தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2140

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2140. கைஸ் பின் ஸஃத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஈராக்கின்) ஹீரா எனும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். “இவ்வாறு சிரம் பணிவதற்கு அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களே அதிகத் தகுதியுடையவர்கள்” என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன்.

பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நான் ஹீரா எனும் நகருக்குச் சென்றேன். அங்கு மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்” என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?” எனக் கேட்டார்கள். நான் “மாட்டேன்” என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(ஆம்;) அவ்வாறு செய்யாதீர்கள்!. ஒருவர் இன்னொருவருக்கு சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன். ஏனெனில் (அந்தளவிற்கு) அல்லாஹ் கணவனுக்கு செய்யவேண்டிய கடமையை அவள் மீது விதித்துள்ளான்” என்று கூறினார்கள்.


حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، عَنْ شَرِيكٍ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ، قَالَ

أَتَيْتُ الْحِيرَةَ فَرَأَيْتُهُمْ يَسْجُدُونَ لِمَرْزُبَانٍ لَهُمْ فَقُلْتُ: رَسُولُ اللَّهِ أَحَقُّ أَنْ يُسْجَدَ لَهُ، قَالَ: فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: إِنِّي أَتَيْتُ الْحِيرَةَ فَرَأَيْتُهُمْ يَسْجُدُونَ لِمَرْزُبَانٍ لَهُمْ فَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ أَحَقُّ أَنْ نَسْجُدَ لَكَ، قَالَ: «أَرَأَيْتَ لَوْ مَرَرْتَ بِقَبْرِي أَكُنْتَ تَسْجُدُ لَهُ؟» قَالَ: قُلْتُ: لَا، قَالَ: «فَلَا تَفْعَلُوا، لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ النِّسَاءَ أَنْ يَسْجُدْنَ لِأَزْوَاجِهِنَّ لِمَا جَعَلَ اللَّهُ لَهُمْ عَلَيْهِنَّ مِنَ الْحَقِّ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1828.
Abu-Dawood-Shamila-2140.
Abu-Dawood-Alamiah-1828.
Abu-Dawood-JawamiulKalim-1831.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . அம்ர் பின் அவ்ன்

3 . இஸ்ஹாக் பின் யூஸுஃப்-அல்அஸ்ரக்

4 . ஷரீக் பின் அப்துல்லாஹ்-அல்காழீ

5 . ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான்-அபுல்ஹுதைல்

6 . ஆமிர் பின் ஷராஹீல்-அஷ்ஷஅபீ

7 . கைஸ் பின் ஸஃத் (ரலி)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19163-ஷரீக் பின் அப்துல்லாஹ்-அல்காழீ…

  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    , நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவர் தனித்து அறிவித்தால் அது பலமானது அல்ல என்று கூறியுள்ளனர்…

இதில் இடம்பெறும் ஷரீக் பின் அப்துல்லாஹ் என்பவரின் தர அடிப்படையில் இவர் தனித்து அறிவிக்கும்

“அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?” எனக் கேட்டார்கள். நான் “மாட்டேன்” என்று கூறினேன்”

என்ற கருத்தை தவிர மற்றவை சரியென்றே அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் போன்றவர்கள் கூறியுள்ளனர்.

 


الثقات لابن حبان (6/ 444):
شريك بن عبد الله بن الْحَارِث بن أَوْس بن الْحَارِث النَّخعِيّ كنيته أَبُو عبد الله كَانَ مولده بخراسان قَالَ مَنْصُور بن أبي مُزَاحم سَمِعت شَرِيكا يَقُول ولدت ببخارى مقتل قُتَيْبَة بن مُسلم سنة خمس وَتِسْعين ويروي شريك عَن أبي إِسْحَاق وَسَلَمَة بن كهيل روى عَنهُ بن الْمُبَارك وَأهل الْعرَاق وَولى الْقَضَاء بواسط سنة خمسين وَمِائَة ثمَّ ولى الْكُوفَة بعد ذَلِك وَمَات بِالْكُوفَةِ سنة سبع أَو ثَمَان وَسبعين وَمِائَة وَكَانَ فِي آخر أمره يخطئ فِيمَا يروي تغير عَلَيْهِ حفظه ‌فسماع ‌الْمُتَقَدِّمين ‌عَنهُ ‌الَّذين ‌سمعُوا ‌مِنْهُ ‌بواسط ‌لَيْسَ ‌فِيهِ ‌تَخْلِيط ‌مثل يزِيد بن هَارُون وَإِسْحَاق الْأَزْرَق وَسَمَاع الْمُتَأَخِّرين عَنهُ بِالْكُوفَةِ فِيهِ أَوْهَام كَثِيرَة

இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இமாம் கூறுகிறார்:

ஷரீக் பின் அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் பின் அவ்ஸ் பின் ஹாரிஸ் அன்னகஈ. இவரின் புனைப் பெயர் அபூஅப்துல்லாஹ். பிறப்பிடம் குராசான்.

