தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1853

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

முஆத் (ரலி) அவர்கள் ஷாமிலிருந்து திரும்ப வந்த போது நபி (ஸல்) அவர்களுக்கு சிரம் பணிந்தார். (அதற்கு) நபி (ஸல்) அவர்கள் முஆதே என்ன இது? என்று கேட்டார்கள். முஆத் (ரலி) அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஷாமில் உள்ளவர்கள் தமது தலைவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் சிரம் பணிவதை பார்த்தேன். எனவே நான் உங்களுக்கு சிரம் பணியவேண்டும் என்று விரும்பினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு ஸஜ்தாச் செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தா செய்ய அனுமதித்திருப்பேன் என்று கூறினார்கள்….

அறிவிப்பவர் :  அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி)

(இப்னுமாஜா: 1853)

حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنِ الْقَاسِمِ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ:

لَمَّا قَدِمَ مُعَاذٌ مِنَ الشَّامِ سَجَدَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا هَذَا يَا مُعَاذُ؟» قَالَ: أَتَيْتُ الشَّامَ فَوَافَقْتُهُمْ يَسْجُدُونَ لِأَسَاقِفَتِهِمْ وَبَطَارِقَتِهِمْ، فَوَدِدْتُ فِي نَفْسِي أَنْ نَفْعَلَ ذَلِكَ بِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَلَا تَفْعَلُوا، فَإِنِّي لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِغَيْرِ اللَّهِ، لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَا تُؤَدِّي الْمَرْأَةُ حَقَّ رَبِّهَا حَتَّى تُؤَدِّيَ حَقَّ زَوْجِهَا، وَلَوْ سَأَلَهَا نَفْسَهَا وَهِيَ عَلَى قَتَبٍ لَمْ تَمْنَعْهُ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1843.
Ibn-Majah-Shamila-1853.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1843.




إسناد ضعيف فيه القاسم بن عوف الشيباني وهو ضعيف الحديث (جوامع الكلم)

இது குளறுபடியான செய்தி. இதற்கு காரணம் இதில் வரும் காஸிம் பின் அவ்ஃப். இவர் பலவீனமானவர் என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

قلت : وقال النسائي عقب تخريج حديثه في ” اليوم والليلة ” : القاسم ضعيف الحديث .
تهذيب التهذيب: (3 / 416)

3 . இந்தக் கருத்தில் இப்னு அபூஅவ்ஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹம்மாத் —> அய்யூப் —> காஸிம் —> இப்னு அபூஅவ்ஃபா (ரலி)

பார்க்க : அஹ்மத்-19403 , இப்னு மாஜா-1853 , இப்னு ஹிப்பான்-4171 , குப்ரா பைஹகீ-14711 ,

  • இப்னு ஹிஷாம் —> ஹிஷாம் —> காஸிம் —> முஆத் பின் ஜபல் (ரலி)

பார்க்க : ஹாகிம்-7325 , (அஹ்மத்- 19404 , அஹ்மத்- 21987 ,)

மேலும் பார்க்க : திர்மிதீ-1159 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.