தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5461

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 56 உணவு உண்டுவிட்டு (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றவர் (பசியைப்) பொறுத்துக் கொள்ளும் நோன்பாளியைப் போன்ற வராவார். இது குறித்து நபி (ஸல்) அவர்களிடமி ருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.75 பாடம் : 57 விருந்துக்கு அழைக்கப்படும் ஒருவர் தம்முடன் மற்றவரும் வரலாமா என (அனுமதி) கேட்பது. அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் (நல்வழியில் சம்பாதிப்பது குறித்து) சந்தேகம் கொள்ளப்படாதவராக இருந்தால், அவரிடம் நீ செல்லும் போது அவர் (அளிக்கும்) உணவை நீ உண்ணலாம்; அவர் (வழங்கும்) பானத்தை நீ பருகலாம்.

 அபூ மஸ்வூத் அல்அன்சாரி(ரலி) கூறினார்

அபூ ஷுஐப் எனும் குறிப்புப் பெயரால் அழைக்கப்படும் ஒருவர் அன்சாரிகளில் இருந்தார். அவருக்கு இறைச்சி விற்கும் பணியாளர் ஒருவர் இருந்தார். (ஒருமுறை) அபூ ஷுஐப்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நபியவர்கள் தம் தோழர்களுடன் இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகத்தில் பசியின் வாட்டத்தைக் கண்டார். உடனே இறைச்சிவிற்கும் தம் பணியாளிடம் சென்று, ‘ஐந்து பேருக்குப் போதுமான உணவொன்றை எனக்காகத் தயார் செய். நான் அந்த ஐந்து பேரில் ஒருவராக நபி(ஸல்) அவர்களை அழைக்கக்கூடும்’ என்று கூறினார். உடனே அந்தப் பணியாளர் அவருக்காகச் சிறிய அளவில் ஓர் உணவைத் தயாரித்தார். பிறகு அபூ ஷுஐப்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களை (உணவுண்ண) அழைத்தார்கள். அப்போது நபியவர்களைப் பின்தொடர்ந்து மற்றொருவரும் வந்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் ‘அபூ ஷுஐபே! ஒருவர் எம்மைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். நீங்கள் நினைத்தால் அவருக்கும் (நம்மோடு உணவருந்த) அனுமதியளிக்கலாம்; நீங்கள் நினைத்தால் அவரைவிட்டுவிடலாம்’ என்று கூறினார்கள். அதற்கு அபூ ஷுஐப்(ரலி), ‘(அவரைத் திருப்பி அனுப்ப) வேண்டாம். நான் அவருக்கு அனுமதியளித்துவிட்டேன்’ என்று கூறினார்கள்.76

Book : 70

(புகாரி: 5461)

بَابٌ: الطَّاعِمُ الشَّاكِرُ مِثْلُ الصَّائِمِ الصَّابِرِ

فِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

بَابُ الرَّجُلِ يُدْعَى إِلَى طَعَامٍ فَيَقُولُ: وَهَذَا مَعِي

وَقَالَ أَنَسٌ: «إِذَا دَخَلْتَ عَلَى مُسْلِمٍ لاَ يُتَّهَمُ، فَكُلْ مِنْ طَعَامِهِ وَاشْرَبْ مِنْ شَرَابِهِ»

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا شَقِيقٌ، حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ الأَنْصَارِيُّ، قَالَ

كَانَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يُكْنَى أَبَا شُعَيْبٍ، وَكَانَ لَهُ غُلاَمٌ لَحَّامٌ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي أَصْحَابِهِ، فَعَرَفَ الجُوعَ فِي وَجْهِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَهَبَ إِلَى غُلاَمِهِ اللَّحَّامِ، فَقَالَ: اصْنَعْ لِي طَعَامًا يَكْفِي خَمْسَةً، لَعَلِّي أَدْعُو النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَامِسَ خَمْسَةٍ، فَصَنَعَ لَهُ طُعَيِّمًا، ثُمَّ أَتَاهُ فَدَعَاهُ، فَتَبِعَهُمْ رَجُلٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَبَا شُعَيْبٍ، إِنَّ رَجُلًا  تَبِعَنَا، فَإِنْ شِئْتَ أَذِنْتَ لَهُ، وَإِنْ شِئْتَ تَرَكْتَهُ» قَالَ: لاَ، بَلْ أَذِنْتُ لَهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.