மன்ஸூர் பின் அபூமுஸாஹிம் கூறுகிறார்: ஷரீக் அவர்கள், “நான் புகாராவில் குதைபா பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்கள் கொல்லப்பட்ட ஹிஜ்ரி 95 ஆம் ஆண்டு பிறந்தேன்” என்று குறிப்பிட்டார்.

ஷரீக் அவர்கள் அபூஇஸ்ஹாக், ஸலமா பின் குஹைல் ஆகியோரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
(ரஹ்) மற்றும் ஈராக்கின் அறிஞர்கள் இவரிடமிருந்து அறிவித்துள்ளனர்.


இவர் ஹிஜ்ரி 150 ஆம் ஆண்டு வாஸித் நகரத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்றார். பின்னர் கூஃபாவின் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கூஃபாவில் ஹிஜ்ரி 177 அல்லது 178 ஆம் ஆண்டு காலமானார்.


இவர் கடைசிக் காலத்தில் அறிவித்த ஹதீஸ்களில் தவறுகள் நேர்ந்தன. (இதற்கு காரணம் அப்போது) இவரின் நினைவாற்றல் பாதிக்கப்பட்டிருந்தது. யஸீத் பின் ஹாரூன், இஸ்ஹாக் அல்அஸ்ரக் போன்றவர்கள் வாஸித்தில் இவரிடமிருந்து செவியுற்ற ஹதீஸ்களில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால், கூஃபாவில் அவரிடமிருந்து செவியேற்ற பிந்தைய கால அறிவிப்பாளர்கள் வழியாக வரும் ஹதீஸ்களில் பல தவறுகள் காணப்படுகின்றன.

(நூல்: அஸ்ஸிகாத்-6/444)


تاريخ بغداد (7/ 327 ت بشار):
أخبرنا محمد بن الحسين القطان، قال: أخبرنا دعلج بن أحمد، قال: أخبرنا أحمد بن علي الأبار قال: ‌سألت ‌عبد ‌الحميد ‌بن ‌بيان ‌عن ‌إسحاق ‌الأزرق، ‌وكيف ‌سمع ‌من ‌شريك؟ قال: سمع منه بواسط. قلت له: في أي شيء جاء إلى واسط؟ قال: جاء في كري الأنهار، فأخذ إسحاق كتابه قلت: أيما أكثر سماعا، عن شريك إسحاق أو يزيد بن هارون؟ قال: إسحاق نحو من خمسة آلاف ويزيد نحو من ثلاثة آلاف.

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அலீ-அல்அப்பார் அவர்கள் கூறுகிறார்:

நான் அப்துல் ஹமீது பின் பயான் அவர்களிடம் இஸ்ஹாக் அல்அஸ்ரக் பற்றியும், ஷரீக் பின் அப்துல்லாஹ் அல்காழீ அவர்களிடமிருந்து அவர் எவ்வாறு ஹதீஸ் கேட்டார் என்றும் கேட்டேன். அதற்கு அவர், “வாஸித் நகரில் வைத்து அவர் ஷரீக் அவர்களிடமிருந்து ஹதீஸ் கேட்டார்” என்று குறிப்பிட்டார்.

நான் அவரிடம், “எதற்காக அவர் வாஸித் நகருக்கு வந்தார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அவர் கால்வாய்களைப் புதுப்பிப்பதற்காக வந்தார். அப்போது இஸ்ஹாக் அவருடைய நூலை எடுத்துக்கொண்டார்” என்று குறிப்பிட்டார்.

நான், “ஷரீக் அவர்களிடமிருந்து அதிகமாக ஹதீஸ் கேட்டது இஸ்ஹாக்கா அல்லது யஸீத் பின் ஹாரூனா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “இஸ்ஹாக் சுமார் ஐயாயிரம் ஹதீஸ்களும், யஸீத் சுமார் மூவாயிரம் ஹதீஸ்களும் கேட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

(நூல்: தாரீகுபஃக்தாத்-7/327)


تهذيب التهذيب (2/ 165):
‌وقال ‌العجلي: ‌كوفي ‌ثقة، ‌وكان ‌حسن ‌الحديث، ‌وكان ‌أروى ‌الناس ‌عنه ‌إسحاق ‌الأزرق.

