பாடம் : 53 மணக்கொடை (மஹ்ர்) நிர்ணயிக்கப்படாத பெண்ணுக்கு உதவித் தொகை (முத்ஆ) வழங்குதல். ஏனெனில் உயர்வான அல்லாஹ் கூறுகின்றான்: பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மணக்கொடையை நிர்ணயிப்பதற்கு முன் தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. (இந்நிலையில்) வசதியுள்ளவர் தன் தகுதிக்கேற்றவாறும், ஏழை தன் தகுதிக்கேற்றவாறும் அவர்களுக்குப் பயனுள்ள ஏதேனும் பொருட்களை (உதவித் தொகையை) நல்ல முறையில் வழங்கிட வேண்டும். (இது) நல்லோர் மீது கடமை யாகும். (2:236, 237) மேலும், மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்களுக்கு (கணவனிடமிருந்து) முறையான பராமரிப்புப் பெற உரிமையுண்டு. (இது) தீமையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வோர் மீது கடமையாகும். இவ்வாறே அல்லாஹ் தன் வசனங்களை, நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு விளக்கிக் காட்டு கின்றான். (2:241, 242) சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்யப்பட்ட பெண்ணை, அவளுடைய கணவர் தலாக் சொன்ன போது உதவித் தொகை (முத்ஆ) வழங்கிடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை.106
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த அந்தத் தம்பதியரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர்’ என்று கூறிவிட்டு, (கணவரான உவைமிரைப் பார்த்து), ‘இனி அவளின் மீது உமக்கு எந்த அதிகாரமும் கிடையாது’ என்று கூறினார்கள்.
அதற்கு அவர், ‘இறைத்தூதர் அவர்களே! (அவளுக்கு நான் மணக்கொடையாக அளித்திருந்த) என்னுடைய பொருள் (என்னாவது)?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘உமக்கு (அந்த)ப் பொருள் கிடைக்காது. நீர் அவளின் மீது உண்மை(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், அவளுடைய கற்பை நீர் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாம்விடும். நீர் அவளின் மீது பொய்(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், (அவளை அனுபவித்துக்கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தினால்) அப்பொருள் உம்மைவிட்டு வெகுதொலைவில் உள்ளது’ என்று கூறினார்கள். 107
Book : 68
(புகாரி: 5350)بَابُ المُتْعَةِ لِلَّتِي لَمْ يُفْرَضْ لَهَا
لِقَوْلِهِ تَعَالَى: {لاَ جُنَاحَ عَلَيْكُمْ إِنْ طَلَّقْتُمُ النِّسَاءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ، أَوْ تَفْرِضُوا لَهُنَّ فَرِيضَةً} [البقرة: 236]- إِلَى قَوْلِهِ – {إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ} [البقرة: 110] وَقَوْلِهِ: {وَلِلْمُطَلَّقَاتِ مَتَاعٌ [ص:62] بِالْمَعْرُوفِ، حَقًّا عَلَى المُتَّقِينَ، كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ} [البقرة: 242] وَلَمْ يَذْكُرِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المُلاَعَنَةِ مُتْعَةً حِينَ طَلَّقَهَا زَوْجُهَا
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلْمُتَلاَعِنَيْنِ: «حِسَابُكُمَا عَلَى اللَّهِ، أَحَدُكُمَا كَاذِبٌ، لاَ سَبِيلَ لَكَ عَلَيْهَا» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَالِي؟ قَالَ: «لاَ مَالَ لَكَ، إِنْ كُنْتَ صَدَقْتَ عَلَيْهَا، فَهُوَ بِمَا اسْتَحْلَلْتَ مِنْ فَرْجِهَا، وَإِنْ كُنْتَ كَذَبْتَ عَلَيْهَا، فَذَاكَ أَبْعَدُ وَأَبْعَدُ لَكَ مِنْهَا»
சமீப விமர்சனங்கள்