தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-422

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஷா தொழுதோம். (அந்த தொழுகைக்கு) கிட்டதட்ட இரவு கழியும் வரை அவர்கள் (பள்ளிக்கு) கிளம்பி வரவில்லை. வந்ததும், உங்கள் இடங்களிலேயே இருங்கள் என்று சொன்னார்கள். நாங்கள் எங்களது இடங்களிலேயே இருந்ததும் மக்கள் தொழுதுவிட்டு படுத்து விட்டார்கள். நீங்கள் தொழுகையை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதால் தொடர்ந்து தொழுதவர்கள் போலாவீர்கள். மேலும் பலவீனமானவரின் பலவீனமும், நோயாளியின் நோயும் காரணமாக அமையவில்லையென்றால் பாதி இரவு வரை இந்த தொழுகையை நான் பிற்படுத்தியிருப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூசயீத் அல் குத்ரி (ரலி) அறிவிக்கின்றார். 

(குறிப்பு : இந்த ஹதீஸ் நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)

(அபூதாவூத்: 422)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ

صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْعَتَمَةِ فَلَمْ يَخْرُجْ حَتَّى مَضَى نَحْوٌ مِنْ شَطْرِ اللَّيْلِ فَقَالَ: «خُذُوا مَقَاعِدَكُمْ» فَأَخَذْنَا مَقَاعِدَنَا فَقَالَ: «إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا وَأَخَذُوا مَضَاجِعَهُمْ وَإِنَّكُمْ لَنْ  تَزَالُوا فِي صَلَاةٍ مَا انْتَظَرْتُمُ الصَّلَاةَ وَلَوْلَا ضَعْفُ الضَّعِيفِ وَسَقَمُ السَّقِيمِ لَأَخَّرْتُ هَذِهِ الصَّلَاةَ إِلَى شَطْرِ اللَّيْلِ»


AbuDawood-Tamil-422.
AbuDawood-Shamila-422.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.