட) கூரை தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெப்பமிருந்த ஒரு நாள் புறப்பட்டு வந்தார்கள். மக்களும் அந்த கம்பளி ஆடைகளில் வியர்த்துப் போய் இருந்தனர். அவர்களிடம் இருந்து துர்வாடை கிளம்பி அதன் காரணமாக ஒருவர் இன்னொருவரை சங்கடமடைய செய்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வாடையை நுகர நேரிட்டதும், மக்களே! இந்த (ஜும்ஆ) நாள் வந்து விட்டால் குளித்துக் கொள்ளுங்கள். உங்களில் ஒருவர் தன்னிடத்தில் எண்ணை மற்றும் வாசனை திரவியங்களில் இருந்து மிகச் சிறந்ததை பூசிக் கொள்வாராக! என்று கூறினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) மேலும் கூறுகின்றார்கள். எவனது திருப்பெயர் உயர்ந்து விட்டதோ, அந்த அல்லாஹ் பொருளாதாரத்தை வழங்கினான். மக்கள் கம்பளி அல்லாத ஆடைகளை அணியலாயினர். கடின உழைப்பில் இருந்து காக்கப் பட்டனர். அவர்களது பள்ளிவாசல் விரிவு படுத்தப்பட்டது. வியர்வையினால் அவர்களில் ஒருவர் இன்னொருவருக்கு அளித்துக் கொண்டிருந்த சங்கடமும் தீர்ந்து போனது..
அறிவிப்பவர் : இக்ரிமா.
(அபூதாவூத்: 353)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ
أَنَّ أُنَاسًا مِنْ أَهْلِ الْعِرَاقِ جَاءُوا فَقَالُوا: يَا ابْنَ عَبَّاسٍ أَتَرَى الْغُسْلَ يَوْمَ الْجُمُعَةِ وَاجِبًا؟ قَالَ: لَا، وَلَكِنَّهُ أَطْهَرُ، وَخَيْرٌ لِمَنِ اغْتَسَلَ، وَمَنْ لَمْ يَغْتَسِلْ فَلَيْسَ عَلَيْهِ بِوَاجِبٍ، وَسَأُخْبِرُكُمْ كَيْفَ بَدْءُ الْغُسْلِ كَانَ النَّاسُ مَجْهُودِينَ يَلْبَسُونَ الصُّوفَ وَيَعْمَلُونَ عَلَى ظُهُورِهِمْ، وَكَانَ مَسْجِدُهُمْ ضَيِّقًا مُقَارِبَ السَّقْفِ – إِنَّمَا هُوَ عَرِيشٌ – فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَوْمٍ حَارٍّ وَعَرِقَ النَّاسُ فِي ذَلِكَ الصُّوفِ حَتَّى ثَارَتْ مِنْهُمْ رِيَاحٌ آذَى بِذَلِكَ بَعْضُهُمْ بَعْضًا، فَلَمَّا وَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تِلْكَ الرِّيحَ قَالَ: «أَيُّهَا النَّاسُ إِذَا كَانَ هَذَا الْيَوْمَ فَاغْتَسِلُوا، وَلْيَمَسَّ أَحَدُكُمْ أَفْضَلَ مَا يَجِدُ مِنْ دُهْنِهِ وَطِيبِهِ» قَالَ ابْنُ عَبَّاسٍ: ثُمَّ جَاءَ اللَّهُ بِالْخَيْرِ وَلَبِسُوا غَيْرَ الصُّوفِ، وَكُفُوا الْعَمَلَ وَوُسِّعَ مَسْجِدُهُمْ، وَذَهَبَ بَعْضُ الَّذِي كَانَ يُؤْذِي بَعْضُهُمْ بَعْضًا مِنَ الْعَرَقِ
AbuDawood-Tamil-353.
AbuDawood-Shamila-353.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்