தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1159

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

மனைவி, கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் குறித்து வந்துள்ளவை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் இன்னொருவருக்கு ஸஜ்தாச் செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால் ஒரு பெண் தனது கணவனுக்கு ஸஜ்தாச் செய்வதை அனுமதித்திருப்பேன். (ஆனால் நான் அனுமதிக்கவில்லை)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் முஆத் பின் ஜபல் (ரலி), ஸுராகா பின் மாலிக் பின் ஜுஃஷும் (ரலி), ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி), தல்க் பின் அலீ (ரலி), உம்மு ஸலமா (ரலி), அனஸ் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

முஹம்மத் பின் அம்ர் —> அபூஸலமா —> அபூஹுரைரா (ரலி) என்ற இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் அபூஹுரைரா (ரலி) வழியாக வந்துள்ள (மேற்கண்ட) செய்தி “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

(திர்மிதி: 1159)

بَابُ مَا جَاءَ فِي حَقِّ الزَّوْجِ عَلَى المَرْأَةِ

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ المَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا»

وَفِي البَاب عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، وَسُرَاقَةَ بْنِ مَالِكِ بْنِ جُعْشُمٍ، وَعَائِشَةَ، وَابْنِ عَبَّاسٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، وَطَلْقِ بْنِ عَلِيٍّ، وَأُمِّ سَلَمَةَ، وَأَنَسٍ، وَابْنِ عُمَرَ.: «حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1079.
Tirmidhi-Shamila-1159.
Tirmidhi-Alamiah-1079.
Tirmidhi-JawamiulKalim-1075.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . மஹ்மூத் பின் ஃகைலான்

3 . நள்ர் பின் ஷுமைல்

4 . முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா

5 . அபூஸலமா-அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41980-முஹம்மது பின் அம்ர் பின் அல்கமா நடுத்தரமானவர். இவர் தவறாக அறிவித்த செய்திகளைத் தவிர்த்து மற்றவை ஏற்கப்படும்.

கூடுதல் தகவல் பார்க்க: முஹம்மது பின் அம்ர் பின் அல்கமா.


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மது பின் அம்ர் —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: திர்மிதீ-1159, அன்னஃபகது அலல்இயால்-534, முஸ்னத் பஸ்ஸார்-8023, இப்னு ஹிப்பான்-4162, குப்ரா பைஹகீ-14704, ஸகீர் பைஹகீ-2598, அல்வஸீத் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜீத்-108, 214, 


  • அன்னஃபகது அலல்இயால்-534.

النفقة على العيال لابن أبي الدنيا (2/ 727)
534 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَائِطًا مِنْ حَوَائِطِ الْأَنْصَارِ وَإِذَا فِيهِ جَمَلَانِ يَضْرِبَانِ فَدَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهُمَا فَوَضَعَا جِرَّانَهُمَا بِالْأَرْضِ فَقَالَ قَائِلٌ مِنَ النَّاسِ سَجَدَا لَهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَنْبَغِي لِأَحَدٍ أَنْ يَسْجُدَ، لَوْ أَمَرْتُ أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ , لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا مِمَّا عَظَّمَ اللَّهُ مِنْ حَقِّهِ عَلَيْهَا»


  • அல்வஸீத் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜீத்-108, 214.

(214,108)- [2 : 45] أَخْبَرَنَا الأُسْتَاذُ الْإِمَامُ أَبُو طَاهِرٍ الزِّيَادِيُّ، أَخْبَرَنَا أَبُو حَامِدٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ بِلالٍ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ الْمَرْوَزِيُّ، أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ: ” لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لأَحَدٍ، لأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا، لِمَا عَظَّمَ اللَّهُ مِنْ حَقِّهِ عَلَيْهَا “


  • ஸுலைமான் பின் அபூஸுலைமான் —> யஹ்யா பின் அபூகஸீர் —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-8634, ஹாகிம்-2768, 7324, குப்ரா பைஹகீ-13485,


