தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4525

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ஆயிஷா(ரலி), ‘அல்லாஹ் காப்பாற்றட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ், தன் தூதர் எவருக்கும் ஏதேனும் ஒரு வாக்குறுதி அளித்தால் அது தம் இறப்புக்கு முன் நடந்தே தீரும் என அத்தூதர் அறியாமல் இருந்ததில்லை. ஆனால், இறைத் தூதர்களுக்குத் தொடர்ந்து சோதனைகள் வந்துகொண்டேயிருந்தன. எந்த அளவிற்கென்றால், தம்முடன் இருப்பவர்கள் தம்மைப் பொய்ப்பிக்க முற்படுவார்களோ என அந்த இறைத் தூதர்கள் அஞ்சும் அளவிற்கு அவை தொடர்ந்து வந்தன’ என்று கூறினார்கள்.
மேலும், ஆயிஷா(ரலி), ‘வழன்னூ அன்னஹும் கத் குஃத்திபூ’ என்று (குஃதிபூ என்று லேசாகச் சொல்லாமல் ‘குஃத்திபூ’ என்று) அழுத்தம் கொடுத்து ஓதி வந்தார்கள்.
Book :65

(புகாரி: 4525)

فَقَالَ : قَالَتْ عَائِشَةُ

«مَعَاذَ اللَّهِ وَاللَّهِ مَا وَعَدَ اللَّهُ رَسُولَهُ مِنْ شَيْءٍ قَطُّ إِلَّا عَلِمَ أَنَّهُ كَائِنٌ قَبْلَ أَنْ يَمُوتَ، وَلَكِنْ لَمْ يَزَلِ البَلاَءُ بِالرُّسُلِ، حَتَّى خَافُوا أَنْ يَكُونَ مَنْ مَعَهُمْ يُكَذِّبُونَهُمْ» فَكَانَتْ تَقْرَؤُهَا: (وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِّبُوا) مُثَقَّلَةً





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.