…


 


சிலர் ஷரீக் , ஹுஸைனிடம் செவியேற்றது மூளை குழம்புவதற்கு முன் என்பதால் இந்த செய்தியை ஹஸன் என்று கூறுகிறார்கள்…


 

 


4 . இந்தக் கருத்தில் கைஸ் பின் ஸஅத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

…

பார்க்க: தாரிமீ-1504, அபூதாவூத்-2140, முஸ்னத் பஸ்ஸார்-3747, அல்முஃஜமுல் கபீர்-15309, ஹாகிம்-2763, குப்ரா பைஹகீ-14705, …


மேலும் பார்க்க: திர்மிதீ-1159.

அபூதாவூத் இமாம்

அபூதாவூத் இமாம்.


இமாம் அபூதாவூத்

முழுப்பெயர்: சுலைமான் இப்னு அஷ்அஸ் இப்னு இஸ்ஹாக் இப்னு பஷீர் இப்னு ஷதாதல் அஸ்தீல் ஸஜிஸ்தானீ (இதில் சில மாற்றங்களுடனும் பெயர் கூறப்படுகிறது) (சுனன் அபூதாவூத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூதாவூத் அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: சுலைமான்

தந்தை பெயர்: அஷ்அஸ்

பிறந்த ஊர்: சஜிஸ்தான் என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 202ல் ஷஃபான் மாதம்

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானில் உள்ள குராஸான், இராக்கின் கூஃபா போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஷாம், எகிப்து, ஸஜீரா, ஹிஜாஸ், திமிஷ்க், பல்ஹ் இன்னும் இது போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

சுனன் அபூதாவூத்,

அல்மராஸீல்,

அஸ்ஸுஹ்த் போன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார்.

கஃனபீ, அஹ்மத், யஹ்யா இப்னுல்மதீனீ, சயீத் இப்னு சுலைமானுல் வாஸிதிய்யி, சுலைமான் இப்னு ஹர்ப், சுலைமான் இப்னு அப்துர்ரஹ்மானுத் திமிஷ்கீய்யி, யூசுப் இப்னு மூஸா அல்கதான், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

திர்மிதி, அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு தாவூத் இப்னு சுலைம், ஹர்ப் இப்னு இஸ்மாயில் அல்கர்மானீ, ஜகரிய்யா இப்னு யஹ்யா அஸ்ஸாஜி, அப்துர்ரஹ்மான் இப்னு கல்லாது அர்ராமஹுர்முஸி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 275ல் ஷவ்வால் மாதம் 17ல்இறந்தார். அப்போது அவருக்கு 73 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

அம்ர் பின் அவ்ன்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

இஸ்ஹாக் பின் யூஸுஃப்-அல்அஸ்ரக்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஷரீக் பின் அப்துல்லாஹ்-அல்காழீ

شريك بن عبد الله بن الحارث

ஹி-95 – 178 சுமார் 83 வயது.


இயற்பெயர்: ஷரீக் (அல்காழீ)

தந்தை பெயர்: அப்துல்லாஹ் பின் ஹாரிஸ்

குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ், வாஸித் நகர நீதிபதி

ஊர் பெயர்: புகாரா குராஸான், வாஸித், மக்கா, பஸரா, கூஃபா

பிறப்பு: ஹிஜ்ரீ-95 அல்லது 96

இறப்பு: ஹிஜ்ரீ-177 அல்லது 178

கால கட்டம்: 8.


شريك بن عبد الله بن الْحَارِث بن أَوْس بن الْحَارِث النَّخعِيّ كنيته أَبُو عبد الله كَانَ مولده بخراسان قَالَ مَنْصُور بن أبي مُزَاحم سَمِعت شَرِيكا يَقُول ولدت ببخارى مقتل قُتَيْبَة بن مُسلم سنة خمس وَتِسْعين ويروي شريك عَن أبي إِسْحَاق وَسَلَمَة بن كهيل روى عَنهُ بن الْمُبَارك وَأهل الْعرَاق وَولى الْقَضَاء بواسط سنة خمسين وَمِائَة ثمَّ ولى الْكُوفَة بعد ذَلِك وَمَات بِالْكُوفَةِ سنة سبع أَو ثَمَان وَسبعين وَمِائَة وَكَانَ فِي آخر أمره يخطئ فِيمَا يروي تغير عَلَيْهِ حفظه ‌فسماع ‌الْمُتَقَدِّمين ‌عَنهُ ‌الَّذين ‌سمعُوا ‌مِنْهُ ‌بواسط ‌لَيْسَ ‌فِيهِ ‌تَخْلِيط ‌مثل يزِيد بن هَارُون وَإِسْحَاق الْأَزْرَق وَسَمَاع الْمُتَأَخِّرين عَنهُ بِالْكُوفَةِ فِيهِ أَوْهَام كَثِيرَة