  • அகீல் பின் காலித் —> ஸுஹ்ரீ —> ஸாலிம் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: ஃபவாஇத்-அபுல்ஹுஸைன்-20,

الجزء الثاني من الفوائد المنتقاة الغرائب الحسان لابن المظفر – مخطوط (ص: 5)
20- حدثنا أبو القاسم الطبراني سليمان بن أحمد بن أيوب ، بالبصرة سنة سبع وثلاث مائة من حفظه ، قال : حدثنا يحيى بن عثمان بن صالح المصري ، قال : نا نعيم بن حماد ، قال : ثنا رشدين بن سعد ، عن عقيل ، عن الزهري ، عن سالم ، عن أبيه ، عن أبي هريرة ، قال رسول الله صلى الله عليه وسلم : ” لو كنت آمرا أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها “


  • யஹ்யா பின் உபைதுல்லாஹ் —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அமாலீ-இப்னு பிஷ்ரான்-914,

أمالي ابن بشران – الجزء الأول (ص: 396)
914 – أَخْبَرَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الشَّافِعِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ غَالِبٍ، ثنا عَبْدُ الصَّمَدِ، ثنا وَرْقَاءُ، عَنْ يَحْيَى بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَنْبَغِي لِأَحَدٍ أَنْ يَسْجُدَ لِأَحَدٍ دُونَ اللَّهِ عَزَّ وَجَلَّ، وَلَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِبَشَرٍ دُونَ اللَّهِ عَزَّ وَجَلَّ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا»


 


2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-12003.


3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-6452.



4 . கைஸ் பின் ஸஅத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2140.


5 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1852.


6 . அப்துல்லாஹ் பின் அபூஅவ்ஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-21986.


7 . ஸைத் பின் அர்க்கம் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4318.


8 . முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1853.


9 . ஸுராகா பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: …


 

13 comments on Tirmidhi-1159

  1. அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஹதீஸின் விபரம் கீழே என்று குறிப்பிட்டு முழு விவரங்களையும் கொடுத்துள்ளீர்கள். ஜஸாகல்லாஹ் ஹைரன். ஆனால் அதன் தரம் என்னவென்ற முடிவை சொல்லவில்லை. இந்த ஹதீஸ் எந்த கருத்தில் உள்ளது என்பதை எப்படி புரிந்துக் கொள்வது? விபரங்களை மட்டும் வைத்து தரத்தை முடிவு செய்ய சிரமமாக உள்ளது. இதுபோன்று பல ஹதீஸ்களிலும் முடிவை சொல்லாமல் தலைப்பிட்டுள்ளீர்கள். தயவுசெய்து இதன் தரத்தை பற்றிய முடிவை சொல்லவும். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!

    1. எந்தக் கருத்தில் என்று கேட்கவில்லை, தவறாக டைப் ஆகிவிட்டது. எந்த தரத்தில் உள்ளது? சஹீஹா அல்லது ளஈஃபா?

      1. வ அலைக்கும் ஸலாம். இந்தச் செய்தி ஹஸன் தரத்தில் வெவ்வேறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்திருப்பதால் இதை ஸஹீஹ் லிஃகைரிஹீ என்று கூறுவர். இன்ஷா அல்லாஹ் இதை தெளிவாக பதிவு செய்கிறோம்.

  2. பதிலளித்தமைக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.

    இமாம் இப்னு ஹஜர் அவர்களின் கூற்றுப்படி பார்த்தால்,

    இந்த செய்தி “ஹஸன் லிதாதிஹீ” என்ற தரத்தில் இருந்து, இதே கருத்தில் இன்னொரு ஹதீஸ் “ஹஸன் லிதாதிஹீ” என்ற தரத்தில் இருக்க வேண்டும் அல்லது

    இந்த செய்தி “ஹஸன் லிதாதிஹீ” என்ற தரத்தில் இருந்து, இதே கருத்தில் இன்னொரு ஹதீஸ் சரியான ஹதீஸின் தரத்தில் இருக்க வேண்டும். அதுதான் “ஸஹீஹ் லிஃகைரிஹீ”.

