தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2140

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

கைஸ் பின் ஸஃத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஈராக்கின்) ஹீரா எனும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். “இவ்வாறு சிரம் பணிவதற்கு அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களே அதிகத் தகுதியுடையவர்கள்” என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன்.

பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நான் ஹீரா எனும் நகருக்குச் சென்றேன். அங்கு மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்” என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?” எனக் கேட்டார்கள். நான் “மாட்டேன்” என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(ஆம்;) அவ்வாறு செய்யாதீர்கள்!. ஒருவர் இன்னொருவருக்கு சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன். ஏனெனில் (அந்தளவிற்கு) அல்லாஹ் கணவனுக்கு செய்யவேண்டிய கடமையை அவள் மீது விதித்துள்ளான்” என்று கூறினார்கள்.

(அபூதாவூத்: 2140)

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، عَنْ شَرِيكٍ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ، قَالَ

أَتَيْتُ الْحِيرَةَ فَرَأَيْتُهُمْ يَسْجُدُونَ لِمَرْزُبَانٍ لَهُمْ فَقُلْتُ: رَسُولُ اللَّهِ أَحَقُّ أَنْ يُسْجَدَ لَهُ، قَالَ: فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: إِنِّي أَتَيْتُ الْحِيرَةَ فَرَأَيْتُهُمْ يَسْجُدُونَ لِمَرْزُبَانٍ لَهُمْ فَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ أَحَقُّ أَنْ نَسْجُدَ لَكَ، قَالَ: «أَرَأَيْتَ لَوْ مَرَرْتَ بِقَبْرِي أَكُنْتَ تَسْجُدُ لَهُ؟» قَالَ: قُلْتُ: لَا، قَالَ: «فَلَا تَفْعَلُوا، لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ النِّسَاءَ أَنْ يَسْجُدْنَ لِأَزْوَاجِهِنَّ لِمَا جَعَلَ اللَّهُ لَهُمْ عَلَيْهِنَّ مِنَ الْحَقِّ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1828.
Abu-Dawood-Shamila-2140.
Abu-Dawood-Alamiah-1828.
Abu-Dawood-JawamiulKalim-1831.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . அம்ர் பின் அவ்ன்

3 . இஸ்ஹாக் பின் யூஸுஃப்-அல்அஸ்ரக்

4 . ஷரீக் பின் அப்துல்லாஹ்-அல்காழீ

5 . ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான்-அபுல்ஹுதைல்

6 . ஆமிர் பின் ஷராஹீல்-அஷ்ஷஅபீ

7 . கைஸ் பின் ஸஃத் (ரலி)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19163-ஷரீக் பின் அப்துல்லாஹ்-அல்காழீ…

  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    , நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவர் தனித்து அறிவித்தால் அது பலமானது அல்ல என்று கூறியுள்ளனர்…

இதில் இடம்பெறும் ஷரீக் பின் அப்துல்லாஹ் என்பவரின் தர அடிப்படையில் இவர் தனித்து அறிவிக்கும்

“அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?” எனக் கேட்டார்கள். நான் “மாட்டேன்” என்று கூறினேன்”

என்ற கருத்தை தவிர மற்றவை சரியென்றே அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் போன்றவர்கள் கூறியுள்ளனர்.

 


الثقات لابن حبان (6/ 444):
شريك بن عبد الله بن الْحَارِث بن أَوْس بن الْحَارِث النَّخعِيّ كنيته أَبُو عبد الله كَانَ مولده بخراسان قَالَ مَنْصُور بن أبي مُزَاحم سَمِعت شَرِيكا يَقُول ولدت ببخارى مقتل قُتَيْبَة بن مُسلم سنة خمس وَتِسْعين ويروي شريك عَن أبي إِسْحَاق وَسَلَمَة بن كهيل روى عَنهُ بن الْمُبَارك وَأهل الْعرَاق وَولى الْقَضَاء بواسط سنة خمسين وَمِائَة ثمَّ ولى الْكُوفَة بعد ذَلِك وَمَات بِالْكُوفَةِ سنة سبع أَو ثَمَان وَسبعين وَمِائَة وَكَانَ فِي آخر أمره يخطئ فِيمَا يروي تغير عَلَيْهِ حفظه ‌فسماع ‌الْمُتَقَدِّمين ‌عَنهُ ‌الَّذين ‌سمعُوا ‌مِنْهُ ‌بواسط ‌لَيْسَ ‌فِيهِ ‌تَخْلِيط ‌مثل يزِيد بن هَارُون وَإِسْحَاق الْأَزْرَق وَسَمَاع الْمُتَأَخِّرين عَنهُ بِالْكُوفَةِ فِيهِ أَوْهَام كَثِيرَة

இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இமாம் கூறுகிறார்:

ஷரீக் பின் அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் பின் அவ்ஸ் பின் ஹாரிஸ் அன்னகஈ. இவரின் புனைப் பெயர் அபூஅப்துல்லாஹ். பிறப்பிடம் குராசான்.