ஷரீக் பின் அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் பின் அவ்ஸ் பின் ஹாரிஸ் அன்னகஈ. இவரின் புனைப் பெயர் அபூஅப்துல்லாஹ். பிறப்பிடம் குராசான்.

மன்ஸூர் பின் அபூமுஸாஹிம் கூறுகிறார்: ஷரீக் அவர்கள், “நான் புகாராவில் குதைபா பின் முஸ்லிம் அவர்கள் கொல்லப்பட்ட ஹிஜ்ரி 95 ஆம் ஆண்டு பிறந்தேன்” என்று குறிப்பிட்டார்.

ஷரீக் அவர்கள் அபூஇஸ்ஹாக், ஸலமா பின் குஹைல் ஆகியோரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இப்னுல் முபாரக் (ரஹ்) மற்றும் ஈராக்கின் அறிஞர்கள் இவரிடமிருந்து அறிவித்துள்ளனர்.


இவர் ஹிஜ்ரி 150 ஆம் ஆண்டு வாஸித் நகரத்தின் நீதிபதியாகப் பொறுப்பேற்றார். பின்னர் கூஃபாவின் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கூஃபாவில் ஹிஜ்ரி 177 அல்லது 178 ஆம் ஆண்டு காலமானார்.


இவர் கடைசிக் காலத்தில் அறிவித்த ஹதீஸ்களில் தவறுகள் நேர்ந்தன. (இதற்கு காரணம் அப்போது) இவரின் நினைவாற்றல் பாதிக்கப்பட்டிருந்தது. யஸீத் பின் ஹாரூன், இஸ்ஹாக் அல்அஸ்ரக் போன்றவர்கள் வாஸித்தில் இவரிடமிருந்து செவியுற்ற ஹதீஸ்களில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால், கூஃபாவில் இவரிடமிருந்து செவியேற்ற பிந்தைய கால அறிவிப்பாளர்கள் வழியாக வரும் ஹதீஸ்களில் பல தவறுகள் காணப்படுகின்றன.

(நூல்: அஸ்ஸிகாத்-6/444)


أخبرنا محمد بن الحسين القطان، قال: أخبرنا دعلج بن أحمد، قال: أخبرنا أحمد بن علي الأبار قال: ‌سألت ‌عبد ‌الحميد ‌بن ‌بيان ‌عن ‌إسحاق ‌الأزرق، ‌وكيف ‌سمع ‌من ‌شريك؟ قال: سمع منه بواسط. قلت له: في أي شيء جاء إلى واسط؟ قال: جاء في كري الأنهار، فأخذ إسحاق كتابه قلت: أيما أكثر سماعا، عن شريك إسحاق أو يزيد بن هارون؟ قال: إسحاق نحو من خمسة آلاف ويزيد نحو من ثلاثة آلاف.

நான் அப்துல் ஹமீது பின் பயான் அவர்களிடம் இஸ்ஹாக் அல்அஸ்ரக் பற்றியும், ஷரீக் பின் அப்துல்லாஹ் அல்காழீ அவர்களிடமிருந்து அவர் எவ்வாறு ஹதீஸ் கேட்டார் என்றும் கேட்டேன். அதற்கு அவர், "வாஸித் நகரில் வைத்து அவர் ஷரீக் அவர்களிடமிருந்து ஹதீஸ் கேட்டார்" என்று குறிப்பிட்டார்.

நான் அவரிடம், "எதற்காக அவர் வாஸித் நகருக்கு வந்தார்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "அவர் கால்வாய்களைப் புதுப்பிப்பதற்காக வந்தார். அப்போது இஸ்ஹாக் அவருடைய நூலை எடுத்துக்கொண்டார்" என்று குறிப்பிட்டார்.