    அப்படியானால், இதே கருத்தில் சரியான ஹதீஸின் தரத்தில் அமைந்துள்ள செய்தி எதுவும் உள்ளதா?

    இது சம்பந்தமாக எத்தனை ரிவாயத்கள் உள்ளன? அவற்றில் எதெல்லாம் ஏற்றுக்கொள்ளத் தக்கவை என்று ஹதீஸ் எண்களோடு குறிப்பிட்டால் பயனுள்ளதாக இருக்கும்

    1. அனஸ் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள் ஹஸன் தரத்தில் உள்ளவை. இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.

      1. அல்ஹம்துலில்லாஹ். ஹதீஸ் ஆய்வு என்ற மகத்தான பணியை மக்கள் முன் வைப்பதற்கு அல்லாஹ் உங்களுக்கு அதிகமான நற்கூலிகளைத் தரட்டும். அத்துடன் எங்களைப் போன்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்வதற்காக கூடுதல் நன்மையைத் தர அல்லாஹ் போதுமானவன்.

        இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல், திர்மிதீ இமாம் ஹஸன் என்பதுடன் ஃகரீப் போன்ற வார்த்தைகளை இணைத்துக் கூறினால் அதன் பொருளை எப்படி விளங்கிக் கொள்ள வேண்டும்?

        இந்தச் செய்தி இந்த அறிவிப்பாளர் தொடரில் மட்டுமே வந்திருப்பதாக அர்த்தமா?

        ஹஸன் ஃகரீப் என்ற தரத்திலுள்ள ஹதீஸ்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையா?

        1. திர்மிதீ இமாம் ஹஸன் என்பதுடன் ஃகரீப் என்ற வார்த்தையை இணைத்துக் கூறினால் அதன் பொருள், ஹஸன் லிதாதிஹீ ஆகும். இந்த தகவலை அல்பானீ போன்ற அறிஞர்கள் விளக்கியுள்ளனர். (பார்க்க: ளயீஃபா-764)

          ஒரு செய்தியின் கருத்து வேறு நபித்தோழர்கள் வழியாக வந்தால் அதாவது ஷாஹித் இருக்கும் போதும் இவ்வாறு ஹஸன் ஃகரீப் என்று திர்மிதீ இமாம் கூறுவார்.

          ஃகரீப் என்பது இரு வகை. இதை ஃபர்த் முத்லக் என்றும் ஃபர்த் நிஸ்பீ என்றும் சொல்வர். (இதைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்ள தனித்து அறிவித்தல் எனும் கட்டுரையைக் காணவும்) இதனடிப்படையில் அபூஸலமா வழியாக ஓரளவு ஏற்கத்தகுந்த செய்தி இது என்பதால் ஃகரீப் நிஸ்பீ என்ற அடிப்படையில் கூறியுள்ளார்.

          ஹஸன் என்று மட்டும் கூறினால் அதன் பொருள், ஹஸன் லிஃகைரிஹீ ஆகும். ஹஸன் என்பது திர்மிதீ இமாமின் தனி வழக்குச் சொல் ஆகும். (விரிவாக தெரிந்துக் கொள்ள ஹஸன் தர செய்திகள் என்ற கட்டுரையைக் காணவும்)

          1. பொறுமையான உங்கள் விளக்கங்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன் கஸீரன்.

            நீங்கள் குறிப்பிட்ட 2 கட்டுரைகளையும் இன்ஷா அல்லாஹ் படித்துக் கொள்கிறோம்.