மன்ஸூர் பின் அபூமுஸாஹிம் கூறுகிறார்: ஷரீக் அவர்கள், “நான் புகாராவில் குதைபா பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்கள் கொல்லப்பட்ட ஹிஜ்ரி 95 ஆம் ஆண்டு பிறந்தேன்” என்று குறிப்பிட்டார்.

ஷரீக் அவர்கள் அபூஇஸ்ஹாக், ஸலமா பின் குஹைல் ஆகியோரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
(ரஹ்) மற்றும் ஈராக்கின் அறிஞர்கள் இவரிடமிருந்து அறிவித்துள்ளனர்.


இவர் ஹிஜ்ரி 150 ஆம் ஆண்டு வாஸித் நகரத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்றார். பின்னர் கூஃபாவின் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கூஃபாவில் ஹிஜ்ரி 177 அல்லது 178 ஆம் ஆண்டு காலமானார்.


இவர் கடைசிக் காலத்தில் அறிவித்த ஹதீஸ்களில் தவறுகள் நேர்ந்தன. (இதற்கு காரணம் அப்போது) இவரின் நினைவாற்றல் பாதிக்கப்பட்டிருந்தது. யஸீத் பின் ஹாரூன், இஸ்ஹாக் அல்அஸ்ரக் போன்றவர்கள் வாஸித்தில் இவரிடமிருந்து செவியுற்ற ஹதீஸ்களில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால், கூஃபாவில் அவரிடமிருந்து செவியேற்ற பிந்தைய கால அறிவிப்பாளர்கள் வழியாக வரும் ஹதீஸ்களில் பல தவறுகள் காணப்படுகின்றன.

(நூல்: அஸ்ஸிகாத்-6/444)


تاريخ بغداد (7/ 327 ت بشار):
أخبرنا محمد بن الحسين القطان، قال: أخبرنا دعلج بن أحمد، قال: أخبرنا أحمد بن علي الأبار قال: ‌سألت ‌عبد ‌الحميد ‌بن ‌بيان ‌عن ‌إسحاق ‌الأزرق، ‌وكيف ‌سمع ‌من ‌شريك؟ قال: سمع منه بواسط. قلت له: في أي شيء جاء إلى واسط؟ قال: جاء في كري الأنهار، فأخذ إسحاق كتابه قلت: أيما أكثر سماعا، عن شريك إسحاق أو يزيد بن هارون؟ قال: إسحاق نحو من خمسة آلاف ويزيد نحو من ثلاثة آلاف.

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அலீ-அல்அப்பார் அவர்கள் கூறுகிறார்:

நான் அப்துல் ஹமீது பின் பயான் அவர்களிடம் இஸ்ஹாக் அல்அஸ்ரக் பற்றியும், ஷரீக் பின் அப்துல்லாஹ் அல்காழீ அவர்களிடமிருந்து அவர் எவ்வாறு ஹதீஸ் கேட்டார் என்றும் கேட்டேன். அதற்கு அவர், “வாஸித் நகரில் வைத்து அவர் ஷரீக் அவர்களிடமிருந்து ஹதீஸ் கேட்டார்” என்று குறிப்பிட்டார்.

நான் அவரிடம், “எதற்காக அவர் வாஸித் நகருக்கு வந்தார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவர் கால்வாய்களைப் புதுப்பிப்பதற்காக வந்தார். அப்போது இஸ்ஹாக் அவருடைய நூலை எடுத்துக்கொண்டார்” என்று குறிப்பிட்டார்.

நான், “ஷரீக் அவர்களிடமிருந்து அதிகமாக ஹதீஸ் கேட்டது இஸ்ஹாக்கா அல்லது யஸீத் பின் ஹாரூனா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “இஸ்ஹாக் சுமார் ஐயாயிரம் ஹதீஸ்களும், யஸீத் சுமார் மூவாயிரம் ஹதீஸ்களும் கேட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

(நூல்: தாரீகுபஃக்தாத்-7/327)


تهذيب التهذيب (2/ 165):
‌وقال ‌العجلي: ‌كوفي ‌ثقة، ‌وكان ‌حسن ‌الحديث، ‌وكان ‌أروى ‌الناس ‌عنه ‌إسحاق ‌الأزرق.


 


சிலர் ஷரீக் , ஹுஸைனிடம் செவியேற்றது மூளை குழம்புவதற்கு முன் என்பதால் இந்த செய்தியை ஹஸன் என்று கூறுகிறார்கள்…


 

 


4 . இந்தக் கருத்தில் கைஸ் பின் ஸஅத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரிமீ-1504, அபூதாவூத்-2140, முஸ்னத் பஸ்ஸார்-3747, அல்முஃஜமுல் கபீர்-15309, ஹாகிம்-2763, குப்ரா பைஹகீ-14705, …


மேலும் பார்க்க: திர்மிதீ-1159.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.