நான், "ஷரீக் அவர்களிடமிருந்து அதிகமாக ஹதீஸ் கேட்டது இஸ்ஹாக்கா அல்லது யஸீத் பின் ஹாருனா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இஸ்ஹாக் சுமார் ஐயாயிரம் ஹதீஸ்களும், யஸீத் சுமார் மூவாயிரம் ஹதீஸ்களும் கேட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

(நூல்: தாரீகுபஃக்தாத்-7/327)


‌وقال ‌العجلي: ‌كوفي ‌ثقة، ‌وكان ‌حسن ‌الحديث، ‌وكان ‌أروى ‌الناس ‌عنه ‌إسحاق ‌الأزرق.

இவரைப் பற்றி இஜ்லீ அவர்கள், "இவர் கூஃபாவைச் சேர்ந்த நம்பகமான அறிவிப்பாளர். இவரின் செய்திகள் நல்லவை. மற்றவர்களை விட இஸ்ஹாக் அல்அஸ்ரக் அவர்கள் இவரிடமிருந்து அதிக ஹதீஸ்களை அறிவித்துள்ளார்" என்று கூறியுள்ளார்.

(நூல்: ... தஹ்தீபுத் தஹ்தீப்-2/165)


புகாரி அவர்கள் இவர் இடம்பெற்ற ஒரு செய்தியை ஒரு இடத்தில் தஃலீக்காக பதிவு செய்துள்ளார். பார்க்க: புகாரி-1250.

முஸ்லிம் அவர்கள் சில இடங்களில் இவரின் செய்தியை துணைச் சான்றாக பதிவு செய்துள்ளார். மேலும் ஸுனன் நூல்களின் ஆசிரியர்களும் இவரின் சில செய்திகளை பதிவு செய்துள்ளனர்.

இவரைப் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ள கருத்தின் படி இவரின் செய்திகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

இவைகளில் வேறு விமர்சனம் இல்லாவிட்டால் ஏற்கலாம்.

இதில் சரியான ஹதீஸ்களும் உள்ளன. பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. இவை குறித்து ஒரு பொதுவான சட்டத்தைக் கூறமுடியாது. இவற்றுக்குச் சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்; இல்லையெனில் ஏற்றுக் கொள்ளப்படாது.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் இவரின் அறிவிப்புகளில் அதிகம் தவறு ஏற்பட்டதாக சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். இந்த வகை செய்திகளை எழுதிக் கொள்ளலாம். ஆனால் இவைகளை தனி ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக்கூடாது. இவரின் செய்தியைப் போன்று மற்ற பலமானவர்கள் அறிவித்தால் இவரின் செய்தியை ஹஸன் தரம் என்று முடிவு செய்யலாம்.


1 - شريك بن عبدالله بن أبي نمر، أبو عبدالله المدني، من رجال البخاري ومسلم، ثقة له بعض الأوهام، ومن ذلك أوهامه في حديث الإسراء والمعراج في صحيح البخاري

1 - ما حدث به من كتابه فهو مقبول ومن أصح حديثه.

2 - ما حدث به من حفظه قبل أن يتولى القضاء، فمنه ماهوصحيح وماهو ضعيف، فلايحكم عليه بحكم عام إن استقام ووجد ما يشهد له قبل وإلا فلا.

3 - ما حدث به من حفظه بعد أن يتولى القضاء فهو مردود فيكتب حديثه ولايحتج به.

ஹுஸைன் பின் அப்துர்ரஹ்மான்-அபுல்ஹுதைல்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஆமிர் பின் ஷராஹீல்-அஷ்ஷஅபீ

عامر بن شراحيل-الشعبي

இறப்பு: ஹி-103 அல்லது 104-109.

தரம்: பலமானவர்.


இயற்பெயர்: ஆமிர்

தந்தை பெயர்: ஷராஹீல்

வமிசம்: ஷஅபீ, ஹிம்யரீ, கூஃபீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅம்ர்

ஊர் பெயர்: கூஃபா

பயணம் செய்த ஊர்கள்: மதீனா, நைஸாபூர்.

பிறப்பு: ஹிஜ்ரி-19 அல்லது 20.

இறப்பு: ஹிஜ்ரி-103 அல்லது 104 முதல் 109 க்குள்.

கால கட்டம்: 3.


ஆமிர் அஷ்ஷஅபீ அவர்கள் பிறந்த வருடம்

நான் ஜலூலா போர் நடைபெற்ற வருடம் (ஹிஜ்ரீ 16 இல்) பிறந்தேன் என்று கூறியதாக இப்னு உயைனா அறிவித்துள்ளார். என்றாலும் இதில் மிகப் பலவீனமானவரான ஸரிய்யு பின் இஸ்மாயீல் இடம்பெற்றுள்ளார் என்பதால் இது சரியான கருத்தல்ல.