            அல்லாஹ் உங்கள் ஆயுளிலும், இது போன்ற நன்மைகளுக்காக செலவிடக்கூடிய உங்கள் நேரத்திலும், உங்கள் இல்மிலும், உங்கள் குடும்பத்தாரிலும் பரக்கத் செய்வானாக! இதற்காக உங்களோடு துணை நிற்கும் அனைவருக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக

  3. அல்ஹம்துலில்லாஹ். தங்களின் துஆக்களுக்கு ஜஸாகல்லாஹு கைரா. இந்தப் பணிக்கு பொருளாதாரத்தை செலவிட்டும், உடல் உழைப்பையும், நேரத்தையும், அறிவையும் பயன்படுத்தும் அனைத்து சகோதரர்களுக்காகவும் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    1. எங்களின் மனப்பூர்வமான துஆக்கள் உங்களுக்கும், உங்களோடு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் என்றும் தொடரும், இன்ஷா அல்லாஹ்.

      இத்துடன் சம்பந்தப்பட்ட இன்னொரு ஹதீஸைத் தேடும்போது (அபூதாவூத்: 2140 – வது ஹதீஸ்), நிறைய விபரங்களை இணைத்துள்ளீர்கள். ஆனால், “ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது” என்று தலைப்பிட்டுள்ளீர்கள். ஆய்வின் முடிவு என்னவென்று சொல்ல முடியுமா?

      அதுபோல், முஸ்னது அஹ்மத்: 12614 – வது ஹதீஸுக்கு “ஹதீஸின் தரம்: விபரம் கீழே” என்று தலைப்பிட்டுள்ளீர்கள். அதில் தமிழ் மொழிபெயர்ப்பு அறவே இல்லை. ஹதீஸின் தரம் பற்றியும் தலைப்பில் குறிப்பிடப்படவில்லை. அதனுடன் நீங்கள் கொடுத்துள்ள எதை கிளிக் செய்தாலும் இதே நிலையில்தான் உள்ளது. தயவுசெய்து ஹதீஸின் தரத்தை தலைப்பில் கொடுத்து, அதன் தமிழ் மொழிபெயர்ப்புகளையும் அதனுடன் இணைத்து உதவ முடியுமா?

      1. அஸ்ஸலாமு அலைக்கும்.

        திர்மிதீ-1159 உடன் தொடர்புடைய செய்திகள் அதிகம் உள்ளன. இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு செய்தியாக ஆய்வு செய்து தகவல் பதிவு செய்கிறோம். அறிவிப்பாளர்கள் பற்றி அறிஞர்கள் கூறும் தகவல்களை பல நூல்களில் பார்த்து நாம் விரிவாக ஆய்வு செய்வதால் காலதாமதம் ஆகும்.

        1. உங்களின் இந்தப் பணிகள் நிச்சயம் சிரமமானதும், கால அவகாசம் அதிகம் தேவைப்படுவதும் என்று தெரிந்தும் உங்களிடம் தொடர்ந்து கேட்பது உங்களைத் தொந்தரவு செய்வது போல் இருக்குமோ என்று தயக்கமாக உள்ளது. இருந்தாலும் அவசியம் கருதி சிலநேரம் இப்படி தொடர்ந்து கேட்பது போல் ஆகிவிடுகிறது. தயவுசெய்து தவறாக எண்ண வேண்டாம். அல்லாஹ் உங்கள் பணிகளை இலகுவாக்கித் தரட்டும். உங்கள் அனைவருக்கும் அதிகமான நற்கூலிகளைத் தரட்டும்.

          மேலே கேட்டிருந்த 2 ஹதீஸ்களில், அபூதாவூத் 2140 – வது ஹதீஸின் ஆய்வுகள் முடிந்துவிட்டால் அதுபற்றிய தரம் மட்டுமாவது பதிவு செய்ய முடியுமா?

          1. அஸ்ஸலாமு அலைக்கும்.

            அபூதாவூத் 2140 செய்தியின் நிலை.

            இதில் இடம்பெறும் ஷரீக் பின் அப்துல்லாஹ் என்பவரின் தர அடிப்படையில் இவர் தனித்து அறிவிக்கும்

            “அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?” எனக் கேட்டார்கள். நான் “மாட்டேன்” என்று கூறினேன்”

            என்ற கருத்தை தவிர மற்றவை சரியென்றே அல்பானீ, ஷுஐப் போன்றவர்கள் கூறியுள்ளனர்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.