தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-21986

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

முஆத் (ரலி) அவர்கள் யமனில் இருந்து திரும்ப வந்த போது நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! யமனில் உள்ளவர்களில் சிலர் சிலருக்கு ஸஜ்தா செய்வதை பார்த்தேன். எனவே நாங்கள் உங்களுக்கு ஸஜ்தா செய்யலாமா என்று கேட்டார்கள்,

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தாச் செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால் மனைவியை கணவனுக்கு ஸஜ்தா செய்ய அனுமதித்திருப்பேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 21986)

حَدِيثُ مُعَاذِ بْنِ جَبَلٍ

(حدثنا عبد الله، حدثني أبى، فِي سَنَةِ ثَمَانٍ وَعِشْرِينَ وَمِائَتَيْنِ،) حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي ظَبْيَانَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ:

أَنَّهُ لَمَّا رَجَعَ مِنَ الْيَمَنِ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، رَأَيْتُ رِجَالًا بِالْيَمَنِ يَسْجُدُ بَعْضُهُمْ لِبَعْضٍ، أَفَلَا نَسْجُدُ لَكَ؟ قَالَ: «لَوْ كُنْتُ آمِرًا بَشَرًا يَسْجُدُ لِبَشَرٍ، لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-21986.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21426.




இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் حصين بن جندب بن عمرو அபூ ளப்யான் முஆத் (ரலி) அவர்களை சந்திக்கவில்லை.


وقال ابن حزم : لم يلق معاذا ، ولا أدركه
تهذيب التهذيب: (1 / 441)

ஹதீஸின் கருத்தும் வரலாற்று செய்திக்கு மாற்றமாக உள்ளது. முஆத் (ரலி) அவர்கள் யமனுக்கு சென்று திரும்ப வந்தது அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது தான், முஆத் (ரலி) யமனில் இருக்கும்போதே நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்..

4 . இந்தக் கருத்தில் முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அஃமஷ் —> அபூளப்யான் —> முஆத் பின் ஜபல் (ரலி)

பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-8785 , அஹ்மத்-21986 , அல்முஃஜமுல் கபீர்-373 ,

  • அபூளப்யான் —> அன்ஸாரிகளில் ஒரு மனிதர் —> முஆத் பின் ஜபல் (ரலி)

பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-17127 , அஹ்மத்-21987 ,

மேலும் பார்க்க : திர்மிதீ-1159 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.