ஹிஜ்ரீ 19, 20 , 21 , 31 இல் பிறந்தார் என்று வரலாற்று நூல்களில் பலவாறு கூறப்பட்டுள்ளது. இப்னு ஹஸ்ம் அவர்கள், உமர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட பிறகே இவர் பிறந்தார் என்று கூறியுள்ளார். இதன்படி இவர் ஹிஜ்ரீ 23 இல் பிறந்தார் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

அதிகமானோர் ஹிஜ்ரீ 19 என்று கூறியிருப்பதால் சிலர் இவரின் பிறப்பு ஹிஜ்ரீ 19 தான் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆமிர் அஷ்ஷஅபீ அவர்கள் இறந்த வருடம்

இவர் ஹிஜ்ரீ 104 இல் இருந்து 110 க்குள் உள்ள வருடங்களை குறிப்பிட்டு இவற்றில் இறந்தார் என்று பலவாறு வரலாற்று நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இவர் ஹிஜ்ரீ 103 அல்லது 104 இல், தனது 82 வது வயதில் இறந்தார் என்று தஹபீ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்கள்: தாரீகுல் இஸ்லாம்-3/70, அல்காஷிஃப்-3/59...)


ஆமிர் அவர்கள் கூஃபாவாசி ஆவார். இவர் மதீனாவிற்கு சென்றது ஹிஜ்ரீ 66 ல் தான். கூஃபாவின் ஆட்சியாளர் முக்தாரிடம் ஏற்பட்ட பிரச்சனையால் தான் ஆமிர் அவர்கள் மதீனாவிற்கு சென்றார். இது நடந்தது ஹிஜ்ரீ 66 அல்லது 65 தான். உம்மு ஸலமா (ரலி) அவர்கள் மரணித்த வருடம் பற்றி ஹிஜ்ரீ 59 அல்லது ஹிஜ்ரீ 61 அல்லது ஹிஜ்ரீ 62, 63 என்றும் வரலாற்றுத் தகவல் உள்ளது. இதன்படி ஆமிர் அஷ்ஷபீ அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்றும் முடிவு செய்யலாம்...

அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் சில செய்திகளை ஷஅபீ கேட்டுள்ளார். சில செய்திகளை வேறு அறிவிப்பாளர் வழியாக கேட்டுள்ளார். அபூஹுரைரா (ரலி) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு முன்பே மரணித்தவர் ஆவார். இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சந்திப்பு, பயணம் நேரத்தில் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு பிறகு மரணித்த அபூஸயீத் (ரலி) அவர்களிடம் ஷஅபீ அவர்கள் கேட்கவில்லை என்றிருக்கும்போது உம்மு ஸலமா (ரலி) அவர்களிடமும் கேட்கவில்லை என்று கருத்துக்கே சிலர் முன்னுரிமை தருகின்றனர்.


2321 - الشّعبِيّ سمع من ثَمَانِيَة وَأَرْبَعين من أَصْحَاب النَّبِي صلى الله عليه وسلم وَالشعْبِيّ أكبر من أبي إِسْحَاق السبيعِي بِسنتَيْنِ وَأَبُو إِسْحَاق أكبر من عبد الْملك بن عُمَيْر بِسنتَيْنِ ثَنَا أَبُو مُسلم حَدثنِي أبي قَالَ مُرْسل الشّعبِيّ صَحِيح لَا يكَاد يُرْسل إِلَّا صَحِيحا أهل الْيمن أرق قوم حَدثنَا أَبُو مُسلم قَالَ سَمِعت أبي أَحْمد يَقُول سَمِعت أبي عبد الله يَقُول قَالَ الشّعبِيّ لِأَن أصلى وَأَنا جنب أحب إِلَيّ من أَن أُعِيد للشَّيْطَان وضُوءًا

ஷஅபீ அவர்கள் 48 நபித்தோழர்களிடம் ஹதீஸ்களைக் கேட்டுள்ளார். இவரின் முர்ஸலான செய்திகளும் சரியானவைகளே என்று இஜ்லீ இமாம் கூறியுள்ளார்.

(நூல்: மஃரிஃபதுஸ் ஸிகாத்-அஸ்ஸிகாத்-இஜ்லீ-751 (2321, 2/446)

என்றாலும் வேறு சில அறிஞர்கள் இவரின் முர்ஸலான செய்திகளையும் பலவீனமானவை என்றே முடிவு செய்கின்றனர்.

கைஸ் பின் ஸஃத் (ரலி)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.