நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே, ‘ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு; இறைவா! என்னை மன்னித்து விடு)’ என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள் என ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
அப்போது (ஹுதைஃபா (ரலி) அவர்களிடம்) அப்துல்லாஹ்வே நீங்கள் கூறுவீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள் நான் சில நேரம் கூறுவேன். சில நேரம் கூறாமல் இருப்பேன்.” என்று பதிலளித்தார்கள்.
(ஸுனன் தாரிமீ: 1363)أَخْبَرَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنِ الْعَلَاءِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ طَلْحَةَ بْنِ يَزِيدَ الْأَنْصَارِيِّ، عَنْ حُذَيْفَةَ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: «رَبِّ اغْفِرْ لِي»
فَقِيلَ لِعَبْدِ اللَّهِ: تَقُولُ هَذَا؟ قَالَ: رُبَّمَا قُلْتُ، وَرُبَّمَا سَكَتُّ
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1363.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1294.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் தல்ஹா பின் யஸீத், ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் நேரடியாக கேட்கவில்லை. இடையில் ஒரு அறிவிப்பாளர் விடப்பட்டுள்ளார். எனவே இது தொடர்பறுந்த செய்தி.
هذا الحديث عندي مرسل ، وطلحة بن يزيد لا أعلمه سمع من حذيفة شيئا ، وغير العلاء بن المسيب قال في هذا الحديث : عن طلحة ، عن رجل عن حذيفة
سنن النسائي: (1 / 355)
வேறு அறிவிப்பாளர்தொடரில் விடுபட்ட அறிவிப்பாளர் கூறப்பட்டுள்ளது…
மேலும் பார்க்க: இப்னு மாஜா-897 .
சமீப விமர்சனங்கள்